பாதுகாப்பு அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையில் 90% செலவழித்த பிறகு, புதுமைகளுக்கான அதன் முதன்மைத் திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் நிதியை நாடுகிறது - அம்ரிதா நாயக் தத்தா

 இந்த திட்டத்திற்கு (2021-2026) ஒப்புதல் அளிக்கப்பட்ட 90% நிதியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 


பாதுகாப்பு அமைச்சகம் அதன் முதன்மையான, பாதுகாப்பு சிறப்புக்கான புதுமைகள் (Innovations for Defence Excellence (iDEX)) திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறது. இதை தொடர, நிதி அமைச்சகத்திடம் கூடுதல் நிதி கோரியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளது.


2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டு திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மொத்த ரூபாய் 498.78 கோடியில் 90% பாதுகாப்புத் துறை (Department of Defence Production (DDP)) ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். iDEX திட்டம் கிட்டத்தட்ட 300 புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் தனிப்பட்ட முறையில் புதுமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், முக்கிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சுமார் 20 பங்குதாரர்களின் காப்பகங்களை இது ஆதரிக்கிறது.


அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, ரூ.2,370 கோடி மதிப்புள்ள iDEX திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட 37 தயாரிப்புகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.800 கோடி மதிப்புள்ள 21 தயாரிப்புகளின் கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன. iDEX திட்டத்தின் கீழ் மேலும் பல சவால்கள் தொடங்கப்படுகின்றன. இந்த தரவுகளின்படி, இந்த திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சவால்கள் iDEX திட்டத்தின் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நிகழ்ச்சியில், iDEX திட்ட முன்முயற்சியின் கீழ் 26 தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1,000 கோடிக்கும் அதிகமான கொள்முதலுக்கான தேவைகளை உருவாக்கப்பட்டுள்ளன என்றார். 


இந்த திட்டத்தின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியுடன் நிதி குறைந்துபோகிறது என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் வெற்றியானது, மனிதவளம் உட்பட, கூடுதல் நிதி மற்றும் வளங்கள் தேவைப்படுவதற்கு, அதன் அளவை அதிகரிக்க ஊக்குவித்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சுமார் 90% ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டார். iDEX திட்டத்தின் வெற்றியுடன் மேலும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட, கூடுதலாக ரூ.497.15 கோடி தேவைப்படுகிறது.


iDEX திட்டத்தின் கீழ் புத்தொழில்களுடன் ஈடுபாட்டைப் பேணுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் நிதியைப் பெறுவது மிகவும் முக்கியமானது என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார். பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே நிதியமைச்சகத்துக்கு அண்மையில் அனுப்பிய செய்தியில் இந்தத் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதலாக, திருத்தப்பட்ட செலவுக் குழு (Revised Cost Committee (RCC) ) 2023-ல் அதிக நிதி தேவை என்று பரிந்துரைத்ததாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டிற்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இது நடப்பு நிதியாண்டிற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய துறை திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.996 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆரம்பத்தில், iDEX திட்டத்திற்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.1.5 கோடியாக இருந்தது. ஆனால், iDEX திட்டம் பின்னர் iDEX Prime-க்கு விரிவுபடுத்தப்பட்டது.  இதற்கான நிதி உதவி ரூ.1.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரித்துள்ளது. ஏனென்றால், திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு இருந்தபோதிலும், பாதுகாப்பு மற்றும் விண்வெளியின் முக்கிய களத்தில் மேம்பட்ட மற்றும் சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதில் ரூ.1.5 கோடி உச்சவரம்பு ஒரு தடையாக இருப்பதாக பல பங்குதாரர்கள் உணர்ந்தனர். 


இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாதுகாப்பு அமைச்சர் iDEX திட்டத்தை ADITI திட்டத்துடன் புதுமையான தொழில்நுட்பங்களின் ஏசிங் டெவலப்மென்ட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார். இந்த முயற்சியானது முக்கியமான மற்றும் இராஜதந்திர ரீதியில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ADITI திட்டத்தின் கீழ், புத்தொழில்கள் (start-ups) தங்கள் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக ரூ.25 கோடி வரை மானியம் பெற அனுமதிக்கிறது. 


2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ.750 கோடி மதிப்புடைய ADITI திட்டம், iDEX கட்டமைப்பின் கீழ் வருகிறது. இதற்கு முன்மொழியப்பட்ட காலக்கெடுவுக்குள் சுமார் 30 முக்கியமான ஆழமான தொழில்நுட்பம் (deep-tech critical) மற்றும் இராஜதந்திர ரீதியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். நவீன ஆயுதப் படைகளின் தேவைகள் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


அரசாங்க அறிக்கையின்படி, ADITI திட்டத்தின் முதல் பதிப்பு 17 சவால்களான இதில் இந்திய ராணுவத்திற்கு மூன்று, கடற்படைக்கு ஐந்து, இந்திய விமானப்படைக்கு ஐந்து மற்றும் பாதுகாப்பு விண்வெளி முகமைக்கு நான்கு சவால்கள் தொடங்கப்பட்டது.

 

இந்த மாத தொடக்கத்தில், ராஜ்நாத் சிங் ADITI-2.0 ஐ அறிமுகப்படுத்தினார். இந்த பதிப்பில் ஆயுதப்படைகள் மற்றும் அது சார்ந்த முகமைகளின் 19 சவால்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம் (quantum technology), இராணுவத் தொடர்பு (military communication), இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் (anti-drone systems for military use) மற்றும் தகவமைப்பு உருமாற்றம் (adaptive camouflage) போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன.


இந்த திட்டம் iDEX திட்டம் வகுப்பதற்கு ரூ.25 கோடி வரை மானியங்களை வழங்குகிறது. நாட்டின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுதிகளுக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆளில்லா வான்வழி விமானங்கள் (unmanned aerial vehicles (UAV)), செயற்கை நுண்ணறிவு, இணைய வலையமைப்பு (networking) மற்றும் தகவல் தொடர்பு (communication) உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப களங்களில் 41 செயல்பாடுகளை முன்வைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு, இந்தியா புத்தொழில் திட்டத்தால் இந்த செயல்பாடுகளின் 12வது பதிப்பையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த செயல்பாடுகளுக்கு ரூ.1.5 கோடி வரை மானியம் கிடைக்கிறது.

 

iDEX திட்டத்தின் முன்முயற்சியை அதிகரிக்க, பாதுகாப்பு கண்டுபிடிப்பு தொடக்க சவால் (Defence Innovation Startup Challenge (DISC)) அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (Atal Innovation Mission) இணைந்து தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது புத்தொழில்கள் (start-ups), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் கண்டுபிடிப்பாளர்களை முன்மாதிரிகளாக உருவாக்கி, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சரின் கூற்றுப்படி, iDEX திட்டம் இதுவரை 9,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இது தற்போது 450-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் (start-ups) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSME) ஒத்துழைத்து வருகிறது.




Original article:

Share: