செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் தேர்வுத் தாள் கசிவை சரிபார்க்க முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும் -சுபிமல் பட்டாச்சார்யா

     18-வது மக்களவைக் கூட்டத்தொடர் துவங்கி புதிய அரசு பதவியேற்கும் முன்பே, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நடத்திய இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்து குறிப்பிடத்தக்க சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தேர்வுகள்:


NEET- இது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகள் மற்றும் சில முதுகலைப் படிப்புகள் ஆகியவற்றில் சேர்வதற்கான தரப்படுத்தப்பட்ட தேர்வாகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (NET) இந்திய நாட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பதவிகளுக்கு (junior research fellows) தகுதி பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு முனைவர் பட்டம் மற்றும் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி நடந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு தேர்வில் விருப்ப மதிப்பெண்கள், ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜூன் 18-ஆம் தேதி, தேசிய தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வினாத் தாள் கசிந்ததாகவும், சமூக ஊடக தளங்களில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.


தகுதியான பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே கடுமையான கவலைகளையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தன்னாட்சி முறையில் செயல்பட்டாலும், தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) பல்வேறு சோதனைகளை செய்த பிறகும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை தடுப்பதற்கு ஒன்றிய அரசு இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூரில் உள்ள கவர்னர்கள் குழுவின் தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது, தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பிடுவது அவர்களின் பணியாகும். மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) விசாரணை நடத்தி வருகிறது. இது எதிர்காலத்திற்கான செயல் முறைகளை வழங்க உதவும். இளம் மாணவர்களிடையே நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவது அமைப்புக்கு சவாலான பணியாக இருக்கலாம்.


இன்று, தொழில்நுட்பம் தேர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் 2017-ல் நிறுவப்பட்டதிலிருந்து, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) இந்தியாவில் பல தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கூட்டு நுழைவுத் தேர்வு மற்றும் பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (Common Management Admission Test (CMAT)) ஆகியவை இதில் அடங்கும். NEET-UG, ஒளியியல் குறி அங்கீகாரம் (optical mark recognition (OMR)) வடிவத்தில் பேனா மற்றும் காகிதத் தேர்வு, ஒரே அமர்வில் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறம், 2018-ல் கணினி அடிப்படையிலான பயன்முறைக்கு மாறிய NET தேர்வு, இந்த ஆண்டு பேனா மற்றும் காகித OMR வடிவத்திற்கு திரும்பியது. தொழில்நுட்பச் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட தேர்வு அட்டவணைகள், தரப்படுத்தல் சிரமங்கள் மற்றும் தேர்வுப் பொருட்களை எடுத்துச் செல்வது மற்றும் பாதுகாப்பாக சேமிப்பது பற்றிய கவலைகள் போன்ற சவால்கள் நீடித்தாலும், ஒட்டுமொத்தமாக, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட தேர்வுகள் முந்தைய ஆண்டுகளைவிட பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 


தொழில்நுட்பத்திற்கு முன்பு, அந்த வினாத்தாள் கசிவுகள் வேறு வழிகளைக் கொண்டிருந்தன. இன்று, அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தேர்வுத்தாள் கசிவுகளுக்கு அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டாலும், அது மட்டும் பொறுப்பல்ல. கசிந்த தகவல்களை விரைவாக விநியோகிக்க இது ஒரு கருவி மட்டுமே. இது கசிவுகளையோ அல்லது அவற்றுக்கான தேவையையோ தொடங்கவில்லை. நடந்ததை பற்றி குறைகூறுவது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.  தேசிய தேர்வு முகமையின் ஹேக் செய்யப்பட்டது என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

 

தேர்வுக் கசிவுகளைத் திறம்பட எதிர்த்துப் போராட, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் (anti-corruption measures), பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், கல்வி அமைப்பைச் சீர்திருத்தம் ஆகியன இதில் இருக்க வேண்டும். தேர்வு அழுத்தத்தைக் கற்பித்தல், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், நியாயமற்ற வழிமுறைகளுக்கான தேவையைக் குறைக்க ராதாகிருஷ்ணன் குழு அமைக்கபப்ட்டது.


ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள்: தேர்வுமுறையின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விரிவான, பிளாக்செயின் அடிப்படையிலான கேள்வி வங்கி, கேள்வி வங்கிகளைச் சேமிக்கவும் நிர்வகிக்கவும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், கேள்வி அணுகல் தணிக்கை செய்யக்கூடிய பாதையுடன் சேதமடையாத சேமிப்பு போன்ற பல அடுக்கு அணுகுமுறையை ராதாகிருஷ்ணன் குழு ஆராய வேண்டும். பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரம், ஏமாற்று முயற்சிகளைத் தடுக்க கைரேகை, முக அங்கீகாரம், விழித்திரை ஸ்கேன் மற்றும் உயிரோட்டத்தைக் கண்டறிதல் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். தகவமைப்பு சோதனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான கேள்விகளை வழங்குவதன் மூலம் வினாத்தாள் கசிவு அபாயத்தைக் குறைக்கவும்.  தேர்வுகளை வழங்க கணினியைப் பயன்படுத்தவும், ஒன்றிய  சேவையகங்களின் மீதான நம்பிக்கையை குறைக்கவும் மற்றும் சாத்தியமான விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு (Distributed Denial-of-Service (DDoS)) சைபர் தாக்குதல்களின் தாக்கத்தை குறைக்கவும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பதில் சரிபார்ப்பு மாணவர்களிடையே ஏமாற்றுதல் அல்லது கூட்டுறவைக் குறிக்கும் வடிவங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பயன்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைத் தடுக்கவும் முடிவுகளை வெளியிடுவதற்கு பிளாக் செயின் (blockchain) தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தலாம்.

Share: