சுயமரியாதை இயக்கத்தின் (self-respect movement) உணர்வை உயிர்ப்புடன் தொடர்தல் - மனுராஜ் சண்முகசுந்தரம், விக்னேஷ் கார்த்திக் கே.ஆர்.

 இந்தியாவில் கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்கள் அதிகரித்து வருவதால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கான முயற்சிகளை  வலுப்படுத்த வேண்டும்.


இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் 100-வது ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கிறது. சுயமரியாதை இயக்கம் (Self-Respect Movement) என்பது தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்கும் சமூகப் படிநிலைகளை சவால் செய்வதற்கும் அவர்களுக்கு  அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான இயக்கமாகும். கூடுதலாக, இது பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவித்தல், அரசியலில் ஒதுக்கப்பட்ட குழுக்களை ஆதரித்தல், பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுதல் மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவதில் தொடக்கம் முதலே கவனம் செலுத்தியது.


சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தாலும், அவற்றுக்கிடையே சில  வேறுபாடுகள் உள்ளன. இவ்விரு இயக்கங்களும் தமிழகத்தின் அரசியல் களத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகின்றன. இந்திய சமூகத்தில் பெரும்பான்மைவாதத்தின் எழுச்சிக்கு ஒரு வலுவான எதிர் கருத்துடைய இயக்கமாக செயல்படுகின்றன.


சுயமரியாதையின் இயக்கத்தின் தோற்றம்  (emergence of self-respect)


கடந்த பத்தாண்டுகளாக, திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை போற்றும் வகையில் செப்டம்பர் மாதம் “திராவிட மாதமாக” ('Dravidian Month’) கொண்டாடப்படுகிறது. இந்த மாதம், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மூன்று குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவு கூர்கிறது.: சி.என்.அண்ணாதுரையின் பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட மாதம் மற்றும் ஈ.வெ.ராமசாமி ('பெரியார்') பிறந்த மாதம். நவீன தமிழகத்தின் அரசியல் தலைவராகப் (leader of modern Tamil Nadu) அண்ணா பார்க்கப்படுகிறார். அதே நேரத்தில் பெரியார் ஒரு முக்கிய சிந்தனையாளராகவும் தலைவராகவும் பார்க்கப்படுகிறார். மாநிலத்தின் தற்போதைய  நவீன சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கு, சுமார் 50 ஆண்டுகளாக பெரியார் வழி நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது முக்கியம். 


சுயமரியாதை இயக்க வரலாற்றில் 1925-ஆம் ஆண்டு இரண்டு முக்கிய காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, மே மாதத்தில், குடியரசு (Republic) என்ற தமிழ் வார இதழ் தொடங்கப்பட்டது. இரண்டாவதாக, நவம்பரில், பெரியார் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து (indian National Congress (INC)) வெளியேறினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறியது சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகக் கருதப்பட்டாலும், குடியரசு இதழ் ஏற்கனவே சென்னை மாகாணத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அரசியலில் வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பதைத் தாண்டி சமூக சீர்திருத்தத்தை இந்தப் பத்திரிகை வலியுறுத்தியது. காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு, பெரியார் காங்கிரஸ் மற்றும் ஆதிக்க சமுதாயத்தை வெளிப்படையாக விமர்சிக்க குடியரசு இதழை பயன்படுத்தினார். இந்து சாதி அமைப்புகளின் தீங்கான நடைமுறைகளைக் குறிக்க அவர் "ஆதிக்க சமுதாயம்" (‘Brahminism’) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.


1920-ஆம் ஆண்டில், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆதிக்க சமுதாயமல்லாதார் அரசியலை ஊக்குவித்து அரசாங்கத்தை அமைத்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை (Dr. Muthulakshmi Reddy) முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராக அரசு நியமித்தது. அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டை ஆதரித்த வகுப்புவாத அரசாங்க அரசாணையை வெளியிட்டது போன்ற குறிப்பிடத்தக்க நகர்வுகளை நீதிக்கட்சி மேற்கொண்டது. அதே நேரத்தில், 1929 பிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை பெரியார் நடத்தினர்.


 பெண்களுக்கு சம சொத்துரிமை, சாதிப் பெயர்கள் ஒழிப்பு, பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், திருமண சமத்துவம் போன்ற பிரச்சினைகளை உரையாற்றிய இந்த மாநாடு மிகவும்  புரட்சிகரமானது. அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் உட்பட நீதிக்கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கல்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மாநாட்டை வெற்றியடைய செய்தனர். ஆதிக்க சமுதாயமல்லாத அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து சமூகத்திற்குள் தாழ்த்தப்பட்ட சாதிக் குழுக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சமூகத்தில் உள்ள பெண்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த பெரியார் இந்தத் தளத்தைப் பயன்படுத்தினார்.


முதல் 100 ஆண்டுகள் மற்றும் சுயமரியாதை இயக்கம் 2.0 (Self-Respect 2.0)


சுயமரியாதை இயக்கம் அதன் தீவிரமான சமூக சீர்திருத்தங்களுக்கு, குறிப்பாக சுயமரியாதை திருமணங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் பிரபலமானது. இந்த திருமணங்கள் ஆதிக்க சமுதாய பூசாரிகள் மற்றும் மத சடங்குகளின் தேவையை நீக்கியது. இதன் மூலம், பெரியார் பாரம்பரிய பெரும்பான்மை மதத்தின் திருமண நடைமுறைகளை சவால் செய்தார். பாரம்பரிய  நடைமுறைகளை உடைத்து பெண்களுக்கு சுயாட்சி, சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை வழங்க பெரியார் சுயமரியாதை திருமணங்களை வடிவமைத்தார். 1967-ஆம் ஆண்டில், திமுக ஆட்சி அமைத்தபோது, சுயமரியாதை திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன. இதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் முதல் சட்டமன்ற சாதனையாக இது அமைந்தது.


சுயமரியாதை இயக்கத்தின் மற்றுமொரு முக்கிய அங்கம், ஒடுக்குமுறை சமூக நெறிமுறைகளில் இருந்து பெண்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தியது. விதவை மறுமணம், விவாகரத்து உரிமை, சொத்துரிமை மற்றும் கருக்கலைப்பு போன்றவற்றை ஆதரித்தது. பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் கருத்தடைகளை ஊக்குவித்த பண்டைய நூல்களையும் இந்த இயக்கம் விமர்சித்தது. பெண்கள் தங்கள் சொந்த உடல்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க அதிகாரம் அளித்தது. கூடுதலாக, சுயமரியாதை இயக்கம் சாதிகளுக்கிடையேயான திருமணங்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.  திருமணத் தேர்வுகள் மீதான ஆணாதிக்கக் கட்டுப்பாட்டை சவால் செய்தது.


சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில், சுயமரியாதை இயக்கம் அரசியல் சுதந்திரத்தை விட சமூக சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தியது. இது இயக்கத்தின் மீது விமர்சனத்திற்கு வழிவகுத்தது. சில விமர்சகர்கள் சுயமரியாதையாளர்களை முடியாட்சிவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் என்று குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்த பார்வை சுயமரியாதை  இயக்கத்திற்கும் தேசியவாத காரணத்திற்கும் இடையிலான சிக்கலான உறவை கவனிக்கவில்லை.  சுயமரியாதை இயக்கம் சுதந்திரத்தை எதிர்க்கவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பதிலாக உயரடுக்கு ஆதிக்க பெரும்பான்மை சாதிக் குழுக்களைக் கொண்டு வருவதை எச்சரித்தது. இவை அரசியல் சுயாட்சி பற்றிய அதிக புரிதலுக்கு வழிவகுத்தது மற்றும் நாட்டிற்குள் கூட்டாட்சி உணர்வின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.


இந்த இயக்கம் தனக்கென பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு இயக்கமும் இன்றைய சமுதாயத்தில் அதன் பங்கையும் மறுவரையறை செய்ய வேண்டும். சுயமரியாதை இயக்கம் வலதுசாரி குழுக்களால் தள்ளப்படும் கலாச்சார சீரான தன்மை காரணமாக ஒரு பெரிய சவாலை  எதிர்கொள்கிறது. வலதுசாரி சித்தாந்தம், இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சாரங்களை ஒரு நிலையான கட்டமைப்பில் ஒன்றிணைக்க முற்படும் ஒற்றை அடையாளத்தை ஊக்குவிப்பதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 


இந்த ஒற்றுமையானது சுயமரியாதை இயக்கம் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உழைத்த தனித்துவமான பிராந்திய, மொழி, பாலினம் மற்றும் சாதி அடையாளங்களை குறைக்கிறது. சமூக நல்லிணக்கத்திற்கு சவால் விடும் இயக்கங்களை ஓரங்கட்டுவதன் மூலமும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்களை எதிர்ப்பதன் மூலமும், சுயமரியாதை இயக்கத்தால் ஆதரிக்கப்படும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் முற்போக்கான மாற்றங்களை அழிக்க வலதுசாரி சித்தாந்தம் அச்சுறுத்துகிறது. இந்த இயக்கத்தின் எதிர்காலம் ஒற்றுமைக்கான தேவையை  எதிர்ப்பது மற்றும் சமூக நீதியின் பெரிய இலக்கைப் பாதுகாக்க தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் குறிப்பிட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஆதரிப்பதில் தங்கியுள்ளது.


நம்மைச் சுற்றியுள்ள நவீன உலகம் வர்க்கம், மதம், மற்றும்  பாலினம் ஆகியவற்றுடன் சாதி குறுக்கிடும் மிகவும் சிக்கலான அடையாளங்களின் எழுச்சியைக் காண்கிறது. பாலின விதிமுறைகள் தொடர்ந்து உருவாகி வருவதால், LGBTQIA+ (பால்புதுமையினர்) உரிமைகள் போன்ற புதிய பாலினம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும்போது அனைத்துப் பிரிவுகள் பற்றிய பிரச்சனைகளை அடுத்த பதிப்பில் ஒருங்கிணைப்பது ஒரு முக்கியமான சவாலாக இருக்கும். 


இன்று, பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் தவறான தகவல்கள் மற்றும் பொய்களால் இந்த யுகம் நிரம்பியுள்ளது. டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் சாதி சார்புகள் மற்றும் குழு பெண்ணங்களை மோசமாக சித்தரிக்கின்றன. நவீன கால அச்சுறுத்தலை எதிர் கொள்ள இயக்கத்தின் கொள்கைகளை  இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.  பாரம்பரிய சாதி நடைமுறைகளில் இருந்து இவை வெகு தொலைவில் இருக்கும்.  ஆனால், சாதி எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மற்றும் இடஒதுக்கீடு போன்ற சமூக கொள்கைகளை கேள்விக்குட்படுத்தும் வலதுசாரி பிரச்சாரத்தால் இன்னும் செல்வாக்கு பெற்ற இளைய தலைமுறையினருடன் தொடர்பு கொள்வதும் முக்கியம்.




முக்கியமான பணி 


சுயமரியாதை இயக்கம் அதன் இரண்டாம் நூற்றாண்டைத் தொடங்க உள்ள நிலையில், அதன் நோக்கம் முன்னெப்போதையும் விட முக்கியமானது. 1925-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh) உட்பட பல்வேறு அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்ட கலாச்சார ஒற்றுமை மற்றும் வளர்ந்து வரும் பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை (divisive ideologies) எதிர்கொள்ளும் இந்த இயக்கம் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கான அதன் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.


தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்வதன் மூலம், சுயமரியாதை இயக்கம் அதன் அடித்தளத்தில் உண்மையாக இருக்கும் அதன் தாக்கத்தை மேம்படுத்த முடியும். ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தின் எதிர்காலம் இந்த புதுப்பிக்கப்பட்ட தளத்தில் தங்கியுள்ளது. இயக்கத்தின் புரட்சிகர உணர்வைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது. அதன் இலட்சியங்கள் நிலைத்திருப்பது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.


மனுராஜ் சண்முகசுந்தரம், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம். 

கே.ஆர். விக்னேஷ் கார்த்திக் முதுகலை ஆய்வாளர்.



Original article:

Share: