உள் இட ஒதுக்கீடு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எவ்வாறு நிலையான சமத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார் -அபூர்வா விஸ்வநாத் , அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 கடந்த ஏழு ஆண்டுகளாக, தலைமை நீதிபதி சந்திரசூட் பல தீர்ப்புகள் மூலம் இடஒதுக்கீடு என்பது  தகுதியின் ஒரு பகுதி, அவை விதிவிலக்கு அல்ல என்று வலியுறுத்தினார்.


பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினரிடையே (Scheduled Tribes) உள் இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையில் சமத்துவத்திற்கான  மைல் கல்லைக் குறித்தது.  இத்தீர்ப்பில்,  தலைமை நீதிபதி சந்திரசூட், நிலையான சமத்துவத்தை (substantive equality)  உயர்த்திக் காட்டி உள்ளார்.  மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வரலாற்று அநீதிகளை சட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும்  கூறியுள்ளார் .


அரசியலமைப்புச் சட்டம், இன்று சமத்துவ ஏற்பாட்டின் மூலம் மிகக் கணிசமான வாய்ப்புக்களை முன்னெடுத்துச் செல்கிறது. இடஒதுக்கீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அதன் நன்மைகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்குத் கிடைப்பதை உறுதிசெய்கிறது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இடஒதுக்கீடு குறித்த சட்டத்தை நீதிமன்றம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு சமத்துவத்துவம் என்பது முக்கியமான கருத்து.


இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை கடந்த ஏழு ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொடர்ச்சியான தீர்ப்புகளில், இடஒதுக்கீடு என்பது தகுதியின் ஒரு அம்சம், தகுதிக்கு விதிவிலக்கு அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் சமத்துவத்தைப் பற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட்  1ல்

வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு (sub-classification) தொடர்பான தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் வரலாற்று ரீதியாக நடவடிக்கையை எவ்வாறு விளக்கியது என்பதை அவர் பகுப்பாய்வு செய்துள்ளார்.


சமத்துவத்தை கட்டுப்படுத்துவது 


உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு முறையான மற்றும் வரம்புக்குட்பட்ட அணுகு முறையை எடுத்தது. அதில் இடஒதுக்கீட்டை சம வாய்ப்புக் கொள்கைக்கு விதி விலக்காகக் கருதியது.  தி ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் vs செம்பகம் துரைராஜன் (1951) (The State of Madras vs Champakam Dorairajan) வழக்கில், நீதிமன்றத்தின் பார்வையில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியது.  அரசியலமைப்பின் 16(4) வது பிரிவு போன்று இதை அனுமதிக்கும் வெளிப்படையான விதி எதுவும் இல்லை என்றது. 1951-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பி. வெங்கடரமண vs தி ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் (B. Venkataramana vs The State of Madras), வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில், பொது வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு ஹரிஜனங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை மட்டுமே "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" (backward classes) என்று கருதலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இந்த தீர்ப்புகள், 1951-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு வழிவகுத்தது. இது பிரிவு 15(4)யை சேர்த்தது. இது மதம், இனம், சாதி, மொழி, அல்லது எந்த குடிமகனுக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் பிரிவு  29 க்கு விதிவிலக்காகும். பிரிவு  29  மதம், இனம், சாதி அல்லது மொழி அடிப்படையில் கல்வி சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது.


 இந்திரா சாவ்னி vs யூனியன் ஆஃப் இந்தியா (1992)  (Indra Sawhney vs  Union of India) வழக்கின்  தீர்ப்பில் சமத்துவக் கொள்கைக்கு விதிகள் 15(4) மற்றும் 16(4) விதிவிலக்குகள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் இடஒதுக்கீடு   வரம்பை  50%  ஆக நிர்ணயம் செய்தது.


சமத்துவத்தின் ஒரு அம்சமாக, 1958-ஆம் ஆண்டு, மைசூர் மாநிலம் பிராமண சமூகத்தைத் தவிர அனைத்து சமூகங்களுக்கும் கல்வி நிறுவனங்களில் 75% இடங்களை ஒதுக்கியது. பின்னர், எம் ஆர் பாலாஜி v மைசூர் மாநிலம் (1962) (M.R .Balaji  vs  State of Mysore) வழக்காக  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம் முதல் முறையாக இடஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பை பரிந்துரைத்தது. 2019-ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட 10% பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (Economically Weaker Section (EWS)) ஒதுக்கீட்டைத் தவிர்த்து, இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

கேரள மாநிலம் எதிர் vs  தாமஸ்  (1975) (State of Kerala  vs  N.M Thomas) என்ற வழக்கின் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் சமத்துவக் குறியீட்டிற்காக தீர்ப்பை வழங்கியது என தலைமை நீதிபதி  சந்திரசூட் கூறினார். பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு பட்டியல் இனத்தவருக்கு (Scheduled Castes) அரசுப் பணிகளுக்கான தகுதிகள் தளர்த்தப்பட்ட கேரளச் சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. சம வாய்ப்புக் கொள்கைக்கு சட்டம் விதிவிலக்கல்ல என்று தீர்ப்பளித்தது.


திறனைக் கட்டுப்படுத்துதல்


அரசியலமைப்பின் 335வது பிரிவு வேலைகளில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) இடஒதுக்கீட்டை அனுமதிக்கிறது ஆனால், இது நிர்வாகத் திறனைப் பாதிக்கக் கூடாது என்கிறது. இடஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்ற விவாதங்களில், இடஒதுக்கீடுகள் செயல்திறனைப் பாதிப்பதாகக் கருதப்பட்டது,


இந்த பார்வை பல தீர்ப்புகளில் பிரதிபலித்தது, இதில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை நீக்கியது. 1992-ஆம் ஆண்டு இந்திரா சாவ்னி தீர்ப்பில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது நிர்வாகத்தில் திறமையைக் குறைக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


1995-ஆம் ஆண்டில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடுகளை அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கேட்ச்-அப் விதி (catch-up rule) ரத்து செய்யப்பட்டது. "செயல்திறனை" பராமரிக்க அரசியலமைப்பு ரீதியான நடைமுறை செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


கேட்ச்-அப் (catch-up rule) விதியின் கீழ், இடஒதுக்கீடு காரணமாக, பட்டியலின பிரிவு நபர், பொதுப்பிரிவில் தனது மேலதிகாரியை விட முன்னதாக பதவி உயர்வு பெற்றிருந்தால், பொதுப்பிரிவு நபர், இடஒதுக்கீடு பிரிவுக்கு மேல் மூப்புத்தன்மையை மீண்டும் பெற அனுமதிக்கப்படுவார். 


அரசியலமைப்பு 77வது திருத்தச் சட்டம் (1995), "தொடர்ச்சியான பணிமூப்பை "(consequential seniority) அனுமதிக்கும் பிரிவு 16(4A)யை சேர்த்தது. அடுத்த பதவி உயர்வுக்கு, பொதுப் பிரிவில் ஒதுக்கப்பட்ட பிரிவு நபர், முன்னதாக பதவி உயர்வு பெற்றதன் மூலம் தனது சக நபரை விடப் பெற்ற மூப்பு தக்கவைக்கப்படும். 2006-ஆம் ஆண்டில், திறன் மூப்பு குறித்த சட்டம் உறுதி செய்யப்பட்டது. ஏனெனில், அது நிர்வாகத் திறனைச் சற்றுக் குறைத்தது. ஆனாலும்  அதை முழுமையாக நீக்கவில்லை.


திறமையை சிறிது அளவு பாதித்தாலும், உண்மையான சமத்துவத்தை உறுதிப்படுத்த, இடஒதுக்கீடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் முடிவு செய்ததாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் தகுதி பற்றிய விவாதத்தை மறுவரையறை செய்து. இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கான சிறப்பு விதிவிலக்காக இல்லாமல், உண்மையான சமத்துவத்திற்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்றார்.


பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) மக்களுக்கான மதிப்பீட்டுத் தரநிலைகள், "திறமையின்மைக்கு" வழிவகுக்கிறது என்ற விமர்சனத்திற்கு தீர்வு காண கீழ்கண்ட கூற்றை கூறியுள்ளார், 

"தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது அதிக திறன் பெற்ற நபர் என்றும் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெறுபவர் திறனற்றவர் என்றும் அர்த்தம் இல்லை என்கிறார். மாறாக, நிர்வாகத்தினை  திறம்பட வைத்திருக்க குறைந்தபட்ச மதிப்பெண்ணை எட்டினால் போதும்” என்கிறார்.


இடஒதுக்கீடு திறமையின்மையை ஏற்படுத்துகிறது என்ற கருத்து, உண்மையில் பட்டியல் இனத்தவர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) பிரிவினருக்கு, பதவி உயர்வு கிடைப்பதைத் தடுக்கிறது என்று தலைமை நீதிபதியின் முக்கிய கருத்து. அதனால் தான் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார். இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரானது என்ற கருத்தை அரசியலமைப்புத் திருத்தங்கள் தெளிவாக நிராகரிக்கின்றன என்று தலைமை நீதிபதி வாதிடுகிறார்.



Original article:

Share: