2036 ஒலிம்பிக் போட்டி நடத்துநராக இந்தியா வெற்றியடைய ஒரு திட்டம் - மனுராஜ் சண்முகசுந்தரம்

 இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த அரசாங்கமும் மற்ற நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், சில மாநிலங்களில் உள்கட்டமைப்புக்கு  முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 


சுதந்திரதின உரையில், பிரதமர் நரேந்திர மோடி 2036-ஆம் ஆணடில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு என்றும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவித்தார். இது ஒரு துணிச்சலான அறிவிப்பு. இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தியதில்லை. உலக தடகள அரங்கில் இந்தியா எப்போதும் பின்தங்கிய செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த தடம் மற்றும் கள உள்கட்டமைப்பு குறைவாகவே உள்ளது. 


விளையாட்டுத் துறையில் நாட்டின் வலிமை வளர்ந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் நாட்டு மக்களிடையே மிகுந்த மரியாதையைப் பெறுகிறார்கள். இந்திய விளையாட்டு ஈடுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், இந்தியா தனது ஒலிம்பிக் முயற்சியில் வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பது நாடு அதன் எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருமித்த கருத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் பொறுத்தது. 


எதிர்கால புரவலரைத் தேர்ந்தெடுப்பது 


ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது ஒரு அசாதரண முயற்சி. உதாரணமாக, பாரிசில் '32 விளையாட்டுகளில் (நான்கு கூடுதல் விளையாட்டுகள் உட்பட) 329 பதக்க நிகழ்வுகள் இருந்தன. அவை உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களை ஒரே மேடையில் கொண்டு வந்தன. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. 2019-ஆம் ஆண்டு முதல், நடத்துநர் ஏலத்திற்கான செயல்முறை முழுமையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. 


2016-ஆம் ஆண்டு  ரியோ மற்றும் 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (International Olympic Committee (IOC)) கொண்டு வந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன. 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் நகரமாக பிரிஸ்பேனைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏல செயல்முறை 2021-ஆம் ஆண்டு முதன்முதலில் முயற்சிக்கப்பட்டது. 


போட்டியிடும் நகரங்கள் இப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக அமைப்பான ஃபியூச்சர் ஹோஸ்ட் கமிஷன் (Future Host Commission (FHC)) மூலம் ரகசிய பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளன. ஃபியூச்சர் ஹோஸ்ட் கமிஷன் வரம்பு ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அப்பாற்பட்டது. இது சாத்தியக்கூறு மதிப்பீடுகள், சுற்றுச்சூழல் அக்கறைகள் மற்றும் மனித உரிமைகள் தரங்களை ஆய்வு செய்கிறது. 2026-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ஹோஸ்ட் கமிஷன் தலைமையிலான உரையாடல் செயல்முறையின் முடிவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அதன் உறுப்பினர்கள் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக்  விளையாட்டுகளை நடத்த, நாடுகளைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள். 


 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாரா? 


2010-ஆம் ஆண்டில் புது தில்லி காமன்வெல்த் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய பின்னர், ஒலிம்பிக் லட்சியத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் தொடங்கியது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு குறியீடு ('Sports Code') மூலம் மத்திய அரசு விளையாட்டு சங்கங்களை சீர்திருத்தியது. அடிமட்ட அளவில் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் நோக்கில், கேலோ இந்தியா திட்டம் 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டுத் திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்சியகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 


கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டத்தின்கீழ், ஒன்பது முதல் 18 வயதுக்குட்பட்ட திறமையான நபர்களை உருவாக்கவும் அடையாளம் காணவும் ஒரு உந்துதல் உள்ளது. 

திறமையான நபர்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட குழு, கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குகிறது. பின்னர், அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 28 இந்திய விளையாட்டு வீரர்கள் கேலோ இந்தியா தடகள வீரர்கள் ஆவர். 


ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன? 


மாநிலங்கள் மற்றும் நிகழ்வுகள் 


விளையாட்டு என்பது மாநில அரசின் அம்சமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியல் 33வது பதிவின் கீழ் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், உள்கட்டமைப்பில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 


சமீபத்தில், தமிழக அரசு சென்னையின் புறநகரில் உலகளாவிய விளையாட்டு நகரத்தை அறிவித்தது. பல்நோக்கு விளையாட்டரங்கம், கால்பந்து மைதானங்கள், தடகள ஓடுபாதைகள், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், வெலோட்ரோம், விளையாட்டு அறிவியல் வசதிகள், விளையாட்டு மருத்துவ மையம் மற்றும் பிற விளையாட்டு உள்கட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச வசதிகளை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடற்கரை விளையாட்டுகளில் தமிழகம் ஒரு பாய்ச்சலை எட்டியுள்ளது. சென்னையை ஒட்டிய கடலோர நகரமான கோவளத்தில் சர்வதேச சர்ஃபிங் (surfing) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் 2010-ஆம் ஆண்டில் சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டியும், 2014-ஆம் ஆண்டில் சர்வதேச படகோட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. 


ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஏலத்தை ஆதரிக்கிறேன்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி 


முன்கூட்டியே திட்டமிடல் 


ஒலிம்பிக்கை ஏற்பாடு செய்யும் நாடுகளுக்கு மிகப்பெரிய செலவு, விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும். இருப்பினும், பாரிஸ் தற்போதுள்ள இடங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டது. இதனால், மூலதனச் செலவைக் குறைத்தது. 


மத்திய அரசின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 390 ஒலிம்பிக் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. டெல்லி கிட்டத்தட்ட  161 உடன் இரண்டாவது இடத்திலும், ஒடிசா 153 உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 1995-ஆம் ஆண்டில் தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப்  போட்டிகளையும்,

2024-ஆம் ஆண்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திய தமிழ்நாடு, கணிசமான விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. 


இதேபோல், ஒடிசாவின் புவனேஸ்வர்,  சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation (FIH)) ஒடிசா ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை 2023-ஆம் ஆண்டு நடத்தியது. மேலும், அதன் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை காட்சிப்படுத்தியது. ஏற்கனவே விளையாட்டு உள்கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களை மேம்படுத்துவதன் மூலம், 2036-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சியை முன்னெடுக்க இந்தியா சிறந்த நிலையில் இருக்கும். 

ஒலிம்பிக் மற்றும் அதன் நிதி நெருக்கடி 


2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா முயற்சிக்கும்போது நிறைய சாதகமற்ற சூழ்நிலைகள் உள்ளன. அரசியல் அல்லது பிராந்திய எல்லைகளைக் கடந்து கட்சிகள், அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்கள் தேசிய நலனுக்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால், இதற்கான தலைமை முன்னெடுப்பு மத்திய அரசின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து வரவேண்டும்.  இந்தியாவின் ஒலிம்பிக் முயற்சி பங்குதாரர்களிடையே மற்றும் கூட்டுறவு அணுகுமுறையின் மூலம் கட்டமைக்கப்பட வேண்டும். 


மாநிலங்களின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏலத்தை திட்டமிட பல பங்குதாரர்கள், பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு, ஒடிசா போன்ற மாநிலங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நிதிக் கமிட்டி வகுத்துள்ள அளவுகோல்களுக்கு ஏற்ப குழு தனது சிறந்த திட்டத்தை முன்வைக்க வேண்டும்.  அத்தகைய முயற்சி மட்டுமே தேச நலனுக்காகவும், நாட்டின் திறனை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கும். 


மனுராஜ் சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) செய்தித் தொடர்பாளர்.



Original article:

Share: