ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்திய விவசாயத்தை எவ்வாறு மாற்ற முடியும்? -அசோக் குலாட்டி

 விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்வதை விட மேலானது என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை அவர் சமாளிக்க வேண்டும்.


புதிதாக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் (மோடி 3.0) வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை (Ministry of Agriculture and Farmers Welfare) மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Rural Development) தலைவராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பல கிராமப்புற இடங்களை இழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக பணியாற்றிய சிவராஜ் சிங் சவுகான் அனுபவம் கொண்டவர். 2005-06 முதல் 2023-24 வரையிலான அவரது பதவிக்காலத்தில், மத்தியப் பிரதேசம் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. அதன் ஒட்டுமொத்த ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ ஆண்டுதோறும் 7% வளர்ந்தது, அதன் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 6.8% வளர்ச்சியடைந்தது. மத்தியப் பிரதேசத்தின் இந்த வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசிய சராசரியான 6.5% மற்றும் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% ஐ விட அதிகமாகும்.


இப்போது அவருக்கு முன்னால் உள்ள சவால், அகில இந்திய வேளாண்-ஜிடிபி வளர்ச்சியை ஆண்டுக்கு 5-சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க முடியுமா? அது எப்படி முடியும்?


1. விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்: விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்வதைவிட அதன் தேவை அதிகம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இது உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அமைப்பாகும். தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும் அவர் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். தட்பவெப்பநிலை- நவீன  விவசாயத்தில் முதலீடு செய்வது முக்கியம். இதில் வெப்ப-எதிர்ப்பு பயிர் வகைகளை உருவாக்குதல் மற்றும் "ஒரு துளிக்கு அதிக பயிர்" (“more crop, per drop”) பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு அதிக மகசூலை அளிக்கும் நீர்-திறனுள்ள விவசாய நுட்பங்களைப் பின்பற்றுதல் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, அவர் விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வெளித் திட்டங்களுக்கான செலவினங்களை கணிசமாக அதிகரிக்க வேண்டும். தற்போது, ​​இந்த செலவு விவசாய உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அவர் அதை குறைந்தபட்சம் 1 சதவீதமாக உயர்த்த வேண்டும். சமீபத்திய ஆய்வுகளின் படி, அத்தகைய முதலீடுகளின் வருமானம் பத்து மடங்கு அதிகமாகும்.


2. தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளுக்கான அணுகல்: உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளை விவசாயிகள் அணுக முடியும் என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் வருமானம் உலகளாவிய தரத்தை பூர்த்தி இயலாது. இருப்பினும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உதவ, அவர் மற்ற அமைச்சர்களை வலியுத்த வேண்டும். அவர்களில் பலர் நுகர்வோருக்கு உணவு விலைகளை குறைவாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இது பெரும்பாலும் விவசாயிகளின் நிதி நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏற்றுமதித் தடைகள், வர்த்தகர்கள் மீது இருப்பு வரம்புகள், அரசு பங்குகளை விலைக்குக் குறைவாக விற்பது மற்றும் எதிர்கால சந்தைகளை நிறுத்தி வைப்பது போன்ற கொள்கைகள் விவசாயிகளுக்கு பாதகமாக உள்ளன. கொள்கையில் இந்த சார்புநிலையை சமாளிப்பது ஒன்றிய அமைச்சர் சவுகானுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.


வெங்காய ஏற்றுமதியை அனுமதிப்பதன் மூலம் இந்த நடவடிக்கையை அவர் தொடங்க வேண்டும். மஹாராஷ்டிராவின் வெங்காயம் விளையும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போதுள்ள ஏற்றுமதி தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயப் பிரச்சினையைத் தீர்த்த பிறகு, அவர் படிப்படியாக அரிசி ஏற்றுமதியை அனுமதிக்கலாம். நெல் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரம் மற்றும் மின்சார மானியங்களின் செலவுகளை ஈடுகட்ட அரிசிக்கு 15 முதல் 20 சதவீதம் ஏற்றுமதி வரியைச் சேர்ப்பது குறித்து அவர் பரிசீலிக்கலாம்.


3. மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குங்கள்: அதிக மதிப்புள்ள பழங்கள், காய்கறிகள், பால், பால் பொருட்கள், மீன்பிடி மற்றும் கோழி உற்பத்தியை அதிகரிக்க, பெரிய நகரங்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுடன் பண்ணைகளை இணைக்கும் திறமையான மதிப்பு சங்கிலிகளை நிறுவ மற்ற அமைச்சகங்களுடனான ஒருங்கிணைப்பு முக்கியமானது. இந்த மதிப்புச் சங்கிலிகளை உருவாக்க ஒழுங்கமைக்கப்பட்ட தனியார் துறைகள் அல்லது கூட்டுறவு/விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்களை அழைப்பது அவசியம். தொழில்களில் பயன்படுத்தப்படும் இந்தியாவில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தைப் (PRODUCTION LINKED INCENTIVE SCHEME (PLI)) போன்ற சலுகைகளை வழங்குவது அல்லது பால் மதிப்பு சங்கிலிகளுக்கான அமுல் மாதிரியுடன் இந்தியாவின் அணுகுமுறையைப் பின்பற்றுவது பங்கேற்பை ஊக்குவிக்கும். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.


TOP திட்டத்தில் தொடங்கி தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மற்றும் அவற்றின் மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவது உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஒரே மாதிரியாக பயனளிக்கும்.


4. உர மானியத்தை மாற்றுதல்: அவர் பிரதமரையும் மற்ற அமைச்சரவை உறுப்பினர்களையும் வற்புறுத்த முடிந்தால், உர மானியத்தை அவரது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு மாற்ற வேண்டும். தற்போது, ​​உர மானியம் 2023-24ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) ரூ. 1.88 டிரில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மொத்த வரவு-செலவுத் திட்டத்தைவிட அதிகமாகும். இந்த மானியத்தை இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் நிர்வகிக்கிறது, இது விவசாயிகளுடன் நேரடியாக ஈடுபடவில்லை. தற்போதைய உர மானியக் கொள்கையில் யூரியாவுக்கு (80 முதல் 90 சதவீதம்) அதிக மானியம் வழங்கப்படுகிறது மற்றும் டிஏபி மற்றும் எம்ஓபிக்கு (20 முதல் 25 சதவீதம்) சற்றே குறைவாக மானியம் வழங்கப்படுகிறது. இந்தக் கொள்கையானது மண்ணில் உள்ள நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), மற்றும் பொட்டாசியம் (K) அளவுகளை கணிசமாக சமநிலைப்படுத்தவில்லை. இதன் விளைவாக, 1970-களில் 10:1-க்கும் அதிகமாக இருந்த தானியங்கள் மற்றும் உரங்களின் விகிதம் சுமார் 2:1 ஆகக் குறைந்துள்ளது.


கூடுதலாக, சிறுமணி யூரியா மூலம் வழங்கப்படும் நைட்ரஜனில் 35-40 சதவிகிதத்தை மட்டுமே தாவரங்கள் உறிஞ்சுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மீதமுள்ளவை நைட்ரஸ் ஆக்சைடாக சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது 100 ஆண்டுகளில் கார்பன்-டை-ஆக்சைடை விட 273-மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. முக்கியமாக, இந்தக் கொள்கையானது வளிமண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் யூரியாவுக்கு மானியம் கொடுப்பது போன்றது. மானியத்தை நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தி, உர விலையை தாராளமாக்க வேண்டும். இரசாயன உரங்கள், உயிர் உரங்கள் அல்லது இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் விருப்பத்தை அனுமதிக்கும் வகையில், சமமான மதிப்புள்ள டிஜிட்டல் உர படிவம் மூலம் அரசாங்கம் வெளியிடலாம். இருப்பினும், இந்த மாற்றத்திற்கு கவனமாகத் திட்டமிடல் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தை செயல்படுத்த இப்போதே தொடங்க வேண்டும். மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த மாற்றங்களை செயல்படுத்த முடிந்தால், அவர் இந்திய விவசாயத்தின் நிலையை கணிசமாக மேம்படுத்த முடியும். இருப்பினும், இந்த முயற்சிகளுக்கு கவனமாக திட்டமிடல் மற்றும் பிற அரசுத் துறைகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.


Original article : 

https://indianexpress.com/article/opinion/columns/ashok-gulati-writes-how-shivraj-singh-chouhan-can-transform-indian-agriculture-9410569/
Share: