மக்கள் நல அரசியலின் தாக்கம் -ஜோதி மிஸ்ரா, ரிஷிகேஷ் யாதவ்

 மூன்றில் இரண்டு பங்கு (68%) வாக்காளர்கள் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வேட்பாளரையே ஆதரிப்பதாகக் கூறி உள்ளனர்.


ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக தனது வியூகத்தை மாற்றியது. அக்கட்சி பிரபலமான பல வாக்குறுதிகளை அளித்தது. இந்த வாக்குறுதிகள் அவர்களின் முந்தைய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கும் மற்ற கட்சிகளை பாஜக விமர்சித்து. ஆனால், சாதி மற்றும் கிராமப்புற பிரச்சனைகள் முக்கியமான ஹரியானாவில், அவர்கள் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தனர்.


தொடர்ந்து இரண்டு முறை வாக்காளர்களின் தொடர்ச்சியான  வாக்குகளைப் பெற, பாஜக இந்த தேர்தலில் புதிய மக்கள் நல திட்டங்களை அறிவித்தது. பெண்களுக்கு மாதம் ₹2,000, 300 யூனிட் இலவச மின்சாரம், இரண்டு லட்சம் அரசு வேலைகள் போன்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும். இவை பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருந்தது. நலத்திட்டங்களை மதிக்கும் கிராமப்புற வாக்காளர்களைக் கவரும் வகையில் இவற்றை அறிவித்தனர்.


வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (The Centre for the Study of Developing Societies (CSDS)) - லோக்நிதி (Lokniti) கணக்கெடுப்பு


ஹரியானாவில் CSDS-Lokniti கணக்கெடுப்பு ஒரு தெளிவான போக்கைக் காட்டியது. வாக்காளர்கள் குறிப்பிட்ட சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட நலன் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் கட்சிகளை விரும்புகிறார்கள் என்று அந்த கணக்கெடுப்பு குறிப்பிட்டது. 68% வாக்காளர்கள் நலன் மற்றும் வளர்ச்சியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரித்ததகவும், 27% பேர் மட்டுமே சார்ந்த பிரச்சனைகளை விரும்புவதாகவும், பெரும்பாலான வாக்காளர்கள் அடையாள அரசியலைக் காட்டிலும் உண்மையான பலன்களைப் பற்றியே அதிக அக்கறை கொண்டிருந்தனர் என்று CSDS-Lokniti  கணக்கெடுப்பு விரிவாக குறிப்பிட்டது.  


கிராமப்புறங்களில் இந்த எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது. 72% கிராமப்புற வாக்காளர்கள் நலனில் அக்கறை வேட்பாளர்களை கொண்ட விரும்புகின்றனர். 23% பேர் மட்டுமே சாதிப் பிரதிநிதித்துவத்தை விரும்பினர். நகர்ப்புறங்களில், 60% மக்கள் நலன் சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்தனர். 33% பேர் சாதி அடிப்படையிலான வாக்களிப்பை விரும்பினர். மக்கள் வாக்களிக்கும் விதத்தில் மக்கள் நல அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் பாரம்பரிய சாதி அரசியலை விட வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.


மாநிலத் திட்டங்களை விட ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்ததாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆயுஷ்மான் பாரத் (48%) மற்றும் உஜ்வாலா யோஜனா (36%) அதிக பயனாளிகள். ஐந்து வாக்காளர்களில் ஒருவர் மற்ற திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.


தேர்தலுக்கு முன், அரசு புதிய சலுகைகளை அறிவித்தது. 46 லட்சம் குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுத் திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. 20% நகர்ப்புற வாக்காளர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான சக்‌ஷம் யுவ யோஜனா (Haryana Mukhyamantri Shehri Awas Yojana) போன்ற பிற மாநிலத் திட்டங்கள் குறைவான மக்களைச் (16%)சென்றடைந்தன.


ஆயுஷ்மான் பாரத் யோஜனா மற்றும் உஜ்வாலா யோஜனா மூலம் பயனடைந்த மக்களில், காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. இந்தத் திட்டங்களால் பலர் பயனடைந்தாலும், அது பாஜகவுக்கு வலுவான வாக்குகளைப் பெற வழிவகுக்கவில்லை என்பதை முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது. மாறாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (Prime Minister Awas Yojana) பயனாளிகள் மத்தியில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், மாநில அரசின் திட்டங்களின் பயனாளிகள் காங்கிரஸை விட பாஜகவுக்கு அதிக விருப்பம் காட்டியுள்ளனர். மறுபுறம், எந்த திட்டத்திலும் பயனடையாதவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தனர்.


பாஜக அரசு பரிவார் பெச்சான் பத்ரா (Parivar Pehchan Patra (PPP)) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், குடும்பங்களுக்குத் தனிப்பட்ட குடும்ப அடையாளத்தை உருவாக்குவதன் மூலம் அரசாங்க சேவைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 72% வாக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பரிவார் பெச்சான் பத்ரா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 60%-க்கும் அதிகமானோர் பரிவார் பெச்சான் பத்ரா அரசாங்க சேவைகள் பெறுவதை எளிதாக்கியதாக நம்பியதாக தரவு காட்டுகிறது. இந்தத் திட்டமானது சேவைகளை கணிசமாக மேம்படுத்தியதாக உணர்ந்தவர்களில் பாதிக்கு மேல் (53%) பாஜகவுக்கு  வாக்களித்தனர். 


சேவைகளை இலகுவாக அணுகுவதன் மூலம் பயனடைந்த வாக்காளர்கள் கட்சியை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கிறது. முடிவில், நலத் திட்டங்கள், குறிப்பாக மாநில அரசுகளின் திட்டங்கள், பாஜகவுக்கு வாக்குகளைப் பெற உதவியது. ரிவார் பெச்சான் பத்ரா திட்டத்தின் மூலம் இந்தத் திட்டங்களை எளிதாக அணுகுவது, அரசாங்க சேவைகளுக்கு சிறந்த அணுகலைப் புகாரளிக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.


ஜோதி மிஸ்ரா, ரிஷிகேஷ் யாதவ் சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி ஆராய்ச்சியாளர்கள்




Original article:

Share: