தடைசெய்யப்பட்ட விலை ஆதாயங்கள் : நுகர்வோர் உணவு விலைக் குறியீடு பற்றி . . .

 உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கனவே பலவீனமான பொருட்களின் நுகர்வை பாதிக்கலாம்.  


டிசம்பரில், நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்ததால் இந்த உயர்வு ஏற்பட்டது. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் பணவீக்கம் அதிகமாகவே இருந்தது. மொத்தத்தில், சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதம் முதல் 14 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.69% ஆக உயர்ந்துள்ளது. நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டால் அளவிடப்படும் உணவுப் பணவீக்கம், முந்தைய மாதத்தை விட 83 அடிப்படைப் புள்ளிகளாக  அதிகரித்துள்ளது. இது டிசம்பரில் 9.53% ஆக இருந்தது. உணவு விலை உயர்வு பெரும்பாலும் தானியங்களால் உந்தப்பட்டது - 'உணவு மற்றும் பானங்கள்' குழுவின் மிகப்பெரிய அங்கமான - இது 9.93% பணவீக்கத்தை பதிவு செய்தது.


நவம்பரை விட டிசம்பரில் தானியங்களுக்கான பணவீக்கம் சற்று குறைவாக இருந்தாலும், அது இன்னும் கவலையை ஏற்படுத்தியது. நவம்பரில், தானியங்களின் பணவீக்கம் 10.3% ஆக இருந்தது. இந்த விகிதத்தில் அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியாங்கள் போன்றவை அடங்கும். இவை தொடர்ந்து மாதந்தோறும் அதிக பணவீக்க விகிதங்களைக் காட்டி, குடும்பங்களை பாதித்தன. உளுந்து மற்றும் தினை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உளுந்தின் மாதப் பணவீக்க விகிதம் 63 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. நவம்பரில் இருந்து தினையின் விலை 106 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த சிறுதானியாங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பிந்தங்கிய மக்களின் உணவுப்பொருளாகும். சைவ உணவு உண்பவர்களின் முக்கிய புரத ஆதாரமான பருப்பு வகைகளும் விலை உயர்வைக் கண்டன. பருப்பு வகைகளின் விலை 20.7% உயர்வுடன் 43 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி 12 நிலவரப்படி, நடப்பு ராபி பருவத்திற்கான பருப்பு வகைகளின் விதைப்பு 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட கிட்டத்தட்ட 8% குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையானது பருப்பு வகைகளின் விலை வரும் மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.


காய்கறி விலை உயர்வும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பு கண்டது. நவம்பர் மாதத்தில் இருந்து, அது கிட்டத்தட்ட 10 சதவீத புள்ளிகளால் உயர்ந்தது. டிசம்பரில், காய்கறிகளுக்கான பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 27.6% ஆக இருந்தது. இந்த உயர்வுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய பங்காற்றியது. டிசம்பர் 2022 உடன் ஒப்பிடும்போது அவற்றின் விலைகள் முறையே 33% மற்றும் 74% அதிகரித்துள்ளது. இருப்பினும், காய்கறி விலைகள் அவற்றின் பருவகால ஏற்ற இறக்கத்திற்கு அறியப்படுகின்றன. முக்கிய காய்கறிகள்  மாதந்தோறும் பணவாட்டத்தை சந்தித்தன. நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒட்டுமொத்தமாக காய்கறி விலை 5.3% குறைந்துள்ளது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் முறையே 5.9%, 16% மற்றும் 9.4% குறைந்துள்ளன.


ஜனவரி 14 ஆம் தேதி வரை, நுகர்வோர் விவகாரத் துறையால் தினசரி கண்காணிக்கப்படும் 23 உணவுப் பொருட்களில் பெரும்பாலானவற்றின் சராசரி சில்லறை விலை கடந்த ஆண்டை விட அதிகமாகவே உள்ளது. உணவு விலை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவாலை இது காட்டுகிறது. உணவுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் அதிகமாக உணவுக்காகச் செலவிடுவார்கள். இது ஒட்டுமொத்த நுகர்வுகளை எதிர்மறையாக பாதிக்கலாம், இது ஏற்கனவே பலவீனமாக உள்ளது. இத்தகைய போக்கு பரந்த பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கலாம். கூடுதலாக, மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மேலும் நிச்சயமற்ற தன்மையை சேர்க்கிறது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி செலவுகளைப் பாதிக்கிறது. இந்த நிலைமை கொள்கை வகுப்பாளர்களின் வேலையை இன்னும் சவாலானதாக ஆக்குகிறது. பொருளாதாரத்தை திறம்பட நிர்வகிப்பதற்கு இந்த சிக்கலான பிரச்சினைகளை அவர்கள் கையாள வேண்டும்.




Original article:

Share: