'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது -தி ஹிந்து குழுமம்

 ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட தமிழக அரசு ₹3,100 கோடிக்கு நிதி ஒதிக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் ₹3.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.


பயனாளிகளுக்கு நிலம் இல்லையென்றால் அரசே அவர்களுக்கு நிலம் வழங்கும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். வீடு கட்ட அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு  பணம் செலுத்தும். இருப்பினும், தங்கள் நிலத்திற்கான பட்டா அல்லது உரிமை ஆவணங்கள் உள்ளவர்கள் மட்டுமே, இந்த உதவியைப் பெற முடியும் என்று விதிகள் கூறுகின்றன.


புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு, "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் வழங்கப்பட மாட்டாது.


மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், மாநில அளவில் வீடுகள் 40:60 என்ற விகிதத்தில் SC/ST சமூகங்கள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்ட SC/ST மற்றும் பிற குடும்பங்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும்.


“பெண்கள் உறுப்பினரின் பெயரில் பட்டா இருந்தால், குடும்ப பெண் உறுப்பினர் பெயரில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். பட்டா ஆண் பெயரில் இருந்தால், மனைவி மற்றும் கணவன் பெயரில் கூட்டாக வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெண் உறுப்பினர் இல்லை என்றால், குடும்பத்தின் ஆண் உறுப்பினரின் பெயரில் வீடு ஒதுக்கப்படலாம்.


2024-25 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் ₹3.50 லட்சம் செலவாகும். இந்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்  மற்றும் தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) (Swachh Bharath Mission-Gramin (SBM-G)) ஆகியவற்றின் பங்களிப்புகள் அடங்கும்.


ஒவ்வொரு வீட்டுப் பிரிவின் செலவில், வீடு கட்டுவதற்கு 90 நபர்களும், கழிப்பறை கட்டுவதற்கு கூடுதலாக 10 நபர்களும் வீடு கட்டும் நாட்களுக்கு ஒதுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Gurantee Act (MGNREGA)) துணைபுரியும். கூடுதலாக, ஒவ்வொரு அலகுக்கும் தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) (Swachh Bharat Mission (SBM-G))  மூலம் ₹12,000 நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 360 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும்.




Original article:

Share: