பெரிய நிக்கோபார் தீவில் ₹72,000 கோடி திட்டம் பற்றி . . .

 அனைவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் உள்கட்டமைப்புத் திட்டத்தை (infrastructure project) ஒன்றிய அரசு தொடங்கக் கூடாது.


அந்தமான் நிக்கோபார் தீவில் ₹72,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டத்திற்கான வன அனுமதி ஆவணங்களை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இந்தத் திட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance government (NDA)) அரசாங்கத்தின் முக்கிய முயற்சியாகும். இந்த ஆய்வு குறித்து பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள அரசாங்கத்திற்கு இந்த திட்டம் முக்கியமானது. அரசாங்கம் எடுக்க வேண்டிய சிக்கலான முடிவுகளை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த முடிவுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தை கவனமாக கையாளுதல்  மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.


அந்தமான் நிக்கோபார் தீவில்  இந்தத் திட்டம் பல முன்னேற்றங்களை உள்ளடக்கியது. இவை ஒரு ஊர்தி மாற்று துறைமுகம் (trans-shipment port), ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு நகர வளர்ச்சி மற்றும் 450 MVA எரிவாயு மற்றும் சூரிய அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் போன்றவை திட்டத்தின் முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.  இந்தத் திட்டம் 130 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பழமையான காடுகளை உள்ளடக்கும். இது ஒரு நிபுணர் குழு திட்ட நிலை-1 சுற்றுச்சூழல் அனுமதி, தேவையான ஒப்புதலை வழங்கியுள்ளது.


ஆகஸ்ட் 2023-ல், அந்தமான் நிக்கோபார் தீவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் பற்றி அரசாங்கம் மக்களவையில் தெரிவித்தது.  இத்திட்டத்திற்காக 9.6 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் என்று அரசாங்கம் கூறியது. இந்த இழப்பை ஈடுகட்ட ஹரியானாவில் உள்ளதைப் போல் மரங்களை நட அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஹரியானாவின் சுற்றுச்சூழல் மண்டலம் நிக்கோபார் தீவுகளில் இருந்து வேறுபட்டது. இத்திட்டம் நிக்கோபார் தீவுகளில் உள்ள கலாத்தியா விரிகுடாவை பாதிக்கும். இந்த விரிகுடா தோல் முதுகு ஆமை (leatherback turtle) உட்பட பல அரிய உயிரினங்களின் தாயகமாகும். இந்தத் திட்டம் இந்த இனங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது.


மலாக்கா ஜலசந்தியிலிருந்து (Malacca Strait) 90 கி.மீ தொலைவில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவின் இராஜதந்திர இடத்தைப் பயன்படுத்துவதே அதன் இலக்கு என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த ஜலசந்தி இந்தியப் பெருங்கடலுக்கும் தென் சீனக் கடலுக்கும் இடையிலான முக்கியமான கடல் வழி பாதையாகும். இருப்பினும், விமர்சகர்கள் மற்றும் சில அரசாங்க ஆலோசகர்கள் திட்டத்தின் உண்மையான கவனம் சுற்றுலாவை மேம்படுத்துவதாக என்று  நம்புகின்றனர்.


பொதுவாக சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகள் பற்றிய தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படும். ஆனால், சுற்றுச்சூழல் கொள்கைகளை கண்காணிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம், திட்டம் குறித்து எந்த கருத்தும் கூறாமல் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. அவர்கள் உள்ளூர் ஷொம்பென் பழங்குடினரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவில்லை.  


அரசியல் சாசன அமைப்பான பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம், மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. கூடுதலாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Commission for Scheduled Tribes), வன அனுமதி அனுமதிகள் குறித்து அறிக்கை அளிக்க, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர் தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த அறிக்கையும் பொது வெளியில் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆபத்தானது. அரசாங்கம் தனது புதிய ஆணையைப் பயன்படுத்தி உடனடியாக திருத்தங்களைச் செய்ய வேண்டும்.


Share: