தூய்மையான, நெகிழ்வான, மற்றும் மீள்தன்மை கொண்ட மின் கட்டமைப்பில் (power grid) முதலீடு செய்வது நமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இது சுத்தமான எரிசக்தி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
நிதி அமைச்சர் தனது ஏழாவது பட்ஜெட் உரையில், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான நடவடிக்கைகளை அறிவித்தார். இந்த நடவடிக்கைகளில் உந்தப்பட்ட நீர் சேமிப்பு (pumped hydro storage) மற்றும் ஆற்றல் மாற்ற பாதைகள் (energy transition pathways) பற்றிய கொள்கைகளை உருவாக்குவது அடங்கும். அணுசக்தியை ஆதரிப்பதற்கும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், ஆற்றல் மாற்ற பாதைகளை உருவாக்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கோடையில் கடுமையான வெப்ப அலைகள் காரணமாக மின் தேவை அதிகரித்தது. அவை வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் வெப்பமயமாதல் காலநிலை இரண்டையும் பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance (NDA)) அரசாங்கம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுத்தமான எரிசக்தியில் கவனம் செலுத்துகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா மூன்று முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது.
முதலாவதாக, சௌபாக்யா திட்டம் (Saubhagya scheme) மூலம் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தின் (Council on Energy, Environment, and Water (CEEW)) கணக்கெடுப்பின்படி, 2020-ஆம் ஆண்டில் சுமார் 97% வீடுகளில் மின்சாரம் இருந்தது.
இரண்டாவதாக, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy (RE)) திறனில் இந்தியா ஐந்து மடங்கு அதிகரிப்பைக் கண்டது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் இந்தியாவை நான்காவது பெரிய நாடாக மாற்றுகிறது.
மூன்றாவதாக, மின் விநியோக நிறுவனங்களின் (distribution companies) மொத்த இழப்புகளில் 40% வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த இழப்புகள் 2022-23-ல் 15% வரலாற்றில் இல்லாத அளவிற்கு எட்டியது. இது இந்திய மின் துறை வலுப்பெற்று வருவதை காட்டுகிறது. இருப்பினும், இந்தியா இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கார்பன் உமிழ்வை கணிசமாக குறைக்க வேண்டும். அதே நேரத்தில் நுகர்வோருக்கு தரமான மற்றும் குறைவான விலையில் மின்சாரத்தை வழங்க வேண்டும்.
மேலும், இந்தியாவின் மின் துறை பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஆண்டுதோறும் மின்சாரத் தேவை 7-9% அதிகரித்து வருகிறது. இருப்பினும், தேவை இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றம் வானிலையை மோசமாக்குகிறது, இந்த மாற்றம் சவால்களை மேலும் அதிகரிக்கிறது. மின்சார விநியோக நிறுவனங்கள் குறைவான தீர்வுகள் மற்றும் தற்போதைய வலையமைப்புத் திறன் (network capacity) மூலம் தேவையின் எதிர்பாராத அதிகரிப்பை கையாளுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
கவலைகளை நிவர்த்தி செய்ய
முதலாவதாக, 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பு அமைப்புகளுக்கான இலக்குகளை அரசாங்கம் 500 ஜிகாவாட்டிற்கு மேல் உயர்த்த வேண்டும். கடந்த கால முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவின் மின் உற்பத்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்கு வெறும் 13% மட்டுமே. கடந்த காலங்களில், மின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி தேவை ஆகியவை கொள்கை வகுப்பாளர்களை புதிய நிலக்கரி ஆலைகளில் கவனம் செலுத்த வழிவகுத்தது. அதற்கு பதிலாக, இந்தியா புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பங்கை உயர்த்த வேண்டும் மற்றும் சேமிப்பக தீர்வுகளை அளவிட வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மற்றும் சேமிப்பகங்களால் அதிக தேவையை நன்றாக கையாள முடியும்.
இரண்டாவதாக, பல்வேறு தூய்மையான எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை இந்தியா அதிகரிக்க வேண்டும். 2023-ஆம் ஆண்டில், சீனா 300 ஜிகாவாட் சூரிய மற்றும் காற்றுத் திறனை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் 73 ஜிகாவாட்களைச் உருவாக்கியது. மார்ச் 2023-க்குள், இந்தியா மொத்தம் 144 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க திறனை உருவாக்கியுள்ளது, மேலும் 128 ஜிகாவாட் திட்டமிடப்பட்டது. தூய்மையான ஆற்றல் வளங்களை விரைவாக வரிசைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது காட்டுகிறது. இதற்கு, மாநிலங்களில் அதிக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துதல், மின்கட்டமைப்பு இணைப்புகளை (grid connectivity) மேம்படுத்துதல் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ற நிலத்தைக் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. சூரிய ஒளி மட்டுமின்றி, பல்வேறு தூய்மையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு உதவும்.
மூன்றாவதாக, ஆற்றல் கிடைப்பதை மேம்படுத்த, தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகம் செய்யாமல் பரிமாற்றங்கள் மூலம் வர்த்தகம் செய்யப்படும் சக்தியின் அளவை இந்தியா அதிகரிக்க வேண்டும். இப்போது, 6.3% சக்தி மட்டுமே ஆற்றல் பரிமாற்றங்களிலிருந்து (power exchanges) வருகிறது. இது விலைகளை நிலையற்றதாக்குகிறது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இதை சரிசெய்ய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குபவர்கள் இந்த ஆற்றல் பரிமாற்றங்களில் பங்கேற்கவும், நீண்ட கால ஒப்பந்தங்களை அமைக்கவும் இந்தியா புதிய வழிகளை உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குபவர்கள் நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் என்ன விற்கிறார்கள் என்பதைத் தவிர, சந்தையில் சக்தியை விற்பனை செய்வதற்கான கூடுதல் திறனை உருவாக்க வேண்டும்.
நான்காவதாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாம் சேர்த்தாலும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை திறம்பட பராமரிப்பதும் பயன்படுத்துவதும் முக்கியம். குறிப்பாக, சூரிய ஒளி கிடைக்காத போது நிலக்கரி கணிசமான அளவு சக்தியை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, 2024-ஆம் நிதியாண்டில் 210 ஜிகாவாட் நிலக்கரி மின்சாரம், சூரிய ஒளி உற்பத்தி கிடைக்காத காலங்களில் 80% மின்சாரத்தை நிலக்கரி வழங்கியது. இருப்பினும், இந்த நிலக்கரித் திறனில் 40 ஜிகாவாட்டிற்க்கும் அதிகமானது பராமரிப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக அடிக்கடி கிடைக்காமல் இருந்தது. நிலக்கரி ஆலைகள் நன்கு பராமரிக்கப்படுவதையும், சில நிலக்கரி ஆலைகளை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் உருவாக்க முதலீடு செய்வதையும் உறுதிசெய்ய மாநிலங்கள் தங்கள் விதிகளைப் புதுப்பிக்க வேண்டும்.
இறுதியாக, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது, இந்தியாவின் ஆற்றல் மாற்றம் மற்றும் நுகர்வோருக்கு பெரிதும் உதவும். மின்சக்தி நிறுவனங்களுக்கு ஆற்றல் தேவைகளை கணிக்கவும், சிறப்பாக திட்டமிடவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் ஸ்மார்ட் மீட்டர்கள் உதவும். இந்தியா இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவியுள்ளது. பல ஸ்மார்ட் மீட்டர்கள் பீகார் மற்றும் அஸ்ஸாமில் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், இது இன்னும் 250 மில்லியன் என்ற இலக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. குறைந்த நஷ்டம் மற்றும் துல்லியமான கணக்கெடுப்பு போன்ற பலன்களைக் கண்டுள்ள பீகார் மற்றும் அசாம் மாநிலங்களை மின் நிறுவனங்கள் முன்மாதிரியாகக் கருத வேண்டும். டிஜிட்டல் அமைப்புகள் உருவாக்கப்படுவதால், தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தூய்மையான, மிகவும் நெகிழ்தன்மையுடன் கூடிய மின் கட்டமைப்பில் (power grid) முதலீடு செய்வது, பொருளாதாரம் நிலையானதாக வளரவும், தூய்மையான ஆற்றல் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
ஷாலு அகர்வால் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தில் ( Council on Energy, Environment and Water (CEEW)) திட்டங்களின் இயக்குநராக உள்ளார். திஷா அகர்வால் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆணையத்தில் மூத்த திட்டத் தலைவராக உள்ளார்.