பீகாரின் இடஒதுக்கீடு நிறுத்தப்பட்டது: நீதிமன்றம் நம்பியிருக்கும் 50% உச்சவரம்பு என்ன?

 ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு வரலாறு என்ன, அதில் ஏன் அடிக்கடி வழக்குத் தொடரப்படுகிறது?


பீகார் அரசின் அறிவிப்புகளை பாட்னா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இந்த அறிவிக்கைகள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை 50%-லிருந்து 65% ஆக உயர்த்தின.


பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது ஒரு சிலருக்கு மட்டுமின்றி, அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. எவ்வாறாயினும், இழப்பீட்டு நீதியைப் பின்தொடர்வதில் தகுதியைப் புறக்கணிக்கவோ அல்லது சமரசம் செய்யவோ கூடாது என்றும் அது வலியுறுத்தியது. இடஒதுக்கீடுகளுக்கு 50% வரம்பு ஏன் நிறுவப்பட்டது என்பதை இந்தக் கொள்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இடஒதுக்கீட்டிற்கான 50% உச்சவரம்பின் வரலாறு என்ன, அது ஏன் அடிக்கடி வழக்குத் தொடரப்படுகிறது?


இந்திரா சஹானி தீர்ப்பு (Indra Sawhney)


நிர்வாகத்தில் "செயல்திறனை" (“efficiency”) உறுதி செய்வதற்காக 50% உச்சவரம்பு உச்சநீதிமன்றத்தால் 1992-ல் இந்திரா சாவ்னி v யூனியன் ஆஃப் இந்தியா (Indra Sawhney v Union of India) வழக்கின் தீர்ப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.


சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான (socially and economically backward classes (SEBC)) 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்த 6-3 பெரும்பான்மை முடிவு இரண்டு முக்கிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. முதலாவதாக, இடஒதுக்கீடு தகுதியானது "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில்" உள்ளது என்பதை தெளிவுபடுத்தியது. இரண்டாவதாக, முந்தைய வழக்குகளில் அமைக்கப்பட்ட செங்குத்து ஒதுக்கீட்டில் 50% வரம்பை மீண்டும் உறுதிப்படுத்தியது (எம் ஆர் பாலாஜி v மைசூர் மாநிலம், 1963, மற்றும் தேவதாசன் v யூனியன் ஆஃப் இந்தியா, 1964). "விதிவிலக்கான சூழ்நிலைகளில்" (“exceptional circumstances”) மட்டுமே இந்த வரம்பை மீற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


இந்திரா சாவ்னி தீர்ப்புக்குப் பிறகு, நீதிமன்றங்கள் தொடர்ந்து 50% இடஒதுக்கீடு வரம்பை உறுதி செய்துள்ளன. இருப்பினும், இந்த வரம்பை மீறுவதற்கான முயற்சிகள், குறிப்பாக பீகார் மற்றும் பிற மாநிலங்களில், அரசியலுக்காக நடைபெற்றது.  மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின்போது, ​​காங்கிரஸின் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு 50%-க்கு மேல் விரிவுபடுத்தப்படும் என உறுதியளித்தார். 50% வரம்பு சட்டப்பூர்வமானது என்பது தற்போது உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தபோதிலும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (Economically Weaker Section (EWS)) 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 10% ஒதுக்கீட்டைத் தவிர, வரம்பை மீறும் சட்டங்கள் நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளன. 


நவம்பர் 2022-ல், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு  3-2 முடிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. 50% உச்சவரம்பு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஒதுக்கீட்டுக்கு பொருந்தும். ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இருப்பதைப் போன்ற தனி ஒதுக்கீட்டுக்கு அல்ல. இது 'பின்தங்கிய' (‘backwardness’) அளவுகோல்களுக்கு வெளியே செயல்படும் மற்றும் "முற்றிலும் வேறுபட்ட வகையாக"  (an entirely different class) கருதப்படுகிறது. 


உச்சவரம்பு கடுமையானதாகவோ அல்லது காலவரையின்றி மாற்ற முடியாததாகவோ கருதப்படவில்லை என்று பெரும்பான்மையானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

இந்திரா சாவ்னி வழக்கையே உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இரண்டு நீதிபதிகள் சிறுபான்மையினரின் கருத்தில், பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவது ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கவலை இருந்தது. 50% விதியை மீற அனுமதிப்பது, சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும். மேலும், வீதி மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.


50% உச்சவரம்பை விமர்சிப்பவர்கள் இது அனைவரையும் கலந்து ஆலோசிக்காமல், நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பு என்று வாதிடுகின்றனர். அதே நேரத்தில் சட்டமியற்றுபவர்கள் அதை அடிக்கடி சவால் செய்ய முயன்றனர். மறுபுறம், இடஒதுக்கீடு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்பதால், 50%-ஐ மீறுவது சமத்துவக் கொள்கைக்கு முரணானது என்று சிலர் வாதிடுகின்றனர். தகுதியற்ற இடஒதுக்கீடுகள் சமத்துவக் கோட்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் (“eat up the rule of equality”) என்று எச்சரிப்பதற்காக அரசியல் நிர்ணய சபையில் டாக்டர்.பி.ஆர் அம்பேத்கரின் உரை அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.


இருப்பினும், இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையின் (fundamental right) ஒருங்கிணைந்த பகுதி என்றும், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு அவசியமானது என்றும் சிலர் நம்புகின்றனர். அதன் 2022 தீர்ப்பில், உச்சநீதிமன்றம் (NEET)-இல் 27% OBC ஒதுக்கீட்டை உறுதிசெய்தது. "இட ஒதுக்கீடு தகுதிக்கு எதிராக செயல்படாது. ஆனால், அதன் நியாயமான விநியோகத்தை ஊக்குவிக்கிறது" என்று நீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றம் இந்திரா சாவ்னி கேள்வியை மறுபரிசீலனை செய்யும், முறையான சமத்துவத்தின் மீது கணிசமான சமத்துவத்தில் கவனம் செலுத்துகிறது. மண்டல் கமிஷன் அறிக்கை அமலுக்கு வந்ததில் இருந்து, இடஒதுக்கீடு குறித்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான சட்டத் தீர்ப்புகளிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை நீதிமன்றம் பயன்படுத்தும்.


மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு


1994-ஆம் ஆண்டில், 76-வது அரசியலமைப்புத் திருத்தம் (76th constitutional amendment, 1994) 50% வரம்பை மீறிய தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் (Ninth Schedule) சேர்த்தது. இந்த அட்டவணை, சட்டப்பிரிவு 31A-ன் (Article 31A) கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுவதிலிருந்து சட்டங்களைப் பாதுகாக்கிறது. ஒன்பதாவது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ள சட்டங்கள் அரசியலமைப்பின்கீழ் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. 


மே 2021-ல், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் மகாராஷ்டிரா சட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்ப்பளித்தது. இது 50% இடஒதுக்கீடு வரம்பை மீறியதால் அது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கருதுகிறது. மராத்தா இடஒதுக்கீடு மாநிலத்தின் இடஒதுக்கீட்டை 68% ஆக உயர்த்தியிருக்கும்.


மராட்டியப் பிரச்சினையைப் போலவே குஜராத்தில் படேல்கள், ஹரியானாவில் ஜாட்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கபுக்கள் வழக்குகள் உள்ளன. 

Original link:
Share: