ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான நிதித் தொகுப்புகள் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன -கோவிந்த் பட்டாச்சார்யா

 ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற மத்திய அரசு உதவும். 


நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில், சிறப்பாக உரையாற்றினார். இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான குறைகளை  சரி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு முதலீடுகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதிக ஜிஎஸ்டி வசூல் மற்றும் ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்பாராத ஈவுத்தொகை (unexpected dividends) இருந்தபோதிலும், அவர் செலவினங்களைத் தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 5.1% நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆகக் குறைத்துள்ளார்.


ஆந்திரா மற்றும் பீகாருக்கு வழங்கப்பட்ட நிதி வழங்கப்படும் நிதியானது குறிப்பிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்கள் கேட்ட  "சிறப்பு வகை அந்தஸ்து" (Special Category Status) நிலையிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை.


ஆந்திரா சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. ஏனெனில், அது  மொத்த வருவாயில் 46% மட்டுமே உள்ளது, மேலும். ஆந்திரா ₹1.3 லட்சம் கோடி கடனைப் பெற்றுள்ளது.


2014-ஆம் ஆண்டில் ஆந்திராவுக்கு "சிறப்பு அந்தஸ்து" வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அதை நிறைவேற்ற முடியவில்லை. பீகார் தனது பின்தங்கிய நிலையை சமாளிக்க இந்த அந்தஸ்தை நிதிஷ் குமார் கோருகிறார். கடந்த தேர்தலுக்குப் பிறகு இந்தி கூட்டணி அவருக்கு அதே வாக்குறுதியை அளித்தது. கடந்த காலத்தில், சிறப்பு வகை மாநிலங்களுக்கு மானியங்களை வழங்குவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இது தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுத்தது.


ஆந்திர பிரதேசத்திற்கான  தொகுப்பு நிதி


ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்புகளில் அமராவதியை தலைநகராக மேம்படுத்த ₹ 15,000 கோடி ரூபாயும் அடங்கும். இது ஆந்திர மறுசீரமைப்பு சட்டம் (Andhra Pradesh Reorganisation), 2013-லிருந்து  உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இந்த பணம் நிதிநிலை அறிக்கையில் இருந்து ஒதுக்கப்படாது. இது "பலதரப்பு மேம்பாட்டு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவி"  (special financial support through multilateral development agencies )மூலம் பெற்று வழங்கப்படும். அதாவது, இந்த திட்டத்திற்கு நிதியளிக்க பலதரப்பு வளர்ச்சி வங்கிகளிடமிருந்து மத்திய அரசு கடன் திரட்டும். ஒரு வெளிநாட்டு கடன் வழங்குநரிடமிருந்து மாநில அரசு நேரடியாக கடன் வாங்க முடியாது. எனவே, மத்திய அரசு கடன்களைப் பெற்றுத் தரும். மேலும், எதிர்காலத்தில் உறுதியளிக்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் அரசு கடன்ளை திருப்பிச் செலுத்தும். இது மத்திய அரசின் வரவேற்கத்தக்க  நடவடிக்கையாகும்.


ஆந்திர மறுசீரமைப்பு சட்டம் 2013-ன் படி  "தேசிய திட்டம்" (national project) என்று அறிவிக்கப்பட்ட போலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை முடிக்க ஆந்திராவுக்கு உதவுகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு முக்கியமானது. தண்ணீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைகளுக்கு நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது.  ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளுக்கும் முக்கியமாக இத்திட்டம் தேவைப்படுகிறது.


நிதிநிலை அறிக்கையில். ஆந்திராவிற்கு வழங்கும்  நிதி  தொகுப்பால் மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 65,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய திட்டங்கள், அல்லது கடன்கள் மூலம் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதும் குறித்த விளக்கம் இல்லை.


பீகார் மாநிலத்திற்கான தொகுப்பு நிதி


பீகாரைப் பொறுத்தவரை, நிதிப் பங்கீட்டில் மத்திய  அரசு நிலைமை தெளிவாக உள்ளது. தனது தற்போதைய நிதியை சரியாகப் பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்திற்கு அதிக பணத்தை வழங்குவதில் அர்த்தமில்லை. அதற்குப் பதிலாக, பீகாரில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைகள் மற்றும் கங்கை மீது பாலம் அமைக்க ரூ.26,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 21,400 கோடி ரூபாய் மின் உற்பத்தி நிலையத்திற்கும், ரூ.11,500 கோடி ரூபாய் வெள்ள மேலாண்மைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த பணம் பட்ஜெட்டில் இருந்து வரும். ஆனால், பெரும்பாலும் மத்திய திட்டங்கள் மூலம்  இவை வழங்கப்படும். இது சிறந்த நிதி பயன்பாடு மற்றும் கண்காணிப்பு மூலம் செயல்படுத்த  உள்ளது.


புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளுக்கு நிதிநிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன் பலதரப்பு உதவிகளைப் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 15 பாலங்கள் இடிந்து விழுந்ததன் மூலம், மூலதன நிதியை பீகார் மோசமாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, நிதி பயன்பாட்டைக் கண்காணிப்பது முக்கியமானது உள்ளது.


பீகார், ஆந்திரா மாநிலங்கள்  மட்டும் முழு நிதிநிலை அறிக்கையையும் எடுத்துக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதை பாஜக அரசாங்கம் சரியாக எதிர்க்கவில்லை. யூனியன் பிரதேசங்களைத் தவிர மத்திய அரசுக்கு வேறு எந்த பிரதேசமும் இல்லை என்பதை பாஜக விளக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் 48 லட்சம் கோடி ரூபாய் செலவில், மூலதன செலவுகளுக்காக 11 லட்சம் கோடி ரூபாயுடன், மாநிலங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் செலவிடப்படும் (வட்டி செலுத்துதல் மற்றும் ஓய்வூதியம் தவிர்த்து). நிதியமைச்சர் தனது உரையில் பெயரிடப்படாத பல மாநிலங்களில் ரயில்வே, சாலை, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த  பொது நிதி மேலாண்மை நிலைமை தற்போது மாறிவிட்டது. பின்னர், மத்திய திட்டங்கள் (Central plans (CP)) அல்லது மத்திய நிதியுதவி திட்டங்கள் மூலம் (Centrally sponsored schemes (CSS)), நிதி அனைத்து மாநிலங்களுக்கு சென்றது. அதில் பாதி, மாநில வரவு செலவுத் திட்டங்களுக்கு வெளியே நேரடி பரிமாற்றங்கள் மூலம் பெறப்பட்டது. இது தீங்கு விளைவிக்கும் சிதைவை ஏற்படுத்தியது. இப்போது, நேரடி இடமாற்றங்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், மத்திய நிதியுதவி திட்டம் (CSS) தற்போது நடைமுறையில் இல்லை.


தற்போதைய பட்ஜெட்டில், 42 மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு ₹5 லட்சம் கோடி செலவாகும். ஆனால், இந்திய பொருளாதாரத்தில் அதன் மூலம் ஏற்படும்  பலன்கள் பற்றி முறையான விளக்கங்கள் இல்லை.


அருண் ஜெட்லி, கட்டுரையாளர், முன்னாள் இந்திய சிஏஜியின் டி.ஜி, 

பேராசிரியர், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்.



Original article:

Share: