தேசியத் தேர்வு முகமையை சரிசெய்ய வேண்டியதன் அவசியம்

 தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு மறுசீரமைப்பு தேவை. 

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நம்பகத்தன்மையுடன் இருப்பதாக அறிவித்த ஒரு நாள் கழித்து யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக நீட்-யுஜி மருத்துவம் (NEET-UG (medicine)) மற்றும் ஜேஇஇ பொறியியல் (JEE (engineering)) பற்றிய புகார்களுக்குப் பிறகு இது தேசிய தேர்வு முகமைக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கல்வி அமைச்சகத்தின் பதில், நீட் நிலைமையைக் கையாண்ட விதத்துடன் முரண்படுகிறது, இது கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறது. 


நீட் தேர்வு வழக்கைப் போலல்லாமல், விண்ணப்பதாரர்களிடமிருந்து முறையான புகார்கள் இல்லாமலேயே, உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் குழுவின் தகவல்களின் அடிப்படையில் அமைச்சகம் விரைவாக செயல்பட்டது. யுஜிசி-நெட் (UGC-NET) ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும். ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட UGC-NET தேர்வர்களுக்கு மாதக்கணக்கில் படித்தவர்கள், நீண்ட தூரம் பயணம் செய்தவர்கள், சிலர் தங்கள் செலவுக்காகக் கடன் வாங்கியவர்கள் ஆகியோருக்கு இது பெரிய ஆதரவு அல்ல.


இளைஞர்களின் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. 2018ஆம் ஆண்டு வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) தேசியத் தகுதித் தேர்வு (NET) நேரடியாக (Offline) நடத்தப்பட்டது, பின்னர் தேசியத் தேர்வு முகமையின் (NTA) கீழ் ஆன்லைனுக்கு மாறியது, இந்த ஆண்டு ஆஃப்லைன் வடிவத்திற்குத் திரும்புவது ஏன் என்பது ஒரு முக்கிய கேள்வி. இந்த மாற்றம் வினாத்தாள் கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். தேர்வர்களிடம் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க NTA-க்கு வெளிப்படையான விசாரணைகள் மிக முக்கியம். மற்றொரு பிரச்சினை பொறுப்பு வகிப்பவர்களை பொறுப்பேற்க வைப்பது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள், ஏமாற்றுதல், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க சீர்திருத்தத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.


பல இளம், மற்றும் படித்த இந்தியர்கள் புதிய தேர்வர்கள் தேர்வு முகமையின் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் தேசியத் தேர்வு முகமையை கலைத்துவிட்டு மாநிலங்களே நுழைவுத்தேர்வை நடத்த அனுமதிக்க விரும்புகிறார்கள். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்து, பல்வேறு மாநிலங்களின் பெரிய அளவிலான தேர்வுகளை எளிதாக நிர்வகிப்பதைச் செய்யலாம். இருப்பினும், சில நாடு தழுவிய தேர்வுகள் இன்னும் தேவைப்படும். தேர்வு முறையின் நேர்மையை மேம்படுத்த மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே, தேர்வு முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதில் மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

Original link:
Share: