ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவருவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இலக்குகளை எட்டியதா? - Editorial

 பொருளாதார மற்றும் நிர்வாகரீதியில், ஆதாயங்கள் இருந்தாலும், மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு பாதுகாப்பு நிலைமை பெரும் தடையாக உள்ளது. மக்கள் தங்கள் ஆட்சியில் ஈடுபாடு காட்டுவது மிகவும் முக்கியம்.


ஆகஸ்ட் 5, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி 370-வது பிரிவை ரத்து செய்வதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான "சிறப்பு அந்தஸ்தை" (special status) முடிவுக்கு கொண்டுவருவதாகவும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் முதன்முறையாக அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் இதற்கான  அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநில அந்தஸ்தை திரும்பப் பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. இதன்மூலம், ஒன்றியமானது மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது. அதில், முதலாவதாக, ஜம்மு காஷ்மீரின் சிக்கலான அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைக்கான தீர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்திடம் இல்லை. ஆனால், டெல்லியின் அரசியல் தலைமை மற்றும் அதன் நியமனதாரர்களிடம் உள்ளன. இரண்டாவதாக, ஒரு "சர்ச்சைக்குரிய பிராந்தியத்திற்கு" (disputed territory) எதிரான நிலையை மாற்றுவது. பாகிஸ்தானுக்கு எதிரான தடுப்புகளை மீட்டமைக்கிறது. இறுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை நாடாளுமன்றம் கலைத்ததன் மூலம், அது ஒரு சமச்சீரற்ற கூட்டாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம் இந்த செயல்முறையின் அரசியலமைப்புத்தன்மை குறித்து அதன் ஒப்புதலுக்கான முத்திரையை வைத்த பின்னர், இரண்டு கேள்விகள் எழுகின்றன. அவை : சிறப்பு அந்தஸ்த்தின் ரத்தானது அதன் நோக்கங்களை அடைந்ததா? யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக பற்றாக்குறையை நிரப்ப முன்னோக்கி செல்லும் வழி என்ன?


பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் ஆதாயங்கள் ஏற்பட்டுள்ளன. சேவைகள் வழங்குவது மேம்பட்டுள்ளது. 1,000க்கும் மேற்பட்ட பொது பயன்பாட்டு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பிரதமரின் மேம்பாட்டுத் தொகுப்பில் உள்ள முக்கிய திட்டங்கள் முழுமையடைகின்றன அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளன. 6,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் களத்தில் உள்ளன. 2020 இல் 3.4 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2023 இல் 21.1 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு முன்னணியில், பள்ளத்தாக்கில் அமைதி நிலவுகிறது. இருப்பினும் வலுவான கட்டுப்பாடு, இதயங்களையும் மனதையும் வெல்வதை விட அதிகமாக வேலை செய்துள்ளது. சமீபகாலமாக மோதலின் தன்மை மாறி வருகிறது. ஜம்மு எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவல்காரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சீனாவுடனான பாகிஸ்தானின் கூட்டு மற்றும் பயங்கரவாதத்திற்கு அதன் ஆதரவை புறக்கணிக்க முடியாது. பிராந்தியத்தின் பாதுகாப்பின் இந்த சர்வதேச அம்சம் ஒரு சவாலாகவே உள்ளது. ஆகஸ்ட் 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், ஜம்மு & காஷ்மீர் மக்கள் வாக்களிப்பதில் தொடர்ந்து தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். 2024 பொதுத் தேர்தலில், 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 58.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், அரசியலுக்கு இன்னும் குறிப்பிடத்தக்க பணி தேவைப்படுகிறது.


பெரும்பாலும், பாதுகாப்பு நிலைமை மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான ஒரு தடையாக மேற்கோள் காட்டப்படுகிறது. ஜனநாயகமும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பார்க்கும் ஒரு பார்வை ஒரு குறுகிய மற்றும் வரம்புக்குட்பட்ட ஒன்று என்பதை அங்கீகரிப்பது முக்கியமாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு ஒரு அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆனால், இது கவனமுடன் தொடங்க வேண்டிய ஒரு செயல்முறையாகும். தெளிவான காலக்கெடுவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் மாத காலக்கெடு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கலாம். ஜம்மு & காஷ்மீரின் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜம்மு & காஷ்மீரில் தெருவில் உள்ள ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். சமீப காலமாக, சில நகரங்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன, இவை கேட்கப்பட வேண்டும், அடக்கப்படக்கூடாது. ஏனெனில், ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் ஈடுபாட்டின் மூலமே அந்நியமாதலை நிவர்த்தி செய்ய முடியும். ஆகஸ்ட் 5 முதல் கடந்த ஐந்தாண்டுகளின் அறிக்கைகள் காட்டுவதைப் போல, பாதுகாப்புரீதியாக விவாதிக்கப்படும் அறைகள் முதல், எதிர்கால குடிமக்களை வார்க்கும் வகுப்பறைகள் வரை, மக்கள் தங்கள் நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும். அவர்கள்தான் முதன்மை பங்குதாரர்கள் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. புது தில்லியில் உள்ள அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 5, 2019-ன் வெற்றியின் முக்கிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பயங்கரவாதத்தை உறுதியாகக் கையாள்வதும்.



Original article:

Share: