ஒடிசா அரசு, மின்னல் தாக்குதலுக்கு எதிராக ஏன் பனை மரங்களை நட திட்டமிட்டுள்ளது? -சுஜித் பிசோயி

 ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டம் தற்போது அரசுக்கு உள்ளது.


ஜூலை மாதம், ஒடிசா அரசு ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 19 லட்சம் பனை மரங்களை நட திட்டமிட்டுள்ளனர். மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. மின்னல் தாக்குதல்கள் 2015-ல் மாநிலத்துக்குரிய பேரிடராக (state-specific disaster) அறிவிக்கப்பட்டது.


ஒடிசாவில் மின்னல் தாக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?


கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கத்தால் மொத்தம் 3,790 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய மூன்று நிதியாண்டுகளில் மட்டும் 791 பேர் மின்னல் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் 2, 2023 அன்று இரண்டு மணி நேர இடைவெளியில் 61,000 மின்னல் தாக்குதல்களை மாநிலம் பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.


2021-22ல் மின்னல் தாக்குதலால் 282 பேரும், 2022-23ல் 297 பேரும், 2023-24ல் 212 பேரும் உயிரிழந்துள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் (Special Relief Commissioner’s office) தெரிவித்துள்ளது. மயூர்பஞ்ச், கியோஞ்சார், பாலசோர், பத்ரக், கஞ்சம், தேன்கனல், கட்டாக், சுந்தர்கர், கோராபுட் மற்றும் நபரங்பூர் போன்ற மாவட்டங்களில் மின்னல் தொடர்பான இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளன.


இதற்கு, மாநில அரசு 2015 முதல் மின்னல் தாக்குதலால் உயிரிழந்த நபருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கியது.


ஒடிசாவில் மின்னல் தாக்குதல்கள் குறிப்பாக ஏன் கவலையளிக்கின்றன?


அறிவியல் ரீதியாக, மின்னல் என்பது வளிமண்டலத்தில் உள்ள மின்சாரத்தின் விரைவான மற்றும் பரந்த வெளியேற்றமாகும். இதில் சில மின்சாரம் பூமியை நோக்கி செலுத்தப்படுகிறது. ஒடிசா வெப்பமண்டல மண்டலத்தில் (tropical zone) அமைந்துள்ள ஒரு கிழக்கு கடற்கரை மாநிலமாகும். அதன் வெப்பமான, வறண்ட காலநிலை மின்னல் தாக்குதலுக்கான சரியான கலவையை வழங்குகிறது.


2023-2024 ஆண்டு மின்னல் அறிக்கை, காலநிலை தாங்கும் கண்காணிப்பு அமைப்புகள் மேம்பாட்டு குழுமம் (Climate Resilient Observing Systems Promotion Council (CROPC)) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (Indian Meteorological Department (IMD)) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. இது, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அளவில் இந்தியாவில் மேகத்திலிருந்து தரைக்கு (cloud-to-ground (CG)) மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. 


2021-ல் இந்திய வானிலை ஆய்வுத் துறையால் (IMD) வெளியிடப்பட்ட "ஒடிசாவில் காலநிலை மாற்றம் மற்றும் மின்னல் நிகழ்வுகள்: ஒரு ஆய்வு ஆராய்ச்சி" (Climate Change and Incidence of Lightning in Odisha: An Exploratory Research) என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையானது, காலநிலை மாற்றமானது மின்னல் தாக்குதல்களை அதிகப்படுத்துகிறது. நீண்டகால வெப்பமயமாதலின் ஒவ்வொரு டிகிரி செல்சியஸுக்கும், மின்னல் செயல்பாடு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் உயர்கிறது என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது.


ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஃபகிர் மோகன் பல்கலைக்கழகத்தின் (Fakir Mohan University) புவியியல் பேராசிரியரான மனோரஞ்சன் மிஸ்ராவின் கூற்றுப்படி, இது மின்னலை பாதிக்கும் காலநிலை காரணிகளின் கலவையாகும். இந்த காரணிகளில் பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவமழை காலங்கள், கடல் வெப்பநிலையால் தாக்கப்படும் சூறாவளி நடவடிக்கைகள் மற்றும் வளிமண்டலத்தின் வெப்பச்சலன ஆற்றல் ஆகியவை அடங்கும்.


"ஒடிசா மாநிலத்தில் (இந்தியா) 2000 மற்றும் 2020-க்கு இடையில் மின்னல் தாக்குதலால் உயிரிழந்ததால் இதை முக்கிய ஆபத்தான பகுதிகளை வரைபடமாக்குதல்: புள்ளியியல் மற்றும் இடஞ்சார்ந்த பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பை குறைப்பதற்கான ஒரு கண்டறியும் அணுகுமுறை" என்ற கட்டுரையின் இணை ஆசிரியர் மிஸ்ரா கூறினார். இது பெரும்பாலும், மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏற்படும்.


எந்த பகுதி மக்கள் ஆபத்தில் உள்ளனர்?


மின்னல் தாக்குதல்கள் பெரும்பாலும், கிராமப்புறங்களில் 96% நிகழ்கின்றன. இந்த தாக்குதல்களால், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் போன்ற தினக்கூலிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒடிசா மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் விவசாயம் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். மேலும், திறந்தவெளிகளில் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். இதனால், மின்னல் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது.


பெரும்பாலான மின்னல் தாக்குதல்கள் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிகழ்ந்தன. இருப்பினும், ஜூன் முதல் அக்டோபர் வரையிலான உச்ச விவசாய பருவத்தில் பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்தன.


மின்னல் தாக்குதலுக்கு எதிராக ஒடிசா எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்?


பனை மரங்கள் மற்ற மரங்களை விட உயரமாக இருப்பதால் மின்னலை கடத்துவதில் சிறப்பாக உள்ளன. அவற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் சாறு உள்ளது. இது மின்னலை உறிஞ்சி தரையில் அதன் தாக்கத்தை குறைக்க அனுமதிக்கிறது.


சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் (Special Relief Commissioner’s office) முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு 7 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்துள்ளதுடன், வன எல்லையில் முதற்கட்டமாக 19 லட்சம் பனை மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


வல்லுநர்கள் இந்த முன்மொழிவு பற்றி கவலைகளை எழுப்பியுள்ளனர் மற்றும் சரியான தரவு பகுப்பாய்வு மூலம் ஆதரிக்கப்படும் ஒரு விரிவான மற்றும் அடிப்படையான உத்தியை கோரியுள்ளனர். ஒரு பனைமரம் 20 அடி உயரத்தை அடைய குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் தேவை என்பதையும் மிஸ்ரா சுட்டிக்காட்டினார். மின்னல் தாக்கியதால் சில மரங்கள் தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.


மின்னல் தாக்கங்களை முன்னறிவிப்பதற்காக ஒடிசாவில் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த எச்சரிக்கைகளை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், மின்னல் தாக்குதல்களின் சரியான கணிப்புகள் சாத்தியமில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். மின்னல் தாக்குதலின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து பொதுமக்களிடம் பரவலாக விழிப்புணர்வு தேவை. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது.



Original article:

Share: