வாக்குப்பதிவு நடத்தைக்கு ஏற்ப பகுதிகளை அடையாளப்படுத்துவதைத் தவிர்க்க, மொத்தமாக்கல் இயந்திரம் (totaliser) பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் பலமுறை முன்மொழிந்துள்ளது. இது பொதுநலனுக்கு பெரிதாக உதவாது என்று அரசாங்கம் வாதிடுகிறது.
தேவேஷ் சந்திர தாக்கூர் சீதாமர்ஹி மக்களவைத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பாக போட்டியிட்டார். செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) மீறியதாக அவர் மீது நடவடிக்கை ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது தாக்கூர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். "அவர்களில் (குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) இங்கு வர விரும்புவோர், தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிடலாம். ஆனால், எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்" என்று கூறினார். தனக்கு வாக்களிக்காத சமூகத்தினர் எந்த வித உதவியை தன்னிடம் இருந்து எதிர் பார்க்கவேண்டாம் என்று சர்ச்சை கூறிய வகையில் கருத்து கூறினார். தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காததே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது கருத்துக்கள் ஜனநாயக கொள்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசியலமைப்பு பாத்திரத்திற்கு எதிராக இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இது குறிப்பிட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் தாக்கூரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. விமர்சனங்களை தவிர்ப்பதற்கு அறிக்கைகளை வெளியிட்டது. தொகுதியில் தோல்வியடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடுமையாக பதிலடி கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, ஒரு தலைவர் மக்கள் பிரதிநிதியாகிறார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி கூறியது. ஒரு தலைவர் ஜாதி, சமூகம் பார்க்காமல் அனைவருக்கும் பணி செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவு
பாரபட்சமற்ற தேர்தலின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், வாக்காளர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சமின்றி வாக்களிக்கலாம். பழிவாங்கும் அரசியலை தடுக்க தேர்தல் நடத்தை விதி, 1961-ஆம் ஆண்டு விதி 56-ல் வாக்காளர் ரகசியம் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது பழிவாங்கும் அரசியலையோ அல்லது வாக்கு பேரத்தையோ தடுப்பதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் “வாக்காளர் எந்த அடையாளத்தையோ அல்லது எழுத்தையோ வாக்குச் சீட்டில் வைத்திருந்தால் அதை நிராகரிக்க வேண்டும்” என்று நடத்தை வீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின் போது, உள்ளூர் வாக்குப்பதிவு முறைகளின் அடிப்படையில் வாக்காளர்களை குறிவைப்பதைத் தடுக்க வெவ்வேறு பெட்டிகளில் இருந்து வாக்குச் சீட்டுகள் கலக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அறிமுகப்படுத்தப்பட்டதால், வாக்குச்சீட்டுகளை கலப்பது சாத்தியமில்லை. இது வாக்களிக்கும் நடத்தையின் அடிப்படையில் பகுதிகளை அடையாளம் காண்பதைத் தடுக்க மொத்தமாக்கல் இயந்திரம் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.
வாக்குச்சாவடி அளவிலான வாக்குப்பதிவு முறைகளை மறைக்கும் உத்தியாக டோட்டலைசர் (மொத்தமாக்கும் எந்திரம்) 2007-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிந்தைய வாக்காளர்களைத் துன்புறுத்துதல் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உள்ளீட்டைக் கொண்டு மொத்தமாக்கல் இயந்திர கருத்தைச் செம்மைப்படுத்தினர். அவர்கள் அதை 2008-இல் அரசியல் கட்சிகளுக்கு நிரூபித்துள்ளனர். அவர்கள் அதன் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தனர். மார்ச் 2009-ல், மேகாலயா மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் மொத்தமாக்கல் இயந்திரம் சோதிக்கப்பட்டது. அப்போதிருந்து, மொத்தமாக்கல் இயந்திரத் திட்டம் தேர்தல் ஆணையம், அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டது. அரசாங்கம் 2014-ஆம் ஆண்டு வரை முடிவை தாமதப்படுத்தியது. இறுதியில் அதை ஆதரிக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2011-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவில் 11919/2011 மொத்தமாக்கல் இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான விதிகளை திருத்துவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அதை செயல்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என்று அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தேர்தல் ஆணையம் சுமார் நான்கு மாதங்கள் ஆகும் என்று பதில் அளித்தது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகஸ்ட் 2013-ல், 1961 விதிகளை திருத்துமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஏப்ரல் 2014-ல், யோகேஷ் குப்தா உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு (Yogesh Gupta v. EC) எதிராக ரிட் மனுவை 422/2014 தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் தனித்தனியாக அறிவிக்காமல், ஒட்டுமொத்தமாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. வாக்காளர்களை மிரட்டுவதற்கு அரசியல் கட்சிகள் பூத் வாரியான முடிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் வாக்காளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்று வாதிட்டனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் ஜூன் 2014-ல் ஒரு எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மொத்தமாக்கல் இயந்திர திட்டத்திற்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. விதி திருத்தங்கள் ஏன் தேவை என்றும், அவை இல்லாமல் மொத்தமாக்கல் இயந்திரம் பயன்பாட்டை செயல்படுத்த முடியுமா என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேட்டது. விதி திருத்தங்கள் அவசியம் என்று தனது கருத்துக்களை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அரசியல் கட்சிகளின் கருத்து
இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India) தனது 255-வது அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போது மொத்தமாக்கல் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை ஆதரித்தது. இருப்பினும், பிப்ரவரி 2016-ஆம் ஆண்டு யோகேஷ் குப்தா வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரத்தில், மொத்தமாக்கல் இயந்திரம் பயன்படுத்துவது பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கவில்லை என்று அரசாங்கம் வாதிட்டது. வாக்காளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு, வாக்கு எண்ணிக்கையின்போது மொத்தப் புள்ளிகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்பியது. மார்ச் 2016-ல், மொத்தமாக்கல் இயந்திரத்தைப் பற்றி விளக்குவதற்காக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது.
பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை மொத்தமாக்கல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கட்ட அறிமுகத்தை பரிந்துரைத்தது. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
அக்டோபர் 2017-ல், உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய ரிட் மனு (W.P (C) எண். 927/2017 அஷ்வினி குமார் உபாத்யாய் எதிர். யூனியன் ஆஃப் இந்தியா) தாக்கல் செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின்போது மொத்தமாக்கல் இயந்திரத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு முந்தைய மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் மொத்தமாக்கல் இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) இருந்து சாத்தியமான தரவு கசிவுகள் குறித்து அரசாங்கத்தின் சட்டக் குழு கவலை தெரிவித்தது. மார்ச் 2018-முதல், இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. நமது விருப்பங்களை சமாளிக்க தொழில்நுட்பம் உதவுமா என்பது பற்றிய விவாதத்தை இது அதிகரிக்கிறது.
அசோக் லவாசா, இந்திய தேர்தல் ஆணையராக (Election Commissioner of India) பொறுப்பு வகித்தவர்.