ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில் ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையைப் பெறுவதற்கு பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.
மே 2023-ல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை "பாகிஸ்தானின் முக்கிய ஆதாரமான பயங்கரவாதத் தொழிலை ஊக்குவிப்பவர், நியாயப்படுத்துபவர் மற்றும் செய்தித் தொடர்பாளர்" என்று விமர்சித்துள்ளார்.
எஸ்.ஜெய்சங்கர் மேலும் விமர்சித்ததாவது, "பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதத்தை பற்றி விவாதிக்க பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து அமர்ந்து பேசுவதில்லை. இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக இருப்போம்... பாகிஸ்தானின் நம்பகத்தன்மை அதன் அந்நிய செலாவணி இருப்புக்களைவிட வேகமாக குறைந்து வருகிறது" என்று ஜெய்சங்கர் செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organisation (SCO)) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்காக இந்தியா வந்திருந்த பிலாவல் ஊடக உரையாடல்களில் இருதரப்பு பிரச்சினைகளை இந்த அமைப்பில் கவனத்தை திருப்ப முயன்றார். இதன்படி, அவர் பாதிக்கப்பட்ட பகுதியான பிரிவு 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் பற்றிய கவலைகளை வாசிக்கத் தொடங்கினார்.
ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையைப் பெறுவதற்கு பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.
SCO கூட்டத்தில் ஜெய்சங்கர் தனது தொடக்க உரையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்க அழைப்பு விடுத்த பின்னர், பிலாவல் பதிலளித்ததாவது, "இராஜதந்திர நிலையை பெறுவதற்கு பயங்கரவாதத்தை கருவியாகப் பயன்படுத்துவதில் சிக்கிக் கொள்ளக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்றிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும்:
கோவாவில் நடந்த வாய்மொழி மோதலுக்கு ஒரு வருடம் மற்றும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 15-16 தேதிகளில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) அரசாங்கத் தலைவர்களின் குழு கூட்டத்திற்காக ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிலாவல் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக இல்லை. இருப்பினும், அவரது கட்சி இன்னும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை ஆதரிக்கிறது.
பாகிஸ்தானில், பிப்ரவரியில் தேசியளவில் நடைபெற்ற தேர்தல்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf (PTI)) வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர். இருப்பினும், சமீபத்தில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான தனது விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு குறைந்த ஆதரவு கிடைத்திருப்பது அரசாங்கத்தில் அதன் கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்சிகள் பாகிஸ்தான் குறித்த தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. மேலும், இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை பாஜக தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மே 2020 முதல் சீனாவுடனான எல்லைப் பிரச்சனை ஒரு பெரிய கவலையாக உள்ளது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு இராணுவ வீரருக்கு எதிராக குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நிலைமை சிக்கலானதாகவே உள்ளது.
'எல்லாவற்றிற்கும்' திட்டமிடுங்கள் (Plan for 'Everything')
ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொண்ட தனது பயணம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்துக்காகவே மட்டும். மேலும், இது ஒரு "பல்தரப்பு நிகழ்வுக்காக" (multilateral event) தவிர, பாகிஸ்தானுக்கான இருதரப்பு பயணம் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பொறுப்பான உறுப்பினர் என்ற அடிப்படையில் அங்கு செல்கிறேன் என்றும், மேலும் ஒரு மரியாதையான நபர் என்பதால், அதன்படி செயல்படுவேன், ”என்று ஜெய்சங்கர் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் குழு (Council of Heads of Government), மாநிலத் தலைவர்கள் குழுக்குப் பிறகு (Council of Heads of State), இந்த அமைப்பில் இரண்டாவது மிக முக்கியமான குழுவாகும். மிக உயர்ந்த அமைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் விளாடிமிர் புதின் போன்ற தலைவர்கள் உள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியா முழு உறுப்பினரான 2017 முதல், வெளியுறவு அல்லது பாதுகாப்பு அமைச்சர் நிலையில் அரசுத் தலைவர்கள் குழுவில் இந்தியா பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. ஜெய்சங்கர் கடந்த ஆண்டு பிஷ்கெக்கில் (Bishkek) நடந்த அரசாங்கத் தலைவர்கள் குழு உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
முன்னதாக இந்த உச்சி மாநாடுகளில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 2020-ம் ஆண்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அரசாங்கத் தலைவர்களின் நிலையிலான கூட்டத்தை இந்தியா மெய்நிகர் முறையில் (virtually) நடத்தியபோது, பாகிஸ்தான் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்தில் குறிப்பிடத்தக்க ஒருவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. எவ்வாறாயினும், இந்தியா-பாகிஸ்தான் சூழலில் பலதரப்பு பயணமானது சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. அக்டோபர் 5 அன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பாகிஸ்தான் பயணத்தை "திட்டமிடுவதாக" (planning) கூறினார். மேலும், "என் தொழிலில், நீங்கள் செய்யப்போகும் அனைத்திற்கும் நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் செய்யப்போவதில்லை, ஆனால் நடக்கக் கூடும். அதற்கும் நீங்கள் தயாராகுங்கள்" என்று அவர் கூறினார்.
பின்னோக்கி மற்றும் முன்னோக்கி ஆராய்தல்
2014-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்து பதவியேற்றார். 2015 டிசம்பரில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. அதே மாதத்தின் பிற்பகுதியில், நவாஸ் ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி லாகூர் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இருப்பினும், பல நிகழ்வுகளுக்குப் பிறகு இரு நாடுகளின் உறவு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. ஜனவரி 1, 2016 அன்று, பதன்கோட் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. மார்ச் 2016 இல், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை உளவு பார்த்ததாகவும், தீவிரவாதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி பாகிஸ்தான் கைது செய்தது. செப்டம்பர் 2016-ல், உரி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது.
பிப்ரவரி 2019-ல், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இது பாலகோட்டில் இந்தியாவின் வான்வழித் தாக்குதலுக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு & காஷ்மீரில் அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவுடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் குறைத்து கொண்டது. இதில், இருதரப்பு வர்த்தகம், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
பிப்ரவரி 2021 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவை ஜம்முவில் நிலைமையை மோசமாக்கியுள்ளன. கடந்த மாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது.
இந்த பின்னணியில் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகை மேலும் இருநாடுகளுக்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை திறக்கிறது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு கோவாவிலும், இந்த ஆண்டு ஐநா பொதுச் சபையிலும் இந்தியாவின் ஆக்ரோஷமான பதிலடி, காஷ்மீர் அல்லது பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானின் எந்த ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் அவர் புறக்கணிக்க மாட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த நெருக்கடியான தருணத்தில் பாகிஸ்தான் முன்னெப்போதும் இல்லாத உள்நாட்டு சவால்களை எதிர்கொள்கிறது. அரசியல் விஞ்ஞானியும் தெற்காசிய அறிஞருமான ஸ்டீபன் பி. கோஹன் குறிப்பிட்டது போல், அதன் "சிறந்த இராணுவம்" தோல்வியடைந்த பொருளாதாரம், பிளவுபட்ட சமூகம் மற்றும் நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதிகளை நம்பியுள்ளது. பாகிஸ்தான் நிலைமை சாதகமான தேர்தல் முடிவைப் பெற இயலாமை மற்றும் PTI மற்றும் பிற குழுக்களின் தற்போதைய எதிர்ப்புகள் குறிப்பிடத்தக்க வரம்புகளை வெளிப்படுத்துகின்றன.