Showing posts with label தேர்வு முகமை. Show all posts
Showing posts with label தேர்வு முகமை. Show all posts

செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் தேர்வுத் தாள் கசிவை சரிபார்க்க முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும் -சுபிமல் பட்டாச்சார்யா

     18-வது மக்களவைக் கூட்டத்தொடர் துவங்கி புதிய அரசு பதவியேற்கும் முன்பே, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நடத்திய இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்து குறிப்பிடத்தக்க சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தேர்வுகள்:


NEET- இது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகள் மற்றும் சில முதுகலைப் படிப்புகள் ஆகியவற்றில் சேர்வதற்கான தரப்படுத்தப்பட்ட தேர்வாகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (NET) இந்திய நாட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பதவிகளுக்கு (junior research fellows) தகுதி பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு முனைவர் பட்டம் மற்றும் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி நடந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு தேர்வில் விருப்ப மதிப்பெண்கள், ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜூன் 18-ஆம் தேதி, தேசிய தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வினாத் தாள் கசிந்ததாகவும், சமூக ஊடக தளங்களில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.


தகுதியான பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே கடுமையான கவலைகளையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தன்னாட்சி முறையில் செயல்பட்டாலும், தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) பல்வேறு சோதனைகளை செய்த பிறகும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை தடுப்பதற்கு ஒன்றிய அரசு இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூரில் உள்ள கவர்னர்கள் குழுவின் தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது, தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பிடுவது அவர்களின் பணியாகும். மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) விசாரணை நடத்தி வருகிறது. இது எதிர்காலத்திற்கான செயல் முறைகளை வழங்க உதவும். இளம் மாணவர்களிடையே நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவது அமைப்புக்கு சவாலான பணியாக இருக்கலாம்.


இன்று, தொழில்நுட்பம் தேர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் 2017-ல் நிறுவப்பட்டதிலிருந்து, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) இந்தியாவில் பல தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கூட்டு நுழைவுத் தேர்வு மற்றும் பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (Common Management Admission Test (CMAT)) ஆகியவை இதில் அடங்கும். NEET-UG, ஒளியியல் குறி அங்கீகாரம் (optical mark recognition (OMR)) வடிவத்தில் பேனா மற்றும் காகிதத் தேர்வு, ஒரே அமர்வில் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறம், 2018-ல் கணினி அடிப்படையிலான பயன்முறைக்கு மாறிய NET தேர்வு, இந்த ஆண்டு பேனா மற்றும் காகித OMR வடிவத்திற்கு திரும்பியது. தொழில்நுட்பச் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட தேர்வு அட்டவணைகள், தரப்படுத்தல் சிரமங்கள் மற்றும் தேர்வுப் பொருட்களை எடுத்துச் செல்வது மற்றும் பாதுகாப்பாக சேமிப்பது பற்றிய கவலைகள் போன்ற சவால்கள் நீடித்தாலும், ஒட்டுமொத்தமாக, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட தேர்வுகள் முந்தைய ஆண்டுகளைவிட பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 


தொழில்நுட்பத்திற்கு முன்பு, அந்த வினாத்தாள் கசிவுகள் வேறு வழிகளைக் கொண்டிருந்தன. இன்று, அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தேர்வுத்தாள் கசிவுகளுக்கு அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டாலும், அது மட்டும் பொறுப்பல்ல. கசிந்த தகவல்களை விரைவாக விநியோகிக்க இது ஒரு கருவி மட்டுமே. இது கசிவுகளையோ அல்லது அவற்றுக்கான தேவையையோ தொடங்கவில்லை. நடந்ததை பற்றி குறைகூறுவது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.  தேசிய தேர்வு முகமையின் ஹேக் செய்யப்பட்டது என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

 

தேர்வுக் கசிவுகளைத் திறம்பட எதிர்த்துப் போராட, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் (anti-corruption measures), பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், கல்வி அமைப்பைச் சீர்திருத்தம் ஆகியன இதில் இருக்க வேண்டும். தேர்வு அழுத்தத்தைக் கற்பித்தல், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், நியாயமற்ற வழிமுறைகளுக்கான தேவையைக் குறைக்க ராதாகிருஷ்ணன் குழு அமைக்கபப்ட்டது.


ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள்: தேர்வுமுறையின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விரிவான, பிளாக்செயின் அடிப்படையிலான கேள்வி வங்கி, கேள்வி வங்கிகளைச் சேமிக்கவும் நிர்வகிக்கவும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், கேள்வி அணுகல் தணிக்கை செய்யக்கூடிய பாதையுடன் சேதமடையாத சேமிப்பு போன்ற பல அடுக்கு அணுகுமுறையை ராதாகிருஷ்ணன் குழு ஆராய வேண்டும். பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரம், ஏமாற்று முயற்சிகளைத் தடுக்க கைரேகை, முக அங்கீகாரம், விழித்திரை ஸ்கேன் மற்றும் உயிரோட்டத்தைக் கண்டறிதல் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். தகவமைப்பு சோதனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான கேள்விகளை வழங்குவதன் மூலம் வினாத்தாள் கசிவு அபாயத்தைக் குறைக்கவும்.  தேர்வுகளை வழங்க கணினியைப் பயன்படுத்தவும், ஒன்றிய  சேவையகங்களின் மீதான நம்பிக்கையை குறைக்கவும் மற்றும் சாத்தியமான விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு (Distributed Denial-of-Service (DDoS)) சைபர் தாக்குதல்களின் தாக்கத்தை குறைக்கவும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பதில் சரிபார்ப்பு மாணவர்களிடையே ஏமாற்றுதல் அல்லது கூட்டுறவைக் குறிக்கும் வடிவங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பயன்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைத் தடுக்கவும் முடிவுகளை வெளியிடுவதற்கு பிளாக் செயின் (blockchain) தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தலாம்.

Share:

தேசியத் தேர்வு முகமையை சரிசெய்ய வேண்டியதன் அவசியம்

 தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு மறுசீரமைப்பு தேவை. 

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நம்பகத்தன்மையுடன் இருப்பதாக அறிவித்த ஒரு நாள் கழித்து யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக நீட்-யுஜி மருத்துவம் (NEET-UG (medicine)) மற்றும் ஜேஇஇ பொறியியல் (JEE (engineering)) பற்றிய புகார்களுக்குப் பிறகு இது தேசிய தேர்வு முகமைக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கல்வி அமைச்சகத்தின் பதில், நீட் நிலைமையைக் கையாண்ட விதத்துடன் முரண்படுகிறது, இது கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறது. 


நீட் தேர்வு வழக்கைப் போலல்லாமல், விண்ணப்பதாரர்களிடமிருந்து முறையான புகார்கள் இல்லாமலேயே, உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் குழுவின் தகவல்களின் அடிப்படையில் அமைச்சகம் விரைவாக செயல்பட்டது. யுஜிசி-நெட் (UGC-NET) ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும். ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட UGC-NET தேர்வர்களுக்கு மாதக்கணக்கில் படித்தவர்கள், நீண்ட தூரம் பயணம் செய்தவர்கள், சிலர் தங்கள் செலவுக்காகக் கடன் வாங்கியவர்கள் ஆகியோருக்கு இது பெரிய ஆதரவு அல்ல.


இளைஞர்களின் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. 2018ஆம் ஆண்டு வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) தேசியத் தகுதித் தேர்வு (NET) நேரடியாக (Offline) நடத்தப்பட்டது, பின்னர் தேசியத் தேர்வு முகமையின் (NTA) கீழ் ஆன்லைனுக்கு மாறியது, இந்த ஆண்டு ஆஃப்லைன் வடிவத்திற்குத் திரும்புவது ஏன் என்பது ஒரு முக்கிய கேள்வி. இந்த மாற்றம் வினாத்தாள் கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். தேர்வர்களிடம் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க NTA-க்கு வெளிப்படையான விசாரணைகள் மிக முக்கியம். மற்றொரு பிரச்சினை பொறுப்பு வகிப்பவர்களை பொறுப்பேற்க வைப்பது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள், ஏமாற்றுதல், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க சீர்திருத்தத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.


பல இளம், மற்றும் படித்த இந்தியர்கள் புதிய தேர்வர்கள் தேர்வு முகமையின் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் தேசியத் தேர்வு முகமையை கலைத்துவிட்டு மாநிலங்களே நுழைவுத்தேர்வை நடத்த அனுமதிக்க விரும்புகிறார்கள். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்து, பல்வேறு மாநிலங்களின் பெரிய அளவிலான தேர்வுகளை எளிதாக நிர்வகிப்பதைச் செய்யலாம். இருப்பினும், சில நாடு தழுவிய தேர்வுகள் இன்னும் தேவைப்படும். தேர்வு முறையின் நேர்மையை மேம்படுத்த மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே, தேர்வு முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதில் மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

Original link:
Share:

நீட் (NEET) - நெட் ((NET) தேர்வுகளின் சர்ச்சை : இந்தியாவின் தேர்வுமுறைத் தோல்விக்கான காரணம் - கே.சுஜாதா ராவ்

 நுழைவுத் தேர்வுகளின் சமீபத்திய சர்ச்சை வெளியில் தெரிவதைவிட ஆழமானது; பயிற்சி நிறுவனங்கள், தரப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் மற்றும் நிறுவன முறைகேடுகள் இதில் பங்கு வகிக்கின்றன.

நீட் சர்ச்சையின் (NEET controversy) சமீபத்திய உதாரணம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் ஒரு மோசமான சூழ்நிலையின் உச்சக்கட்டமாகும். வினாத்தாள் வழக்கம் போல கசிந்துள்ளன. இதுபோன்ற தவறான முறைகளை வெளியிடுவது தற்கொலைகளுக்கு வழிவகுத்தன. இந்த ஆண்டு தேர்வில், 67-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுக்கு சராசரியாக இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்களைப் பெற்றனர். வெளிப்படைத்தன்மையற்ற காரணங்களுக்காக 1,560-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக தேசியத் தேர்வு முகமை (NTA) அதன் மீதான நம்பிக்கையை இழந்தது. நீட் தேர்வு குறித்த நாடு தழுவிய அதிருப்தி தணிந்தபாடில்லை. இதற்கிடையில், தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்திய நெட் தேர்வை (NET examination) அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதன் நிறுவன நேர்மை குறித்த சந்தேகங்களை அதிகரித்துள்ளது. புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நீட் அல்லது நெட் மற்றும் இதுபோன்ற பிற அதிக போட்டித் தேர்வுகளில் மோசடி செய்வது மோசமான கொள்கையின் விளைவு மட்டுமே.

நீட் தேர்வை நிறுவுவதற்கான கொள்கை 2010-ம் ஆண்டில் சுகாதார அமைச்சகத்தில் மூன்று பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. ஒன்று, மருத்துவக் கல்லூரிகளின் பெரும்பான்மையான மாணவர்கள் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல்களில் மிகக் குறைந்த அறிவைக் கொண்டிருப்பதால், நுழைவுத் தேர்வு மட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறனை தரப்படுத்துவது. இரண்டு, நுழைவுத் தேர்வுகளின் எண்ணிக்கையை 46-லிருந்து ஒன்றாகக் குறைத்தது. மூன்றாவதாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விருப்புரிமையைக் குறைத்து, மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை அனுமதிப்பதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் விதிக்கும் நன்கொடைக் கட்டணத்தை ஒழிப்பது.

"ஒரு தேர்வு நீட் கொள்கையை" (one exam NEET policy) அமல்படுத்துவது 2013ஆம் ஆண்டில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், நீட் சேர்க்கை செயல்முறையை மையப்படுத்தி, நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறிப்பதாகக் கூறி தனியார் கல்லூரி மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியதால் கொள்கையானது நிறுத்தப்பட்டது. 2016-ல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது.

இந்தியாவில் பள்ளிக் கல்விக்கு ஒரே மாதிரியான தரநிலை இல்லாததால், தேர்வுக்கு பின்பற்ற வேண்டிய தரநிலை இந்தக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ஒன்றிய அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் (CBSE syllabus) பின்பற்றினாலும், மாநிலங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளன. அவை, CBSE-யுடன் ஒப்பிடும்போது குறைவான சிரமம் கொண்டவை. சமீபத்தில், பெரும்பாலான உயர்தர தனியார் பள்ளிகளில் சர்வதேச இளங்கலை (International Baccalaureate (IB)) மற்றொரு தரநிலை உள்ளது. கல்வித் தரத்தில் இத்தகைய பரந்த வேறுபாடுகள் இருப்பதால், சராசரி தரத்தை நிர்ணயிப்பது ஒரு சவாலாக உள்ளது. இதன் விளைவாக CBSE-க்கு ஆதரவாக பாரபட்சம் ஏற்படுகிறது. இதன் உடனடி உட்குறிப்பு என்னவென்றால், மாநிலத் தேர்வுகளில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் கூடுதல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் விளைவாக ரூ.58,000 கோடி பயிற்சித்தொழில் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ந்து வருகிறது.

மோசமான நிர்வாகத்தின் காரணமாக தோல்வியுற்ற பள்ளி முறையின் விளைவாக பயிற்சித் தொழில் உள்ளது. மந்தமான அணுகுமுறைகள், பாடத்திட்டத்தில் முடிவில்லாத மாற்றங்கள், கேள்வி மற்றும் அறிவியல் மனப்பான்மைக்குப் பதிலாக மனப்பாடம் செய்வதில் கவனம், கற்பித்தல் மற்றும் மேற்பார்வையின் மோசமான தரம், அதிக காலியிடங்கள் மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை ஆகியவை அவர்களைப் பாதித்துள்ளன. ஒரு காலத்தில் புகழ்பெற்ற அரசுப் பள்ளிகள் சீரழிந்தால், உயர்தர அரசுப் பள்ளிகள் ஓரளவு மேம்பட்டவை ஒரு தேசியத் தேர்வு மற்றும் பயிற்சி நிறுவனங்களின் கொள்கைகளுக்கு வழிவகுக்கின்றன. உயர்தரப் பள்ளிகள்கூட வகுப்புகளின் யதார்த்தத்தை எதிர்கொள்கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு கோருகிறார்கள். ஆனால், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்து தேசிய தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக பள்ளி முறையின் அடிப்படை அமைப்பு புறக்கணிப்புக்கு ஒரு மெத்தனமான  பதிலாகும் என்பது தெளிவாகிறது.

பள்ளியின் அமைப்பின் தோல்வியுடன், கல்விமுறையை மையப்படுத்தும் நோக்கத்துடன், உண்மையில் ஒரே நேரத்தில் பாடமாக இருக்கும் 2017-ம் ஆண்டில், நீட் போன்ற பல தேர்வுகளை நடத்துவதற்கான ஆணையுடன் தேசியத் தேர்வு முகமை (NTA) அமைக்கப்பட்டது. தேசியத் தேர்வு முகமை (NTA) நிறுவப்பட்டதிலிருந்து, முறைகேடுகள் குறித்த புகார்களால் நிரம்பி வழிகிறது. இது சிக்கலான மற்றும் முக்கியமான தேர்வுகளை நடத்துவதற்கு  அது போதுமானதாக இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஒன்றியத்தின் கொள்கையின் பாதகமான விளைவுகளைச் சரிசெய்யும் பொறுப்பை கல்வி, சுகாதார அமைச்சகங்கள் இரண்டுமே ஏறத்தாழ கைவிட்டுவிட்டன என்பது கவலைக்குரியது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை உயர்நிலைப் பள்ளித் தேர்ச்சியுடன் இணைக்கும் நீட் தேர்வின் கச்சிதமான கொள்கைக்கு எதிரானது என்பதால் நீட் தேர்வை தமிழ்நாடு எப்போதும் எதிர்த்து வருகிறது. 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் தமிழ் வழிப் பள்ளிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு இழப்பை சந்தித்தனர் என்பதற்கு ராஜன் குழு திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டது. இது, 2017-21-க்கு இடையில், தமிழ் வழிக் கல்வி மாணவர்களின் சராசரி சேர்க்கை 15 சதவீதத்திலிருந்து 1.6-3.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையும் 62 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீட் தேர்வு கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெளிவாகிறது. 

பெருநிறுவன மருத்துவமனைகளில் வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணக்காரர்கள், வசதியான உயர் நடுத்தர வர்க்கம், நகர்ப்புறத்தில் வளர்ந்த மாணவர்கள் போலல்லாமல், வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கமின்றி ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரிய விரும்பும் கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை நம்பியிருப்பதால் தமிழ்நாடு குறிப்பாக பாதிக்கப்பட்டது. நீட் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு சுகாதார அமைச்சகத்திடம் பல கோரிக்கைகளை விடுத்தது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் நுழைவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டிய அவசியத்தை ரத்து செய்யும் சட்டத்தை அவர்களின் சட்டமன்றம் நிறைவேற்றியது. அதிகார வரம்பு இல்லாமல் செயல்படும் ஆளுநரின் பிடிவாதத்தால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இன்றைய தீவிர அரசியலுக்கு அப்பால், அனைத்து பங்குதாரர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் நீட் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். ஒருவேளை நாடாளுமன்ற கூட்டுக் குழு (Joint Parliamentary Committee (JPC)) போன்ற ஒரு அனைத்துக் கட்சிக் குழு உள்ளூர் யதார்த்தங்களையும், மாநிலங்கள் முழுவதும் பல்வேறு நிலைகளில் கல்வித் தரங்களையும் ஆலோசிக்க முடியும். 60 மற்றும் 70களில் இருந்ததைப் போல விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய முக்கியமான பாடங்களில் மாணவர்களை "தரத்திற்கு" கொண்டு வர ஆறு ஆண்டுகள் எம்.பி.பி.எஸ் பட்டம் (MBBS degree) பெறுவது முதல் ஒரு முன் மருத்துவம் (pre-medical) ஒரு வருடம் வரை பரிசீலிக்கப்பட வேண்டும். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தது போல் மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வை பரவலாக்குவது. பிராந்திய வாரியங்களை உருவாக்குதல் அல்லது மாநிலத்திற்கு வெளியே பயிற்சி செய்வதற்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான தகுதித் தேர்வை மையப்படுத்துதல் போன்றவை மற்ற நடவடிக்கைகள் ஆகும்.

கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் சிந்தித்து தவறான கொள்கைகளை சரிசெய்ய வேண்டும். முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிர்வகிக்க அரசியல் தலைமை மிகவும் ஆலோசனை மற்றும் இடமளிக்கும் அணுகுமுறையை உருவாக்க வேண்டும். எதிர்க்கட்சி மாநிலங்கள் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களையும் ஊடகங்கள் பொறுப்பேற்க வைக்க வேண்டும். நீதித்துறை மோசமான நிர்வாகத்தின் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் மற்றும் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் செயல்பட அரசாங்கங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

தற்போதைய நீட் நெருக்கடி உயர்தர பள்ளிக் கல்வியை உறுதி செய்ய முடியாத தோல்வியுற்ற மாநிலத்தின் அறிகுறியாகும். பெரும்பாலான நாடுகளைப் போலவே, நல்ல தரமான தரப்படுத்தப்பட்ட பள்ளிக் கல்வி பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர உதவுகிறது. ஆனால் இந்தியாவில், தரநிலைகள் மிகவும் மாறுபட்டவை மற்றும் தரம் உறுதி செய்யப்படாததால், பெரும்பாலான தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான போட்டி காரணமாக, பண ஆதாயங்களுக்காக முறைகேடுகளில் ஈடுபடுவது ஒரு சிறந்த ஊக்கமாக மாறும். பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், தேர்வுகளை பரவலாக்குதல் மற்றும் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க கடுமையான மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தை நிறுவனமயமாக்குதல் ஆகியவை நீண்டகால தீர்வாகும் என்பது தெளிவாகிறது. அது நிறைவேறும் வரை, வினாத்தாள் கசிவு கவலைக்குள்ளாக்கும் 

கட்டுரையாளர் இந்திய அரசின் முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் ஆவார்.

original link:
Share: