பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்களை விலக்குவது குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி தெளிவாகக் காட்டுகிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான (Organisation for Economic Co-operation and Development (OECD)) அமைப்பின் அறிக்கையின் படி, சமூக நிறுவனங்களில் பாலினப் பாகுபாடு $12 டிரில்லியன் வரை உலகப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
2024 உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் (Global Gender Gap Index), கணக்கெடுக்கப்பட்ட 146 நாடுகளில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. இதன் பொருள் பட்டியலில் இந்தியா குறைந்த தரவரிசையில் கீழிருந்து 18-வது இடத்தில் உள்ளது. 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியா 156 நாடுகளில் கீழே இருந்து 17-வது இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்தமாக, பல ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து கீழ் 20 நாடுகளில் இடம் பிடித்துள்ளது.
2006-ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு (Global Gender Gap Index), ஒரு சுருக்க அளவை வழங்குகிறது. இது, பொருளாதார பங்கேற்பு (economic participation) மற்றும் வாய்ப்பு (opportunity), கல்வி அடைதல் (educational attainment), உடல்நலம் (health), உயிர்வாழ்வு (survival) மற்றும் அரசியல் அதிகாரம் (political empowerment) எனும் நான்கு துணை குறியீடுகளை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு துணைக் குறியீடும் பல்வேறு குறிகாட்டிகளைப் பிரதிபலிக்கிறது.
குறியீடு 0 முதல் 1 வரை இருக்கும். அங்கு 1 முழுமையான பாலின சமத்துவத்தைக் (complete parity) குறிக்கிறது. இந்த குறியீடானது பாலின இடைவெளிகளை அளவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அதாவது பெண்களின் நிலைகளை ஆண்களின் பாலின சமத்துவம் (gender equality) அவர்களின் முழுமையான நிலைகளை மதிப்பிடுவதற்குப் பதிலாக ஒப்பிடுகிறது. காலப்போக்கில் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பாலின வேறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதே இதன் குறிக்கோள். எல்லா குறியீடுகளையும் போலவே, இது பாலின சமத்துவத்திற்கு முக்கியமான அனைத்தையும் சேர்க்கவில்லை, ஆனால் சில முக்கிய நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது பாலின சமத்துவம் குறித்த ஒரு விரிவான ஆய்வாக பார்க்கப்படக்கூடாது, ஆனால் நம்பகமான அளவிடக்கூடிய மற்றும் கண்காணிக்கக்கூடிய முக்கிய சுருக்க புள்ளிவிவரங்களின் பயனுள்ள சிறப்பம்சமாக பார்க்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த குறியீடு மற்றும் துணைக் குறியீடுகளின் மதிப்பு இடைவெளி எவ்வளவு குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பொருளாதாரத் தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்தில் (Centre for Economic Data and Analysis (CEDA)), நாங்கள் ஒரு ஊடாடும் தடத்தை (interactive tracker) உருவாக்கினோம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, 2006 முதல் ஒவ்வொரு துணைக் குறியீட்டிலும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தரவரிசை எவ்வாறு மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது. குறியீடு 0 (இடதுபுறம்) முதல் 1 (வலதுபுறம்) வரை இருக்கும். இது பார்வையாளர்கள் தரவைத் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது.
2024-ஆம் ஆண்டு சுகாதார அறிக்கையில், இந்தியாவின் "உடல்நலம் மற்றும் பிழைத்தல் கூட்டுமதிப்பெண்" (“Health and Survival Score”) 0.951 ஆகும். இது பாலின இடைவெளியில் 95.1% இந்தப் பகுதியில் குறைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.
கல்வியில், இந்தியா 96.4% பாலின இடைவெளி குறைந்துள்ளது. முன்னேற்றம் இருந்தபோதிலும், மற்ற நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், இந்தியா கல்வியில் 112-வது இடத்திலும், சுகாதாரத்தில் 146 நாடுகளில் 142-வது இடத்திலும் உள்ளது.
தொழிலாளர் பங்கேற்பு, நிர்வாகப் பாத்திரங்கள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சம ஊதியம் ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை பொருளாதார பங்கேற்பு துணைக் குறியீடு கருதுகிறது. இந்தியா 39.8% மதிப்பெண்கள் பெற்று 142-வது இடத்தில் உள்ளது. இது 2021-ஆம் அண்டைவிட (32.6%) சிறப்பாக இருந்தாலும், 2012-ஆம் ஆண்டு மதிப்பெண் 46% உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது.
இந்த மதிப்பெண்ணை முன்னோக்கி வைத்துப் பார்த்தால், மிகக் குறைந்த பொருளாதார சமநிலையைக் கொண்ட நாடுகள் பங்களாதேஷ் (31.1 சதவீதம்), சூடான், (33.7 சதவீதம்), ஈரான் (34.3 சதவீதம்), பாகிஸ்தான் (36 சதவீதம்), இந்தியா (39.8 சதவீதம்) மற்றும் மொராக்கோ (40.6 சதவீதம்). இந்த பொருளாதாரங்கள் அனைத்தும் மதிப்பிடப்பட்ட வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் குறைவான பாலின சமத்துவத்தையும், தொழிலாளர் பங்கேற்பில் 50 சதவீதத்திற்கும் குறைவான பாலின சமத்துவத்தையும் பதிவு செய்கின்றன.
அரசியல் பங்கேற்பில், இந்தியா 25.1% பாலின இடைவெளியை குறைத்துள்ளது மற்றும் உலகளவில் அரசியல் பங்கேற்பில் 65-வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார பாலின சமத்துவத்தில் முன்னேறியுள்ள நிலையில், அரசியல் பங்கேற்பில் முன்னேற்றம் உலகளவில் மெதுவாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது.
இந்தியாவின் தரவரிசை 2021-ல் 27.6% மதிப்பெண்களுடன் 51-வது இடத்தில் இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்திறன் சரிவைக் குறிக்கிறது. இந்த மதிப்பெண் 2014-ல் இந்தியாவின் நிலையைவிட (43.3%) குறைவாக உள்ளது, இது கடந்த பத்தாண்டுகளில் இந்த துணைக் குறியீட்டில் ஏற்பட்டுள்ள சரிவைக் காட்டுகிறது.
இந்தியாவும் அதன் தெற்காசிய அண்டை நாடுகளும் பாலின சமத்துவத்தில் 8 உலகளாவிய பிராந்தியங்களில் 7-வது இடத்தில் உள்ளன. மத்திய கிழக்கு மற்றும் வட (Middle East and North Africa (MENA) ஆப்பிரிக்காவிற்கு சற்று மேலே உள்ளன. தெற்காசியாவிற்குள், இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் உலகளவில் 99-வது இடத்தில் உள்ளது. இது பல அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பாலின சமத்துவம் மற்றும் மோசமான செயல்திறன் கொண்ட பிராந்தியத்தில் இந்தியாவை வைக்கிறது.
இந்தியப் பெண்களுக்கு சில மேம்பாடுகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் நடந்துவரும் பாலின இடைவெளிகளை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் குறுகிய பாலின வேறுபாடுகள் இருந்தன என்பதையும் அது குறிப்பிடுகிறது. இது, இந்த கண்டுபிடிப்புகளை நாம் கவனிக்க வேண்டுமா அல்லது அவற்றை நிராகரிக்க வேண்டுமா? என்ற கேள்வியைத் தூண்டுகிறது.
பெண்களைத் தவிர்த்துவிடுவதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் செலவுகளை ஆராய்ச்சி தொடர்ந்து காட்டுகிறது. சமூக நிறுவனங்களில் பாலின பாகுபாடு உலகப் பொருளாதாரத்திற்கு $12 டிரில்லியன் வரை செலவாகும் என்றும், இந்த பாகுபாட்டைக் குறைப்பது மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என்றும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான (Organisation for Economic Co-operation and Development (OECD)) மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்தப் புரிதலை ஏற்றுக்கொள்வது என்பது பாலின சமத்துவத்தை பொருளாதாரக் கொள்கையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதாகும்.
எவ்வாறாயினும், பொருளாதார சமத்துவத்தை அடைவதற்கு சமூகம் பெண்களை சுதந்திரமான, திறமையான நபர்களாகப் பார்க்க வேண்டும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தங்கள் சொந்த விருப்பங்களைச் செய்ய சுதந்திரம் மற்றும் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுப்பதில் அவர்களை சமமாக சேர்க்க வேண்டும்.
Original link: