தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநில பொருளாதாரமாக உள்ளது : நிதி அமைச்சர் -சங்கீதா கந்தவேல்

 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன், தமிழ் நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உத்தரப் பிரதேசம், தமிழகத்தை விஞ்சி இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாகத் திகழ்கிறது என்ற கூற்றை மறுத்தார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் வருவாயில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசியுள்ளார். 


நிதியமைச்சர் என்ற முறையில், வரவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து என்ன? நீங்கள் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) உட்பட வெளிநாட்டில் பிரதிநிதிகளை வழிநடத்தியிருந்தீர்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 


நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பே இதற்கான திட்டமிடல் தொடங்கியது. நமது முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும் பல்வேறு நாடுகளுக்கு வணிகக் குழுவை வழிநடத்திச் சென்றதன் அடிப்படையில், இப்போது அது இந்த நிகழ்வுக்கு வழிவகுத்துள்ளது. தமிழகம் எப்போதும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. நாங்கள் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (Memoranda of Understanding (MoUs)) கையெழுத்திட்டுள்ளோம். இவை சுமார் ₹3 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்து 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குகின்றன. மாநிலமானது ஒரு சாதகமான மற்றும் வலுவான சூழலை வழங்குவதுடன் சமூக உள்ளடக்கம் (social inclusion), தொழில்நுட்பம், புதுமை, திறமையான பணியாளர்கள் மற்றும் நல்ல இணைப்பு போன்ற விஷயங்கள் உள்ளன. மிக முக்கியமாக, அரசியல் ஆதரவும் உள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (Global Investors Meet (GIM)) 2024 என்பது நமது திறனை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பாகும்.


மாநிலத்தில் மின்சாரம் எப்படி இருக்கிறது? ஆற்றல் முன்னணியில் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு என்ன செய்தி கொடுக்க விரும்புகிறீர்கள்? 



மாநிலத்தின் சராசரி மின் தேவை 14,500 மெகாவாட் முதல் 16,500 மெகாவாட் வரை உள்ளது. தற்போது, தினசரி சராசரி நுகர்வு சுமார் 340 மில்லியன் யூனிட்கள் (million units(MU)). பல்வேறு ஆதாரங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் நீர்மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் (central generating stations (CGS)) பங்கு அடங்கும். அவற்றின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தையும் வாங்குகிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாம் பயன்படுத்தும் மற்றொரு ஆதாரமாகும். ஏப்ரல் 20, 2023 அன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வலையிணைப்பு (Tangedco grid) ஒரு சாதனையாக இருந்தது. இது அதிகபட்சமாக தினசரி நுகர்வு 423.79 MU ஐ எட்டியது. இது எந்த நேரத்திலும் அதிகபட்ச தேவையான 19,387 மெகாவாட் நெருங்கும்.   


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் என்ன நடக்கிறது? புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு உந்துதலைக் கொடுக்க மாநிலம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

 

தமிழக அரசு மிகப்பெரிய இலக்கை அடைய கடுமையாக உழைத்து வருகிறது. 2030க்குள், மாநிலத்தின் எரிசக்தித் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கொண்டு பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடையற்ற, நம்பகமான, தரமான மின்சாரத்தை நியாயமான விலையில் வழங்குவதே அரசின் நோக்கம். சூரிய சக்தி, பசுமை ஹைட்ரஜன் சக்தி மற்றும் நீர் மின்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. மேற்கூரை சோலார் (rooftop solar) பேனல்களை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இது உயர் மின்னழுத்தம் (High Tension) மற்றும் குறைந்த மின்னழுத்தம் (Low Tension) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும், அவை பசுமை ஹைட்ரஜனை (green hydrogen) ஆதரிக்க, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா தயாரிக்க சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு   சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. குழாய் மூலம் சேமிக்க, சேமிப்பு நீர்மின் திட்டங்களை (hydro electric projects) உருவாக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அரசு-தனியார் கூட்டாண்மையாக (public-private partnership (PPP)) இருக்கும். அவை அதிக நேரங்களில் அதிக மின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். இதில் 12 திட்டங்களுக்கு அரசு-தனியார் கூட்டாண்மையின் (public-private partnership (PPP)) கீழ் அரசு ஏற்கனவே முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது.  


உத்திரபிரதேசம் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உங்கள் பார்வைகள்?


அறிக்கைகள் சரியாக இல்லை. மிக சமீபத்திய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) தரவு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து (Ministry of Statistics and Programme Implementation (MOSPI)) வருகிறது. 2022-23 நிதியாண்டில், நமது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹23,64,514 கோடி ஆகும். இது உத்திரபிரதேசத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பான ₹22,57,575 கோடியை விட அதிகமாகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ் நாடு இருக்கிறது.


சமீபத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மாநில பொருளாதாரத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) மற்றும் விவசாயத் துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இத்னால், விரைவில் மீண்டு வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலிமையானது மற்றும் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டது. ஆனால், இந்த நிலை ஒரு தற்காலிக பிரச்சனையே.


வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து ஏதேனும் மதிப்பீடு உள்ளதா?


சுமார் 3,300 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,64,000 ஹெக்டேர் பயிர்கள் அழிந்துள்ளன. மொத்தம், 13,556 குடிசைகள் முற்றிலும் இழந்துள்ளன. மேலும், 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 676 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.


வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாநில அரசு உதவி செய்துள்ளது. பணத்தின் அளவு பெரியதாகத் தெரிகிறது. இது மாநிலத்தின் நிதிநிலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?


இரண்டு பெரிய பேரழிவுகள் பல மக்களை பாதித்தது மற்றும் அவர்கள் சொத்துக்களுக்கும் பொது உள்கட்டமைப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6,000 வழங்க முதல்வர் விரைவில் முடிவு செய்தார். இந்த முடிவு ₹2,000 கோடிக்கு மேல் செலவாகும். அரசாங்கம் சுமார் 37,000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த பணம் தற்காலிக மற்றும் நிரந்தர பழுதுபார்ப்புக்கு வழிவகுக்கும். அரசாங்கத்தின் செலவுகள் வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், அதன் வருமானம் குறைந்துள்ளது. ஏனென்றால், பேரிடர்களுக்குப் பிறகு, இந்தப் பகுதிகளில் பொருளாதாரமானது சவாலாக உள்ளது. இத்தகைய பெரிய அளவிலான பேரழிவுகளைக் கையாள்வது எந்த ஒரு மாநிலத்திற்கும் தனியாக, குறிப்பாக நிதி ரீதியாக நிர்வகிக்க முடியாதது. மாநிலத்திற்கு ஒன்றிய அரசின் உதவி தேவை. இந்த உதவியை பலமுறை கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியும் வரவில்லை.




Original article:

Share: