கிக் தொழிலாளர்களுக்கு சரியான சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் - கிங்சுக் சர்க்கார்

 கிக் வேலையில் 'வேலைவாய்ப்பு உறவை' வரையறுப்பது மிகவும் முக்கியமானது. 


ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமூக பாதுகாப்பு திட்டங்களில் கிக் தொழிலாளர்களை சேர்க்கும் தேசிய சட்டத்தை உருவாக்கி வருகிறது. இது கிக் தொழிலாளர்களுக்கு சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதிய சேமிப்பு போன்ற பலன்களை வழங்கும். சவாரி-பகிர்வு (ride-sharing) அல்லது உணவு விநியோக சேவைகள் போன்ற நிறுவனங்களை சமூக பாதுகாப்பு நிதிக்கு தங்கள் வருவாயில் 1%-2% பங்களிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


இந்த நிதி கிக் தொழிலாளர்களுக்கு உடல்நலக் காப்பீடு போன்ற பலன்களை வழங்கும். கிக் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறைகளை இன்றைய பணிச்சூழலுக்கு ஏற்றவாறு அரசாங்கம் புதுப்பித்து வருகிறது மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது.


புதிய சட்டம் கிக் தொழிலாளர்களுக்கான நல வாரிய மாதிரியை உருவாக்கும். இந்த வாரியம் அவர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒரு நிதியை உருவாக்கும். நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் சரியான காரணங்களுடன் 14 நாட்களுக்கு முன்னர் முன்னறிவிப்பை தொழிலாளர்களுக்கு தெரிவிக்க  வேண்டும். பணிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன அல்லது ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது போன்ற அவற்றின் தானியங்கு அமைப்புகள் (automated systems work) எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் நிறுவனங்கள் தெளிவாக இருக்க வேண்டும். கூடுதலாக, கிக் தொழிலாளர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு அமைப்பு அமைக்கப்படும்.


கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை அரசாங்க வலைத்தளத்தில் பதிவு செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சர் கூறினார். தொழிலாளர் அமைச்சகத்தின் e-Shram வலைத்தளத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள், ஆயுள்காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் பிற நன்மைகளைப் பெறலாம்.


தொழிலாளர் குறியீடுகள்  (Labour codes)


இந்த சூழலில், இந்தியா அரசு 2019 மற்றும் 2020-ல் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை உருவாக்கியது. இந்தக் குறியீடுகள் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தி மேம்படுத்தியது. 29 ஒன்றிய தொழிலாளர் சட்டங்களை நான்கு முக்கிய வகைகளாக அரசு இணைத்தது அவை: 


1.ஊதியங்கள் 

2.சமூகப் பாதுகாப்பு

3.தொழில்துறை உறவுகள் 

4.தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்.


கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களைக் குறிப்பிடும் ஒரே குறியீடு சமூகப் பாதுகாப்புக் குறியீடு (Social Security Code) 2020 ஆகும்.


இந்த குறியீட்டில், கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்கள் முறைசாரா துறையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். அதன்படி, கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்க இந்த குறியீடு வழிவகுத்தது. மேலும், முறைசாரா தொழிலாளர்களைப் போலவே, கிக் தொழிலாளர்களும் சுய அறிவிப்பு மூலம் e-Shram வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 


பணியாளர் வரையறை 


சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ல் கிக் தொழிலாளர்களின் வரையறையிலிருந்து இந்த பிரச்சினை எழுகிறது. இது அவர்களை பாரம்பரிய முதலாளி-பணியாளர் உறவுக்கு வெளியே வைக்கிறது. பல கிக் முதலாளிகள், நன்கு அறியப்பட்ட நிறுவனங்களைப் போலவே, முறையான துறையில் முறையான வணிகங்களாக போல செயல்படுவதால் பிரச்சனையாக உள்ளது. பாரம்பரிய வேலைவாய்ப்பு கட்டமைப்பிலிருந்து கிக் தொழிலாளர்களை விலக்குவது பிரச்சனையாக  உள்ளது.


“திரட்டிகள்” (‘aggregator’) என்று அழைக்கப்படும் சில நிறுவனங்கள், கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர் பொருளாதாரங்களில் வேண்டுமென்றே வேலைவாய்ப்பு உறவுகளை தெளிவற்றதாக மாற்ற முயற்சிக்கின்றன. இந்த அணுகுமுறை தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை தங்கள் தொழிலாளர்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிக் பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பின் தன்மை தெளிவாக இல்லை. கிக் தொழிலாளர்கள் பெரும்பாலும் பணியாளர்களுக்கு பதிலாக சுயாதீன தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

 

வேலை உறவுகளை தெளிவில்லாமல் செய்வது கிக் தொழிலாளர்கள் சுதந்திரமான தொழிலாளர்கள் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 இந்த தவறான புரிதலை ஏற்றுக்கொண்டு, கிக் தொழிலாளர்களை முறைசாரா துறையின் ஒரு பகுதியாக வகைப்படுத்துகிறது. இருப்பினும், கிக் பொருளாதாரத்தில் உண்மையான வேலைவாய்ப்பு உறவை இந்த குறியீடு தெளிவுபடுத்தவில்லை.


நிறுவன சமூக பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, 1961-ஆம் ஆண்டின் மகப்பேறு நன்மைச் சட்டத்தின் (Maternity Benefit Act, 1961) கீழ் முறையான தொழிலாளர்கள் 26 வார ஊதிய விடுப்பு மற்றும் பணிப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.


சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், பதிவுசெய்யப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் ₹5,000 முதல் ₹10,000 வரை மகப்பேறுக்கான பணப் பலன்களைப் பெறுகிறார்கள். இது நிறுவன சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு இடையே தெளிவான இடைவெளியை காட்டுகிறது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020 கிக் தொழிலாளர்களுக்கு சில சமூகப் பாதுகாப்பு திட்டங்களை மட்டுமே வழங்குகிறது. ஆனால், முழு நிறுவன சமூகப் பாதுகாப்பு இல்லை.


கிக் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள் போன்ற பிற பாதுகாப்புகளையும் இழக்கிறார்கள். அவர்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. கூடுதலாக, கிக் தொழிலாளர்கள் தொழில்துறை உறவுகள் குறியீடு  2020-லிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.


தொழிலாளர் சட்டங்களின் கீழ் பாதுகாப்பின் அடித்தளம் ஒரு தெளிவான வேலை உறவாகும். இருப்பினும், இந்த உறவு இந்தியாவில் கிக் வேலைக்காக வரையறுக்கப்படவில்லை. ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சட்டங்களும் கிக் தொழிலாளர்களுக்கு இந்த முக்கியமான வரையறையைக் கொண்டிருக்கவில்லை.


முக்கிய பிரச்சினை 


 ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தியாவில் வவளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க விரும்பினால், அது கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களின் வேலைகளில் உள்ள வேலைவாய்ப்பு உறவை தெளிவாக வரையறுக்க வேண்டும். இதன் பொருள் "திரட்டுபவர்களை" முதலாளிகளாக அங்கீகரிப்பது மற்றும் வேலைவாய்ப்பு உறவை தெளிவுபடுத்துவது முக்கியமான முன்னேற்றமாகும்.


 2021-ஆம் ஆண்டு உபெர் நிறுவன வழக்கில், U.K உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு முக்கியமான உதாரணம். Uber ஒரு முதலாளி என்றும், Uber டிரைவர்கள் "தொழிலாளர்கள்" என்றும், Uber நாட்டின் தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


வேலைவாய்ப்பு உறவு தெளிவாக வரையறுக்கப்பட்டவுடன், முன்மொழியப்பட்ட நான்கு தொழிலாளர் குறியீடுகளில் கிக் தொழிலாளர்கள் சேர்க்கப்படலாம். இது தனி சட்டங்களின் தேவையை நீக்கும். ஒன்றிய அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நல வாரிய மாதிரி கடந்த காலங்களில் பயனுள்ளதாக இல்லை. குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, முறையான முதலாளிகளிடம் பணிபுரிந்தாலும் முறைசாரா என வகைப்படுத்தப்பட்டது. கிக் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உறவை தெளிவுபடுத்துவது இத்துறையில் அவர்களின் நிலையை முறைப்படுத்த உதவும்.


கூடுதலாக, தற்போதுள்ள சட்டங்களை எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் தொழிலாளர் குறியீடு உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட தொழிலாளர் குழுக்களுக்கு தனியான சட்டங்களை உருவாக்குவது இந்த இலக்கிற்கு எதிரானது. கிக் வேலையில் வேலைவாய்ப்பு உறவை அங்கீகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இது முடிந்ததும், மற்ற சிக்கல்களைத் தீர்க்க முடியும். 


கிங்ஷுக் சர்க்கார் கோவா மேற்கு வங்க அரசாங்கத்தின் முன்னாள் தொழிலாளர் நிர்வாகியாக உள்ளார்.




Original article:

Share: