தமிழ் நாடு, தனது வளர்ச்சிக்கான விருப்பங்களை நடைமுறைச் செயல்களுடன் பொருத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநிலத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. ₹6.64 லட்சம் கோடி முதலீடு செய்ய தொழில்துறை தலைவர்கள் சம்மதித்து இதை சாதித்துள்ளனர். இது, இரண்டு நாள் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் (GIM 2024 ) போது கையொப்பமிடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memoranda of Understanding (MoU)) மூலம் செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு எதிர்பார்க்கிறது. இவர்களில் 14.54 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை விட 2024 ஆம் ஆண்டு தமிழ் நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு மிகவும் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. பசுமை ஆற்றல் (green energy), மின்சார வாகனங்கள் (e-vehicles), தோல் அல்லாத பாதணிகள் (non-leather footwear), ஆட்டோமொபைல்கள் (automobiles), மேம்பட்ட மின்னணு உற்பத்தி (advanced electronic manufacturing), பாதுகாப்பு (defense), விண்வெளி (aerospace) மற்றும் நன்கு நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (Information Technology) மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் (digital services) ஆகியவை இதில் அடங்கும். முக்கியமாக, இந்த முதலீடுகள் தமிழகம் முழுவதையும் உள்ளடக்கியது. அவை வளர்ச்சியடைந்த சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் மட்டுமல்லாமல், தென் பகுதிகளையும் உள்ளடக்கியது.
தமிழ்நாட்டின் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் சமநிலையான பிராந்திய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏற்கனவே நெரிசல் மிகுந்த நகர்ப்புற மையங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதைக் குறைக்கவும் இது உதவும். தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 இல் ஒன்பது முன்னேறிய நாடுகள் பங்குதாரர்களாக பங்கு பெற்றன. இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டின் உலகளாவிய தன்மை (global nature) புதிய சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. எடுத்துக்காட்டாக, வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), தமிழகம் வழியாக இந்திய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பாகக் கருதியது.
பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதில் ஹூண்டாய் (Hyundai), டாடா (Tata), அதானி (Adani), குவால்காம் (Qualcomm) மற்றும் செயின்ட் கோபேன் (Saint Gobain) போன்ற நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள் அடங்கும். அவர்கள் தங்கள் நிறுவனங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழலின் சாத்தியம் மற்றும் உறுதித்தன்மையை அவர்கள் நம்புவதைக் குறிக்கிறது.
இருப்பினும், முதலீட்டில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே தொடர்ந்து குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. முதலீட்டாளர் சந்திப்புகளில் இந்த இடைவெளி பொதுவானது, நம்பிக்கையை உருவாக்கும் முதலீட்டாளர் மாநாடுகளின் போது இந்த நிலைமை அடிக்கடி நிகழ்கிறது. நேரம் மற்றும் நடைமுறையின் போதான வரம்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் இது ஏற்படுகிறது. 2030-க்குள் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய தொலைநோக்கு திட்டம் வெளியிடுவதில் தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்துறை அமைச்சர் தலைமையிலான சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்படும் ஒற்றைச் சாளர முறை (single window system) மூலம் முதலீட்டாளர்கள் தனது அலுவலகத்திற்குச் செல்வதற்கும், திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் முதலமைச்சரின் பொது உத்தரவாதம் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு வரவேற்கத்தக்க நிரூபணமாகும். ஒரு குறிப்பிடத்தக்க சவால், சாத்தியமான முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களுக்கு போதுமான நிலத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சமீப ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழகம் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. கூடுதலாக, அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களையும் வெளிப்படையாகப் பகிர்வது மற்றும் வழக்கமான முன்னேற்ற விவரங்களை வழங்குவது தொழில்துறையின் நம்பிக்கையை அதிகரிக்கும்.