நீதிமன்றமும் சமூக நீதியும் -வந்திதா மிஸ்ரா

 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரிடையே (Scheduled Castes and Tribes) உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.   அதில் அரசியல் கட்சிகள், சட்டமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் இதில் ஒன்று சேர வேண்டும் என கூறியுள்ளது.  


1990-ஆம் ஆண்டு முதல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகள், நடைமுறையில் இருந்தாலும், சாதி ரீதியான கட்டமைப்பு, இந்திய அரசியலிலும், சமூகத்திலும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றன. சமத்துவத்தை மேம்படுத்துவதை விட அரசியல் பிளவுகளை உருவாக்க இன்னும்  அதிக வாய்ப்பு  உள்ளது.


இட ஒதுக்கீடு நோக்கங்களுக்காக பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) துணை வகைப்பாடு அனுமதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பொருள் மாநிலங்கள் இப்போது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடுகளை (sub-classification) உருவாக்கிக் கொள்ளலாம். இந்த முறை முன்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  (OBC)  மட்டுமே பயன்படுத்தப்பட்டது. முன்னதாக, பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes)  பிரிவுக்குள்  துணை ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளை நீதிமன்றம் தடுத்தது. இந்த முயற்சிகள் பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) வகைப்பாட்டின் மீது குடியரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை வழங்கும் பிரிவு 341 மற்றும் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவு 14 ஆகியவற்றை மீறுவதாகக் காணப்பட்டது.


உள் ஒதுக்கீட்டிற்கு (sub-classification) நீதிமன்றம் கடுமையான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. மாநிலங்கள் ஆதாரங்களுடன் உள் ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை நிரூபிக்க வேண்டும் மற்றும் சமத்துவத்தை ஆதரிக்கும் நியாயமான விளக்கத்தை வழங்க வேண்டும். மேலும், துணை வகைப்பாட்டின் (sub-classification) செயல்முறை நீதித்துறை மதிப்பாய்வுக்கு (judicial review) உட்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்கனவே தலித் (Dalits) சமூகங்களிடமிருந்து எதிர்ப்பு உள்ளது.  இதில் மேலும், சர்ச்சைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உள் ஒதுக்கீடு அரசியலமைப்பு முறைகளை பாதிப்புக்கு உட்படுத்தக்கூடும் மற்றும் அரசியல் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும். இது மிகவும் பின்தங்கிய மக்களிடையே போட்டியைத் தூண்டி, பட்டியல் வகுப்பினர் சமூகத்திற்குள் மோதல்களை உருவாக்கும் என்ற அச்சமும் உள்ளது. ஏற்றத்தாழ்வுகளைக் காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தின் முடிவு அமைந்துள்ளது. தீர்ப்பை நியாயமாக அமல்படுத்த, விரிவான தேசிய அல்லது மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகள் தேவை. பீகாரின் 2023 சாதி கணக்கெடுப்பு (caste survey) அத்தகைய முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. 


பீகார் மிகவும் பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) உறுப்பினர்களுக்கு உள் ஒதுக்கீடுகளை விட சிறப்பு அரசாங்க திட்டங்கள் மூலம் உதவ முயன்றது. இந்த திட்டங்களில் நில விநியோகம், திறன் பயிற்சி (skill training), சுகாதார வசதிகள், கல்வி ஆதரவு மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அடங்கும். இந்த அணுகுமுறை சமூக நீதிக் கொள்கைகளின் சிக்கல்களையும் அரசியல் தாக்கங்களையும் பிரதிபலிக்கிறது.


2007-ஆம் ஆண்டில், நிதிஷ்குமார் அரசு மாநில மகாதலித் ஆணையத்தை (State Mahadalit Commission) அமைத்தது. பீகாரின் 22 தலித் சாதிகளில் 18 பேரை மகாதலித் சாதிகளாக அடையாளம் காண இந்த ஆணையம் கல்வியறிவு விகிதங்கள், சேவைகளில் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக களங்கம் போன்ற அளவுகோல்களைப் பயன்படுத்தியது. இவர்கள் தலித்துகளில் மிகவும் ஏழைகளாகவும், பலவீனமானவர்களாகவும் கருதப்பட்டனர். ஜாடவர்கள் (Jatavs), பாஸ்வான்கள் (Paswans), பாசிகள் (Pasis), தோபிகள் (Dhobis) ஆகிய நான்கு சாதிகள் பின் தங்கியப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டன. ஜாடவிகள் மற்றும் பாஸ்வான்கள் மிகப்பெரிய குழுக்களாக உள்ளனர். அதே நேரத்தில், பாசிகள் மற்றும் தோபிகள் ஒப்பீட்டளவில் மேம்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.


அரசியல் அழுத்தங்கள் காரணமாக, 2008-ஆம் ஆண்டில் பாசிகள் மற்றும் தோபிகள் மகாதலித் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2009-ஆம் ஆண்டில், ஜாதவ்களும் சேர்க்கப்பட்டனர். பாஸ்வான்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். 2018-ஆம் ஆண்டில், ராம் விலாஸ் பாஸ்வானின் எல்.ஜே.பி. (LJP) கட்சியுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைத்தபோது, பாஸ்வான்களுக்கும் சிறப்பு திட்டங்களை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தார்.


நிதிஷ்குமாரின் வாக்குறுதி பீகாரில் ஒரு கேள்வியை எழுப்பியது. அனைத்து தலித்துகளும் மகாதலித்துகள் என்று கருதப்பட்டால், யார் தலித்துகள் அல்லது மகாதலித்தாக அங்கீகரிக்கப்படுவார்கள்? இந்த கேள்வி சமூக நீதி கொள்கைகளை சரிசெய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இடஒதுக்கீடு கொள்கைகளை மாற்றியமைக்க முடியும். அவை மிகவும் பின்தங்கியவர்களை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதை மேலும், வெற்றிகரமாக செயல்படுத்த சட்டமன்றங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் திறம்பட செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நியாயமாக நிறைவேற்ற உதவும் நம்பகமான மற்றும் உறுதியான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும்.



Original article:

Share: