தற்போது இந்தியாவின் தேர்தல் செயல்முறை மாறுபாட்டைக் கண்டுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக செயல்முறை. அவர்களில் பாதிக்கும் மேல் பெண்களக இருந்தும், சில வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் தேர்தல் அறிவிப்புகளில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர். இருப்பினும், தினசரி 90 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவாகும் நாட்டில், 2,823 வேட்பாளர்களில் சிலர் மட்டுமே தங்கள் பிரச்சாரங்களில் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி உள்ளனர். இருந்தபோதிலும், அவர்கள் தினசரி நிகழும் வன்முறைகளை கருத்தில் கொள்ளவில்லை.
பெண்களில் 50% பேர் வீட்டுக்குள் வன்முறையைச் சந்திக்கின்றனர். மூன்று தலித் பெண்களில் இரண்டு பேர் வாழ்நாள் முழுவதும் பாலியல் வன்முறையை சந்திக்கின்றனர். அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையைக் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் வாக்காளர்களுக்கும் முறையானப் புரிதல்கள் இல்லை.
பாலின அடிப்படையிலான வன்முறை ஒரு தனிப்பட்ட செயலாகவேக் கருதப்படுகிறது. அரசியல்வாதிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியவர்களாகக் கருதப்படுகின்றனர். 200 மணி நேர நேர்காணல்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கையின் படி, நிறுவன வன்முறைகளில் உயிர் பிழைத்தவர்களின் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் பெரும்பாலும் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் வன்முறையின் ஆரம்ப செயலை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது.
பாலின அடிப்படையிலான வன்முறை (Gender-based violence) பெரும்பாலும் ஒரு சாதரண வன்முறைச் செயலாகத் தவறாகப் பார்க்கப்படுகிறது. இது அவர்கள் புகார் அளிக்க முன்வருவதற்கான முடிவை பாதிக்கிறது. உதாரணமாக, J-PAL அமைப்பின் 2019-ஆம் ஆண்டிற்கான அறிக்கை, பாலின அடிப்படையிலான வன்முறை புகார்கள் பெரும்பாலும் தவறானவை என்று இந்தியாவில் உள்ள 39% காவல்துறை அதிகாரிகள் கருதுவதாக தெரிவிக்கிறது. கடுமையான காவல்துறை அமைப்பு, நீண்ட மற்றும் அதிர்ச்சிகரமான நீதித்துறை செயல்முறை மற்றும் நீதிக்கான சிறிய நம்பிக்கையுடன், தொடர்ந்து வன்முறையில் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.
பெண்கள் தங்கள் தாங்க முடியாத சூழ்நிலையின் போது மட்டுமே நீதியைத் தேடுகிறார்கள். இரண்டு பெண்களில் ஒருவர் நெருங்கிய துணை மூலம் மட்டுமே வன்முறையை எதிர்கொள்கின்றனர். உலகிலேயே மிகக் குறைந்த விவாகரத்து விகிதங்களில் இந்தியா 1% ஆக உள்ளது. இந்தியாவில் 77% பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் வன்முறைகள் குறித்து அவர்களது நெருங்கிய உறவினர்களிடம் கூட கூறுவதில்லை என்று ஒரு அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
பட்டிலின பழங்குடியினர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த சமர்த்யா (Samarthya) நிறுவனத்தின் நிறுவனர் ரஞ்சிதா ஒரு எடுத்துக்காட்டைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒருமுறை ஒரு பெண் இரத்தம் வடியும் நிலையில் எங்களை அணுகினார். புகார் பதிவு செய்ய நாங்கள் அவளுடன் காவல் நிலையத்திற்குச் சென்றோம். மேலும், அவளிடம் தனியாகப் பேசுவதற்காக போலீஸார் எங்களை ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் புகாரைப் பதிவு செய்வதிலிருந்து அவளைத் தடுக்க முயன்றனர் மற்றும் எங்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பினர். அப்பெண் புகாரளிக்க விரும்பியபோது, நாங்கள் அப்பெண்னை வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்கள். இப்போது, அவர் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து வருவதால், இந்த வழக்கு அவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று எங்களிடம் கூறுகிறார்கள். நீதி அமைப்புடன் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உதாரணம் இந்த வழக்கு.
கிராமப்புறங்களில் உள்ள பிரச்சனைகள்
கிராமப்புறங்களில், ஆண் மற்றும் மேல் சாதியினர் ஆளும் பஞ்சாயத்துகள் போன்றவை பெண்கள் நீதியைத் தேடுவதற்கான கூடுதல் தடைகளை உருவாக்குகின்றன. விவாகரத்து முறையும் ஒரு தீர்வாக இருக்கும் என அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் 40 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்தங்கிய சமூகங்களில் இருக்கும் நபர்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள் இதில் அதிக சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
இந்தியாவில் நீதி கிடைப்பது நிறைய அநீதிக்கு வழிவகுக்கும் என்கிறார் ரஞ்சிதா. அதிகாரத்துவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீரான நிலையை உருவாக்குவதன் மூலம் இதை மாற்ற முடியும்.
பல ஆண்டுகளாக, சமூக நல அமைப்புகள், காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகளுக்கு, தகவல் அணுகுமுறையுடன் வழக்குகளை கையாள பயிற்சி அளித்து வருகின்றன. உதாரணமாக, புந்தேல்கண்டில் பெண்கள் தலைமையிலான குழுவான வணங்கா (Vanangna), பெண்கள் மற்றும் வன்முறையினால் பாதித்தவர்களை மையமாகக் கொண்ட செயல்முறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. நாம் இந்த முறைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வேண்டும். ஒரு நியாயமான அமைப்பை வடிவமைத்து விளிம்புநிலை சமூகங்களில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும்.
சட்டங்களும் அதன் செயல்முறைகளும்
இந்தியாவில் வன்முறைக்கு எதிராக பல சட்டங்கள் உள்ளன. ஆனால், அதன் செயல்முறை தடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், சமூகத்தில் வன்முறையை தடுக்க இயலாதவர்களாக இருக்கின்றனர். சட்ட செயல் முறைகளை மாற்றி அமைக்க நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வணங்கா (Vanangna) போன்ற அமைப்புகள் மூலம் அவற்றை மாற்ற உதவலாம். போதுமான தரவுகளைக் கொண்டு, எத்தனை பெண்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொண்டு அதனை சரி செய்யலாம்.
குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கான சமீபத்திய புதுப்பிப்புகள் சரியான நேரத்தில் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் அணுகக்கூடியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், பாலின-உணர்திறன் பயிற்சி குறித்த சிறப்பு கவனம் மற்றும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது.
வாக்காளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இத்தகைய பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்கள். உதாரணமாக, பெண்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பரவலான அரசாங்க பிரச்சாரத்தின் மூலம், பள்ளியில் பெண்களைச் சேர்ப்பதில் ஒரு பெரிய தேசிய மாற்றத்தைக் நாடு கண்டது.
வன்முறையில் இருந்து தப்பியவர்கள் நீதியைத் பாதுகாப்பானதாக உணர்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நமது பெண்கள் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரியவர்கள். எனவே, நாம் அதற்காக போராட வேண்டும்.
மாதங்கி சுவாமிநாதன் பாரிட்டி லேப் (Parity Lab) நிறுவனத்தின் நிறுவனர்.