இந்திய விண்வெளித் திட்டத்தில் ஒரு மைல்கல் -எம்.ரவிச்சந்திரன்

 இந்திய விண்வெளித் திட்டமானது இந்தியாவின் புவி அறிவியல் சேவைகளை மேம்படுத்துவதற்கான பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளது.


இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை (National Space Day) ஆகஸ்ட் 23, 2024 அன்று கொண்டாடுகிறது.  இது சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதைக் குறிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் கணிசமாக வளர்ந்துள்ளது. பல செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுதல் வாகனங்கள் நாட்டிற்குள் உருவாக்கப்பட்டு ஏவப்பட்டுள்ளன. 

புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) இந்தியாவில் பல்வேறு பூமி அமைப்பு தொடர்பான சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளில் விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கான தினசரி வானிலை அறிவிப்புகள், கனமழை, சூறாவளி மற்றும் சுனாமி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு கடல் நிலை மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த பயனுள்ள ஆலோசனைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. 

 

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், பத்ம விபூஷண் விருதைப் பெற்றவருமான விக்ரம் சாராபாய், விண்வெளி தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சி மற்றும் குடிமக்கள் நலனுக்காக பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருந்தார். மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் அறிவியலுக்கான சேவை நிறுவனமாகும். இது பூமியின் ஐந்து பகுதிகளான, வளிமண்டலம் (காற்று), நீர்க்கோளம் (பெருங்கடல்கள்), பாறைக்கோளம் (நிலம்), தாழ்வெப்பநிலைக் கோளம் (cryosphere) ஆர்க்டிக், அண்டார்டிக் மற்றும் இமயமலை பனிப்பாறைகளை கண்காணித்து ஆய்வு செய்கிறது. 


இந்த அமைப்பின் நோக்கம், தரவு சேகரித்தல்   மற்றும் அவற்றை  பகுப்பாய்வுடன் இணைந்து, வானிலை, காலநிலை, கடல், கடற்கரைகள் மற்றும் பூகம்பங்கள் தொடர்பான சூழ்நிலைகளில் எச்சரிக்கை  வழங்குவதாகும். துருவ அறிவியல் மற்றும் ஆழ்கடல் போன்ற லட்சியத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், அவற்றின் மூலம் அறிவியல் அறிவை விரிவுபடுத்துவதற்கு புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) செயல்படுகிறது. புவி அறிவியல் அமைச்சகம் (MoES) வழங்கும் தரவு மற்றும் சேவைகள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில்  பேரிடர் மேலாண்மைக்கு இன்றியமையாதவை ஆகும். 


விரிவடையும் பங்களிப்புகள் 


இந்தியாவில் புவி அமைப்பு அறிவியல் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் இந்திய விண்வெளிப் பணியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. 

முன்னாள் பெருங்கடல் மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்பட்ட புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES))  60 ஆண்டுகளுக்கு மேலாக செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் தரவு இப்போது முன்னெப்போதையும் விட, அதன் நடவடிக்கைகளில் மிகவும் விரிவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வளிமண்டல மற்றும் துருவ அறிவியலை விரிவுபடுத்துவதற்கான புவி அறிவியல் அமைச்சகம்  மேற்கொள்ளும் எதிர்காலத் திட்டங்களுக்கு செயற்கைக்கோள் தரவு அவசியம். இயற்கை நிகழ்வுகளின் துல்லியமான கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் கணிப்பு ஆகியவற்றிற்கான முக்கிய தரவுகளை செயற்கைக்கோள்கள் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. 


விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தவும் இந்தத் தரவு பயன்படுத்தப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார உறுதித்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஒரு நாடாக, இயற்கை பேரழிவுகள் குறித்த வெறும் எச்சரிக்கைகளை வழங்குவதில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் இது. அறிவியலும் மற்றும் சேவைகள் இப்போது பேரழிவுகளின் விளைவுகளைத் தணித்தல் மற்றும் அவற்றைத் எதிர்கொள்ளுதல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.


புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES))  அதன் ஒட்டுமொத்த பணிக்காக பல உலகளாவிய மற்றும் இந்திய செயற்கைக்கோள்களிலிருந்து தரவைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவு முதன்மையாக அதன் ஆறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. அவை,


  1. இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD))

  2. பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS))

  3. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM))

  4. நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF))

  5. கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Coastal Research (NCCR))

  6. துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Polar and Ocean Research (NCPOR)). 


இந்த தரவுகள் அனைத்தும் வானிலை, காலநிலை மற்றும் கடல் நிலையை கண்காணிக்க உதவுகிறது. மேலும், ஆலோசனைகள், எச்சரிக்கைகள் போன்றவற்றையும் வெளியிடுகிறது. எடுத்துக்காட்டாக, சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள், கடலில் இழந்த பொருட்கள், கடல் மாசுபாடு (பாசிக்கள் மற்றும் எண்ணெய் கசிவு உட்பட), கடலோர அரிப்பு, கரையோர மாற்றங்கள், கடலோர உயிர் புவி வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், துருவப் பகுதிகள் மற்றும் இமயமலை பனிப்பாறைகள் போன்றவை) பற்றிய ஆலோசனைகளை வழங்க தரவு பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவைகள் விவசாயம், கப்பல் போக்குவரத்து, மீன்வளம் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற துறைகளுக்கு பயனளிக்கின்றன. 


பூமியின் வளிமண்டலம், பெருங்கடல்கள் மற்றும் மேற்பரப்பைக் கண்காணிக்கவும் புரிந்துகொள்ளவும் தரவை வழங்கும் பூமி கண்காணிப்புகளுக்கு செயற்கைக்கோள்கள் அவசியம். இந்தியாவின் வானிலை ஆய்வுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (ISRO) பிப்ரவரி 2024 இல் தொடங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள், ஆகஸ்ட் 16, 2024 அன்று, இஸ்ரோ சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்-D3 ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) விண்ணில் செலுத்தியது. 


இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்காணிப்பதிலும், இந்தியாவின் காலநிலை ஆய்வுகள் மற்றும் கடலியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 6, 2024 அன்று, சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வரவிருக்கும் முதல் தேசிய விண்வெளி தினத்தை (ஆகஸ்ட் 23, 2024) புவி அறிவியல் அமைச்சகம் (MoES), இஸ்ரோவின் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS)) உடன் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தியது.



கடல் திட்டம்


கடல் கண்காணிப்பு மற்றும் காலநிலை மாற்ற ஆலோசனை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் ஆழ்கடல் பணியின் முக்கிய பகுதி, செயற்கைக்கோள் தரவை பெரிதும் நம்பியுள்ளது. கடல் மட்ட உயர்வு, சூறாவளிகள், புயல் எழுச்சிகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற காலநிலை மாறிகளின் நீண்டகால கணிப்புகளை உருவாக்கவும், இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் அவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்யவும் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National  Centre for Ocean Information Services (INCOIS))  விஞ்ஞானிகள் இந்தத் தரவைப் பயன்படுத்துவார்கள். துருவ பனி மற்றும் இமயமலை பனிப்பாறைகளை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதும் விரிவுபடுத்தப்படும். 


ஏனெனில், இவை கடல் மட்ட உயர்வு மற்றும் உலகளாவிய காலநிலை சுழற்சிகளில் முக்கிய காரணிகளாகும். துருவ மற்றும் வெப்பமண்டல பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் படிப்பதற்கான முன்கணிப்பு மாதிரிகளின் துல்லியத்தை மேம்படுத்தவும், துருவப் பகுதிகளில் பாதுகாப்பான கப்பல் மற்றும் துருவ நடவடிக்கைகளுக்கான நிகழ்நேர கடல் பனி கண்காணிப்பை எளிதாக்கவும் பூமி கண்காணிப்பு தரவு உதவும். 


செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க புவி அறிவியல் அமைச்சகம் (MoES) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒத்துழைப்பு முக்கியமானது.  இந்த ஒத்துழைப்பு இயற்கைப் பேரழிவுகளுக்கு திறம்பட பதிலளிக்கவும், மதிப்புமிக்க பூமி அறிவியல் தொடர்பான சேவைகளை வழங்கவும் நாட்டை அனுமதிக்கிறது. ஒடிசாவில் ஒரு புதிய வளிமண்டல மற்றும் விண்வெளி ஆராய்ச்சி வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது பருவமழை மற்றும் இடியுடன் கூடிய மழை கணிப்புகளை மேம்படுத்த உதவும். 


இந்த வசதி  புவி அறிவியல் அமைச்சகம் (MoES), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். 

சுனாமி மிதவைகளுடன் விரைவான இருவழி தொடர்புக்கு ஏதுவாக டிரான்ஸ்பாண்டர்களுடன் (Transponder) கூடிய அதிநவீன ஜிசாட்-6 (GSAT-6) செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்சாட் நான்காம் தலைமுறை, ரிசாட் -1பி (RISAT-1B) மற்றும் ஓசியன்சாட் -3 ஏ (Oceansat-3A) செயற்கைக்கோள்களை இந்தியா விரைவில் விண்ணில் செலுத்த உள்ளது. 


சிறந்த வானிலை முன்னறிவிப்புக்காக, குறிப்பாக கடுமையான வானிலை நிகழ்வுகளுக்காக கூடுதல் விவரங்கள் அமைக்கப்படும். மேலும், துல்லியமான ஆலோசனைகளுக்காக தற்போதுள்ள சென்சார்கள் (sensors) மேம்படுத்தப்படும். 


உள்நாட்டிலேயே செயற்கைக்கோள்களை உருவாக்குதல் மற்றும் விண்ணில் செலுத்துதல் ஆகியவற்றில் தற்போது தனி கவனம் செலுத்தப்படுவது, தற்போதுள்ள புவியின் செயல்முறைகள் குறித்த அறிவியல் புரிதலை விரிவுபடுத்தும். 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 


2047-ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' (Viksit Bharat’) என்ற பிரதமரின் கனவை அடைய புவி அறிவியல் அமைச்சகம் (MoES) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். மிகவும் மேம்பட்ட செயற்கைக்கோள் சென்சார்களை இணைத்தல், தெளிவுத்திறனை மேம்படுத்துதல், தரவு செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் செயற்கைக்கோள் தரவை நில அடிப்படையிலான ஆய்வுகளுடன் நிகழ்நேர ஒருங்கிணைப்பை இணைத்தல் ஆகியவை பெரிய மாற்றங்களாக இருக்கலாம். 


செயற்கைக்கோள்கள் மற்றும் சேவைகள் 


புவி அறிவியல் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.




இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (Indian National Satellite System( INSAT))   


வானிலை ஆய்வுகளுக்கான மேம்பட்ட இமேஜிங் மற்றும் ஒலி சென்சார்களைக் கொண்ட பல்நோக்கு புவிநிலையான செயற்கைக் கோள்களைக் கொண்டது.  வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மேகமூட்டம் உள்ளிட்ட நிகழ்நேரத்தில் வானிலை நிலைமைகளைக் கண்காணித்தல். முக்கியமாக சூறாவளிகள், பருவமழை, மழைப்பொழிவு மற்றும் புயல் உருவாக்கம் ஆகியவற்றை கணிக்க பயன்படுகிறது. 



புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் (Earth observation satellites (OCEANSAT))


கடல் கண்காணிப்புகளுக்கான பல்நோக்கு புவிநிலையான செயற்கைக்கோள்கள் அமைப்புகளைக் கொண்டது.   கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் குளோரோபில் நிறம் உள்ளிட்ட கடல் நிலையை நிகழ்நேரத்தில் கண்காணித்தல். 


ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (Radar Imaging Satellite (RISAT))   


பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் படங்களுக்கான அனைத்து வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்களை கொண்டது.   மண்ணின் ஈரப்பதத்தை கண்காணித்தல் மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. 


வரைபட செயற்கைக்கோள் (Cartosat) 


பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன், பஞ்சரோமாடிக் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜிங்கிற்கான தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களை கொண்டது. நில மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் வரைபடமாக்குதல், வெள்ளம் மற்றும் கரையோர மாற்றங்களுக்கான வரைபடங்களை உருவாக்குதல் பணிகளை மேற்கொள்கிறது.



சாரல் (SARAL)   


இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம் இடையேயான ஒரு ஒத்துழைப்பு பணி, தரவு சேகரிப்புக்காக செயல்படுகிறது.  கடல் மட்ட உயர்வு, கடல் சுழற்சி மற்றும் அலை உயரங்களை கண்காணித்தல், குறிப்பாக புயல் எழுச்சிகள் மற்றும் சுனாமிகளை முன்னறிவிப்பு பணிகளை மேற்கொள்கிறது.


ஸ்கேட்டரோமீட்டர் செயற்கைக்கோள்-1 (SCATSAT-1)


கடல் மற்றும் வானிலை ஆராய்ச்சிக்காக செயல்படுகிறது.   சூறாவளிகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளைக் கண்காணித்தல் மற்றும் கணித்தல், வானிலை முன்னறிவிப்புக்கான மாதிரிகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை ஆராய்ச்சிக்கான தரவை வழங்குதல், குறிப்பாக காற்று திசையன் தரவு வடிவங்கள் (வேகம் மற்றும் திசை) மற்றும் கடல் நீரோட்டங்கள் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுகிறது. 


எம்.ரவிச்சந்திரன், செயலாளர், மத்திய புவி அறிவியல் அமைச்சகம்.



Original article:

Share: