இந்தியாவில் போட்டி மற்றும் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்துதல் -வல்லாரி துரோணராஜு

 பொருளாதாரத்தின் முக்கிய மையம் சந்தைகள் ஆகும். அவை பண்டமாற்று முறையிலிருந்து இன்றைய டிஜிட்டல் சந்தைகளுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.  இவை பொருட்களின் விலைகள் மற்றும் நுகர்வோர் விருப்பங்களை தீர்மானிக்கின்றன. காலநிலை மாற்றம் சந்தையின் விநியோகத்தை சீர்குலைக்கிறது. இது வழங்கல் மற்றும் தேவைக்கு இடையே சிக்கலை உருவாக்குகிறது. இதன் விளைவாக, நுகர்வோர் தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.


2023-ஆம் ஆண்டில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையானது நிலையான தன்மையை  நோக்கிய பெருநிறுவனங்களின் நடவடிக்கைகளில்  கவனம் செலுத்துகிறது. திருத்தப்பட்ட வணிக பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையின்படி (Business Responsibility and Sustainability Report), நிறுவனங்கள் தங்கள் முழு உற்பத்தி செயல்முறை சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என அறிவுறுத்தியது. இது நிறுவனங்களை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இவ்வறிக்கை இந்நிறுவனங்களின் சுற்றுச்சூழல் முயற்சிகள் பற்றிய தவறான கண்டோட்டத்தை  குறைக்கிறது மற்றும் அவற்றின் செயல்பாடுகளில் முழுவதும் நிலைத்தன்மை குறித்த முயற்சிகளை  உறுதி செய்கிறது.


உலகளவில், போட்டி அதிகாரிகள் (competition authorities) சில  சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தின் முன்னோடிகளாக இருப்பதன் தீமைகளை, போட்டியாளர்கள் நடுநிலையாக்க வேண்டுமா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் நிலைத்தன்மையும் அதன் இலக்குகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர். பல அதிகாரிகள் நிலைத்தன்மை குறித்த பரிசீலனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. போட்டியாளர்கள் நிலைத்தன்மையை ஒரு காரணமாக பயன்படுத்தக்கூடும் என்று அவர்கள் கருதினர். இருப்பினும், நிறுவனங்கள் ஒன்றாக நிலைத்தன்மை இலக்குகளைத் தொடர அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும். 


ஜப்பானின் தனிநிறுவன முற்றுரிமை எதிர்ப்பு சட்டம் (Anti Monopoly Act) ஒரு 'பசுமை சமூகத்தை' (green society) அடைவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.  இந்த வழிகாட்டுதல்கள் தனியார் வணிகங்கள் ஒத்துழைப்புடன் வழிநடத்த இவை உதவுகின்றன. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைத் தேடும் பெரும்பாலான நடவடிக்கைகள் போட்டியைக் கட்டுப்படுத்த வாய்ப்பில்லை என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் நுகர்வோருக்கு நன்மைகளை விளைவிக்கக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கின்றன.


ஐரோப்பிய ஆணையம் (European Commission) சமீபத்தில் கிடைமட்ட ஒப்பந்தங்கள் (horizontal agreements) குறித்த, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் வரைவை வெளியிட்டது. இந்த வரைவு நிலைத்தன்மை ஒப்பந்தங்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட பிரிவை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தங்கள் போட்டியை கடுமையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே அசாதாரண நிலைகள் உண்டாகும். அத்தகைய கட்டுப்பாடுகள், பொருள்களின் வடிவில் அல்லது பிரிவு 101 (1) இல் கூறப்பட்டுள்ளபடி போட்டியில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கலாம்.


இந்த வழிகாட்டுதல்களின் நோக்கங்கள் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நெகிழக்கூடிய உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவை ஆகும்.


சிங்கப்பூரில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஒத்துழைப்பு (Environmental Sustainability Collaboration ) வழிகாட்டல் குறிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (Competition and Consumer Commission of Singapore (CCCS)) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நோக்கங்களுக்கான ஒத்துழைப்புகளை எவ்வாறு மதிப்பிடும் என்பது குறித்த தெளிவை, வணிகங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், வணிகங்களுக்கு பொருத்தமான தகவல்களை வழங்குகிறது. இதனால், நிறுவனங்களின் வணிக போட்டிகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் ஒத்துழைக்க முடியும்.

நெதர்லாந்தில், வணிக நிறுவனங்களின் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்படாவிட்டாலோ அல்லது நிலையான உற்பத்தி நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என்றாலோ வணிகக் கூட்டமைப்பு எதிரான விதிகள் பொருந்தாது. நெதர்லாந்து நுகர்வோர் மற்றும் சந்தைகளுக்கான ஆணையம் (Netherlands Authority for Consumers and Markets), போட்டியை சற்று மட்டுப்படுத்தினாலும், சுற்றுச்சூழலுக்கு உதவக் கூடிய சில ஒப்பந்தங்களை அனுமதிக்கும் வகையில்,  ஒப்பந்தங்கள் இருக்கும் என்று கூறியுள்ளது.


பல நாடுகள் போட்டியாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் நிலைத்தன்மை கொள்கைகளைப் போட்டி சட்டத்தில் (competition law) சேர்த்துள்ளன. இதன் மூலம் இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) அதன் மதிப்பீடுகளில் நிலைத்தன்மை கொள்கைகளைச் சேர்ப்பது குறித்தும் ஆராயலாம்.  2070-ஆம் ஆண்டிற்குள்,  நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net-zero emissions) அடைய இந்தியா உறுதியளித்துள்ளது. இருப்பினும், 2023-ஆம் ஆண்டில், புவி வெப்பமடைதலுக்கு பங்களிப்பவர்களின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர், ரவ்னீத் கவுர் சமீபத்தில் இந்திய போட்டி ஆணையம்  சந்தைகளுக்கான நிலைத்தன்மை கொள்கைகளை ஆராயும் என்று கூறினார்.


கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இந்திய போட்டி ஆணையம்  ஒரு ஆலோசனையை வெளியிட்டது. அதில், கோவிட்-19 விநியோக முறைகளில்  இடையூறுகளை ஏற்படுத்தியதாக ஆணையம் ஏற்றுக் கொண்டது. சேவைகளின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்ய வணிகங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டது. போட்டிச் சட்டம் (Competition Act) 2002, பொருளாதாரத் தடைகளிலிருந்து வணிகங்களைப் பாதுகாப்பதற்கான குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. கோவிட்-19 போது ஏற்பட்ட பாதிப்புகளை   நிவர்த்தி செய்ய தேவையான திட்டங்களை மட்டுமே இந்திய போட்டி ஆணையம் கருத்தில் கொண்டது. நிலையான இலக்குகளுக்கான ஒத்துழைப்புகள் அல்லது பசுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு விலக்கு அளிப்பதற்கான ஆலோசனைகளை வெளியிடுவது குறித்த நடவடிக்கைகள்   இந்திய போட்டி ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது .


போட்டிச் சட்டம், 2002 இன் பிரிவு 49 (3) இன் கீழ்,  இந்திய போட்டி ஆணையம் நிலையான வணிகங்களுக்கான போட்டி விழிப்புணர்வை ஊக்குவிக்கலாம். போட்டி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதில் ஈடுபடலாம். போட்டிச் சட்டம் (2002) கீழ், நிலைத்தன்மை ஒப்பந்தங்கள் மற்றும் விலக்கு முறைகள் குறித்த வழிகாட்டுதல் குறிப்புகளை வெளியிடலாம்.


இங்கிலாந்தில், போட்டி மற்றும் சந்தை ஆணையம் மின்சார வாகன துறையில் சந்தை ஆய்வைத் தொடங்கியது. இந்த ஆய்வு புதுமை (innovation), அதிகத் தேர்வுகள், குறைந்த விலைகள், அதிக முதலீடு மற்றும் தர மேம்பாடுகள் ஆகியவற்றுடன் போட்டி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டது. பசுமை முயற்சிகள் மற்றும் சந்தை சாத்தியக்கூறு குறித்த, இந்த ஆய்வுகள் இந்திய சந்தைக்கு பயனளிக்கும். 2011-ம் ஆண்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) தனது பரிந்துரைகளை வெளியிட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, தொலைத் தொடர்புத் துறையை ஊக்குவிக்கும் நடைமுறைகளை பரிந்துரைத்தனர். இந்திய போட்டி ஆணையம் (CCI) எதிர்காலத்தில் தேசிய போட்டிக் கொள்கையில் நிலைத்தன்மை நடைமுறைகளைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்.


போட்டி என்பது நிலைத்தன்மையிலிருந்து தனித்து இருக்க முடியாது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் நிலைத்தன்மை கொள்கைகள் மூலம் புதுமையை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது தேவைப்படுகிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை இந்தியா அடைய, ஒவ்வொரு பொருளாதாரத் துறையும் பசுமையான உற்பத்தி முறைகளுக்கு பங்களிக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு புதுமையை மேம்படுத்தும் போட்டிக் கொள்கைகளை இந்திய போட்டி ஆணையம் செயல்படுத்த வேண்டும். இந்த போட்டிக் கொள்கைகள்,  வணிகச் சந்தைகளின் தோல்விகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் போது பொருளாதாரத்தை நிலையான முறையில் ஒருங்கிணைக்கும் செயல் முறைகளில் ஈடுபட வேண்டும். சில முறையான வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம், பொருளாதார நிலைத்தன்மையின் நன்மைகள், எதிர்மறை விளைவுகளை விட அதிகமாக இருக்கும். போட்டியாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன்  மூலம்  சந்தைகளில் நிலைத்தன்மைக்கு ஏற்ப நல்ல பலன்கள் ஏற்படும்.  


வல்லாரி துரோணராஜு கார்ப்பரேட் சட்டம் மற்றும் நிதி ஒழுங்குமுறை சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் (Corporate Law and Financial Regulation, Vidhi Centre for Legal Policy) ஆராய்ச்சியாளராக உள்ளார்.



Original article:

Share: