வெள்ளம் முதல் வெப்ப அலைகள் வரை, மாநகராட்சிகளுக்கென தனி பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்குதல் -அமிதாப் சின்ஹா, ஆசாத் ரெஹ்மான்

 2005-ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மாற்றுவதற்கான புதிய மசோதா வியாழக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நகரங்களில் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (Urban Disaster Management Authorities (UDMAs)) உருவாக்குவதும் அடங்கும்.


வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற நகர அளவிலான பேரிடர்களைக் கையாள ஒவ்வொரு மாநிலத் தலைநகர் மற்றும் மாநகராட்சி கொண்ட நகரங்களிலும் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority (SDMA)) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் இந்த நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் பேரிடர் மேலாண்மையின் மூன்றாம் நிலையாக இருக்கும். மாவட்ட அளவில் ஏற்கனவே பேரிடர் மேலாண்மை அலகுகள் இருக்கும் போது, ​​நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் பல மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய நகரங்களின் தனிப்பட்ட தேவைகளில் கவனம் செலுத்தும்.


2005-ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மாற்றுவதற்கான புதிய மசோதா மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. நகரங்களில் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை உருவாக்குவது இந்த மசோதாவில் அடங்கும்.


ஒவ்வொரு மாநிலமும் மாநில பேரிடர் மீட்புப் படையை (State Disaster Response Fund (SDRF)) உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி, தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force( NDRF) மட்டுமே தேவைப்பட்டது, ஆனால் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் சொந்த தேசிய பேரிடர் மீட்புப் படைகளை வைத்துள்ளன. இப்போது, ​​அனைத்து மாநிலங்களும் அவற்றை வைத்திருக்க வேண்டும்.


நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறை நகராட்சி (UDMA) ஆணையரால் வழிநடத்தப்படும் மற்றும் நகர அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாகும். சமீபத்திய ஆண்டுகளில், பல நகரங்கள் பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, பெரும்பாலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்படுகிறது. மிக மோசமான உதாரணம் 2015-ல் சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பெரும் பகுதிகள் பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி,  400 பேர் பலியாகினர்.


2005-ஆம் ஆண்டு மும்பை வெள்ளத்திற்குப் பிறகு ஒரு இந்திய நகரத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுவாகும். சில மணிநேரங்களில் 900 மிமீ மழை பெய்தது. மும்பை மற்றும் பெங்களூருவும் கடந்த பத்தாண்டுகளில் இதேபோன்ற வெள்ளத்தை பலமுறை சந்தித்துள்ளன.


ஒரே பெருநகரத்திற்குள் மாவட்ட அளவிலான தனித்தனி திட்டங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, முழு நகரங்களுக்கும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்க உதவும். எனினும், மக்களவையில்  உள்ள அனைவரும் அரசின் திட்டத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி மசோதாவை எதிர்த்தார், அரசியலமைப்பின் கீழ் மத்திய அல்லது மாநில பாடங்களில் பேரிடர் மேலாண்மை குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டார்.  பேரிடர்களின் போது முதலில் பதிலளிப்பது உள்ளுராட்சி அமைப்புகளே என்பதைக் குறிப்பிட்டு, ஒரே மாதிரியான பட்டியலை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.



Original article:

Share: