சமீபத்தில், செயற்கை நுண்ணறிவால்-இயங்கும் செயலியான ஆதி வாணியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தப் பயன்பாடு எதைப் பற்றியது? அரசாங்கத்தின் செயற்கைநுண்ணறிவு-உந்துதல் முயற்சிகள் என்ன?
பழங்குடியின மொழிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகளுக்கு அடித்தளமாக செயல்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அடிப்படையிலான மொழிபெயர்ப்புக் கருவியான ‘ஆதி வாணி’யின் பீட்டா பதிப்பை பழங்குடியினர் விவகார அமைச்சகம் திங்களன்று வெளியிட்டது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பிற அரசாங்க முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. செயற்கை நுண்ணறிவு மற்றும் பழங்குடி மொழிகளில் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் முயற்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த செயலி, இந்தி மற்றும் ஆங்கிலத்தை பழங்குடி மொழிகளுக்கும், அதற்கு நேர்மாறாகவும் மொழிபெயர்க்கும். மேலும், இந்த மொழிகளை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. இது ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேகாலயாவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்-பிலானி, நயா ராய்பூர்-இந்திய தொழில் நுட்பக் கழகம் மற்றும் டெல்லி-இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் தலைமையிலான கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டது.
3. இந்த செயலி வெள்ளிக்கிழமை முதல் கூகுள் ஆப் ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கும். மேலும், ஆரம்பத்தில் பரவலாகப் பேசப்படும் பழங்குடி மொழிகளான பிலி, கோண்டி, சந்தாலி மற்றும் முண்டாரி ஆகியவற்றுக்கான மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கும்.
பிலி என்பது மிகவும் பரவலாகப் பேசப்படும் திட்டமிடப்படாத மொழியாகும். மேலும், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.
4. அதைத் தொடர்ந்து, ஒடிசாவில் ஆதிக்கம் செலுத்தும் குய் மற்றும் மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சில பகுதிகளில் பேசப்படும் காரோ மொழிக்கான மொழிபெயர்ப்பையும் வழங்கும்.
5. இந்த செயலி பழங்குடி மொழி முதன்மை வகுப்புகளையும் ஒருங்கிணைத்துள்ளது. இது அவர்களின் தாய்மொழியில் அடிப்படை கற்றலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Educational Research and Training Council (NCERT)) மூலம் கல்வி அமைச்சகம் மற்றும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்துடன் இணைந்து, 89 பழங்குடி மொழிகள் உட்பட 117 மொழிகளுக்கான முதன்மை வகுப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில முதன்மை வகுப்புகள் சந்தாலி, வார்லி, பாவ்ரி ஆகிய மொழிகளில் உள்ளன.
6. ஆதி கர்மயோகி அபியான் (Adi Karmayogi Abhiyan), அடிமட்ட பழங்குடியினரின் தலைமைப் பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆதி வாணி செயலியை பழங்குடியின சமூகங்களில் பிரபலப்படுத்வத்தை நோக்கமாக கொண்டுள்ளது
7. குறிப்பிடத்தக்க வகையில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பட்டியல் பழங்குடியினர்களின் மக்கள் தொகை 10.45 கோடியாகும். மேலும், இது 461 பழங்குடி மொழிகளின் தாயகமாக உள்ளது. 71 தனித்துவமான பழங்குடியினர் தாய்மொழிகள் உள்ளன. சுமார் 82 மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் (vulnerable) உள்ளன. அவற்றில் 42 மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் (critically endangered) உள்ளன.
பழங்குடியினர்களுக்கான சமீபத்திய நலத்திட்டங்கள்
பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)): 2023ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடி பெருமை தினம் (Janjatiya Gaurav Divas) நவம்பர் 15 அன்று ஜார்கண்டின் குந்தியில் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரை (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) இலக்காகக் கொண்டு PM JANMAN திட்டத்தை தொடங்கினார்.
• இந்தக் முன்முயற்சித் திட்டத்தின் கீழ், ஒன்பது அமைச்சகங்கள்பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா, பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா மற்றும் ஜல் ஜீவன் திட்டம் போன்ற 11 முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும்.
தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA)): இது 17 துறை அமைச்சகங்களை ஒன்றிணைத்து, நலத்திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகத் தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளின் போது பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத்திடம் தொடங்கப்பட்டது.
• இந்தத் திட்டத்திற்கு காலனித்துவ எதிர்ப்பு பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பெயரால் தர்தி ஆபா (பூமியின் தந்தை) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், இத்திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.79,156 கோடி மத்தியப் பங்காக ரூ.56,333 கோடியும், மாநிலப் பங்காக ரூ.22,823 கோடியும் ஒதுக்கப்பட்டது.
பிற AI அடிப்படையிலான அரசு முயற்சிகள்
1. BharatGen: இது ஒரு முன்னோடியான உருவாக்க செயற்கை நுண்ணறிவின் முயற்சியாகும். இது மொழி, பேச்சு மற்றும் கணினி பார்வையில் அடிப்படை மாதிரிகளின் தொகுப்பை நிறுவுவதன் மூலம் பொது சேவை வழங்கலை மாற்றுவதையும் குடிமக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- BharatGen இந்தியாவின் சமூக-கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டு, ஒரு பொதுப் பயன்பாடாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மாதிரிகள் மற்றும் பயன்பாடுகளை வழங்கும்.
சமூக நேர்மை, கலாச்சார பாதுகாப்பு மற்றும் மொழியியல் வகை போன்ற இந்தியாவின் பெரிய கவலைகளை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் சென்றடைகிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
- இந்தியாவுக்கென பிரத்தியேகமாக உள்ள அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் BharatGen ஆத்மநிர்பார் பாரத் இலக்குடன் இணைகிறது. இது உரை மற்றும் பேச்சு இரண்டையும் ஆதரிக்கும். இந்தியாவின் தனித்துவமான மொழியியல் சூழலைப் பற்றிய தகவல்களை உறுதி செய்யும்.
2. பாஷினி: தேசிய மொழி தொழில்நுட்ப இயக்கத்தின் (the National Language Technology Mission) கீழ் பிரதமர் நரேந்திர மோடியால் ஜூலை 2022-ல் தொடங்கப்பட்டது. பாஷினி என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்புக் கருவியாகும்.
இது மொழிகளுக்கான தேசிய பொது டிஜிட்டல் தளத்தை நிறுவுவதற்கும் இந்திய மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் அளவை அதிகரிப்பதற்கும் இந்திய மொழிகளின் நிகழ்நேர மொழிபெயர்ப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
— மொழியியல் தடைகளை உடைத்து, டிஜிட்டல் சேவைகளை மக்கள் எளிதாக அணுகுவதற்கு 22 திட்டமிடப்பட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
— பாஷினி திட்டம் பல மொழி ஒருங்கிணைப்புடன் நிர்வாகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒருங்கிணைக்கவும், தேசிய ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கும் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஏற்று மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. சபாசார்: இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, திரிபுராவில் ‘சபாசார்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு கருவி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது. ‘சபாசார்’ கிராம சபை ஒளி மற்றும் ஒலிப் பதிவுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட கூட்ட நடவடிக்கைகளை உருவாக்க AI-இன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
— இது நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்களின் நடவடிக்கைகளில் ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்தும். பஞ்சாயத்து அலுவலர்கள் தங்கள் e-GramSwaraj உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி ஒளி/ஒலிப் பதிவுகளை ‘சபாசார்’-ல் பதிவேற்றலாம்.
- ‘சபாசார்’ பாஷினியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி ஒரு வீடியோ அல்லது ஆடியோவிலிருந்து ஒலிப்புக்கேற்ப எழுத்துமுறையை (transcription) உருவாக்குகிறது, அதை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டு மொழியில் மொழிபெயர்த்து, சுருக்கத்தை தயார் செய்கிறது. இது ஆங்கிலத்துடன் கூடுதலாக ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜராத்தி போன்ற அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் டிரான்ஸ்கிரிப்ஷனை செயல்படுத்துகிறது.
4. Chitralekha: இது இயந்திர மொழி (Machine language) மாதிரி ஆதரவைப் பயன்படுத்தி பல்வேறு இந்திய மொழிகளில் வீடியோ வசன வரிகளை இடுவதற்கான ஒரு திறந்த மூல தளமாகும்.
இது பல உள்ளீட்டு மூலங்கள், நகலெடுத்தல் (transcription) மூலம் உருவாக்கும் செயல்முறை மற்றும் குரல் ஓவர் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகிறது.