வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) அமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் புருனே மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் இந்தியாவின் "கிழக்கே செயல்படும்" கொள்கையில் கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாகும். 2018-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு மற்றும் குடியரசு தின அணிவகுப்பிற்காக இந்தியாவிற்கு பயணம் செய்தனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வியட்நாம் மற்றும் மலேசிய பிரதமர்களை இந்தியா வரவேற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் மீண்டும் இணைவது மற்றும் புதிய உறவுகளை உருவாக்குவது என்ற குறிக்கோள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பிரதமர் மோடியின் பயணம் ஒரு இந்தியப் பிரதமர் இருதரப்புப் பயணம் மேற்கொண்ட முதல் முறையாகும். இதற்கு முன் எந்த இந்தியப் பிரதமரும் இந்த நாடுகளுக்குச் சென்றதில்லை.
அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகள், சீனாவுடனான வர்த்தக உறவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மையபகுதியில் ஒரு நாடக புருனே உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு உடனான இந்தியாவின் வர்த்தகம் இரட்டிப்பாகியிருந்தாலும், புருனேயுடனான வர்த்தகம் குறைந்துள்ளது. 2022 முதல், ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் புருனேயின் தலைவர்கள் பாதுகாப்பு மற்றும் புவிசார் ராஜதந்திரபிரச்சினைகள் குறித்து விவாதித்தாலும், இரு நாடுகளுக்கும் ஒரு ராஜதந்திர கூட்டாண்மை இல்லை. மோடியும் சீனாவை மறைமுகமாக விமர்சித்தார். இரு நாடுகளும் தங்கள் விண்வெளி ஒத்துழைப்பை புதுப்பித்தன, இதில் புருனே ஒரு இஸ்ரோ நிலையத்தை நடத்துகிறது. இருப்பினும், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்த விவாதங்கள் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமற்றது.
பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம் குறைமின்கடத்திகள் (semiconductors) மீது கவனம் செலுத்தப்பட்டது. மின்னணு விநியோகச் சங்கிலியில் சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றுகிறது. அரிய மண் மற்றும் சிப் உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் முதலீட்டை இந்தியா எதிர்பார்க்கிறது. மறுபுறம், சிங்கப்பூர் குறைக்கடத்தி துறையில் அதன் நிலம் மற்றும் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க விரும்புகிறது. அமெரிக்கா-சீனா-தைவான் போர் பதட்டங்கள், அமெரிக்க பாதுகாப்புவாத கொள்கைகள் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடைமுறைகள் ஆகியவற்றிலிருந்து அபாயங்களைக் குறைப்பதன் மூலம் இந்த கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இந்தியாவுக்கான சிங்கப்பூரின் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment (FDI)) குறைந்து வருவதை சரிசெய்ய இது உதவும்.
இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) உறவுகள் சீராக இருந்தால் மட்டுமே இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க முடியும். 2019-ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு தலைமையிலான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையிலிருந்து (Regional Comprehensive Economic Partnership (RCEP)) இந்தியா வெளியேறியது ஒரு பின்னடைவாக இருந்தது.
ஒரு பெரிய பிராந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (Free trade Agreement (FTA)) இந்தியாவை விலக்கியது. ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டாலும், இந்தியா தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், சிங்கப்பூருடனான 2009 ஆசியான்-இந்தியா வர்த்தக பொருட்கள் ஒப்பந்தம் (ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)) மற்றும் 2005 விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) ஆகியவற்றை இந்தியா புதுப்பிக்க வேண்டும்.
இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அனைத்து ராஜதந்திர பிரச்சினைகளிலும் "தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் (Association of Southeast Asian Nations (ASEAN)) இந்தியா நல்ல உறவை கொண்டுள்ளது. மியான்மர், தென் சீன கடல் மற்றும் குவாட் ஈடுபாடு உள்ளிட்ட புவிசார் அரசியல் பிரச்சினைகளில் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா இந்த பகுதிகளுடன் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இன்றைய உலகில் இந்தியா இந்த பிராந்தியத்தில் தனது அணுகுமுறையை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 1992-ல் "கிழக்கைப் பார்" கொள்கையுடன் 2014-ல் பிரதமர் மோடியின் “கிழக்கே செயல்படும்" கொள்கையுடன் இந்த புதுப்பிப்புகள் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளை வலுவாகவும் பொருத்தமானதாகவும் வைத்திருக்க உதவுகின்றன.