ஜம்மு & காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் சிறப்பு என்ன? புதிய ஜம்மு & காஷ்மீர் சட்டசபைக்கு என்ன அதிகாரங்கள் இருக்கும்?
தற்போது நடைபெற்ற ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். சட்டப்பிரிவு 370-வது சிறப்புச் சட்டம் ஜம்மு & காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளித்தது. அதன் நீக்கம் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகுத்தது. அவை, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகும்.
(1) ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது. லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாறியது. ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்துடன் யூனியன் பிரதேசமாக மாறியது. அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பட்டியலிடுகிறது. புதிய மாநிலங்களை உருவாக்குதல் மற்றும் தற்போதுள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள் அல்லது பெயர்களை மாற்றுவது தொடர்பான அரசியலமைப்பின் 3-வது பிரிவுக்கு மற்றொரு திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஜம்மு & காஷ்மீரின் புதிய சட்டமன்றம் ஒரு யூனியன் பிரதேசதம் மற்றும் ஒரு சட்டமன்றத்தை கொண்டிருக்கும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
(2) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்தை வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு-239A ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்று 2019-ஆம் ஆண்டின் சட்டப்பிரிவு-13 கூறுகிறது.
(3) ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றம் : ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019, ஆனது துணைநிலை ஆளுநர் தனது கருத்தில், பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டமன்றத்திற்கு இரண்டு உறுப்பினர்களை பரிந்துரைக்கலாம் என்று கூறுனார்.
ஜூலை 2023-ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மேலும் மூன்று நியமன உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யப் பரிந்துரைத்தது. இந்த உறுப்பினர்களில், காஷ்மீர் புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த இருவர். அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். மற்றொருவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் இடம்பெயர்ந்தவர்களைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றம் புதுச்சேரி சட்டமன்றத்தைப் போன்றது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் (MLA) போலவே நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஜம்மு & காஷ்மீரைப் பொறுத்தவரை, ஐந்து உறுப்பினர்களை நியமிக்கலாம்.
(4) சட்டமன்றத்தின் அதிகாரங்கள் : 1947-ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டை மட்டுமே ஒப்படைத்தது. சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு & காஷ்மீருக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருந்தது. இருப்பினும், காலப்போக்கில், சட்டங்களை உருவாக்கும் ஒன்றியத்தின் அதிகாரம் அதிகரித்தது. ஒன்றியப் பட்டியலில் (அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் I-இல் பட்டியலிடப்பட்டுள்ள துறைகளில் மேலும் பல துறைகளைச் சேர்க்க இது நீட்டிக்கப்பட்டது.
2019-ன் மறுசீரமைப்புச் சட்டம் மிகவும் மாறுபட்ட அமைப்பை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பில், மாநில சட்டசபையை விட துணைநிலை ஆளுநர் ((Lieutenant Governor(LG)) மிகப் பெரிய பங்கு வகிக்கிறார் என்பது இரண்டு முக்கியமான விதிகளிலிருந்து இது தெளிவாகிறது.
முதலாவதாக, சட்டத்தின் பிரிவு 32 ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தின் சட்டமன்ற அதிகாரத்தை விளக்குகிறது. சட்டமன்றம் முழு யூனியன் பிரதேசத்திற்கும் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் சட்டங்களை உருவாக்க முடியும் என்று அது கூறுகிறது. பிரிவு-1 மற்றும் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள "பொது ஒழுங்கு" (Public Order) மற்றும் "காவல்துறை" (Police) ஆகிய இரண்டு துறைகளைத் தவிர, பிரிவு-32 சட்டங்கள் மாநிலப் பட்டியலில் உள்ள பதிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, யூனியன் பிரதேசங்களுக்கு அந்த விஷயங்கள் பொருந்தும் வரை, பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்றம் சட்டங்களை உருவாக்க முடியும்.
இரண்டாவதாக, 2019-ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு-36 நிதி மசோதாக்களுக்கான சிறப்பு விதிகளை உள்ளடக்கியது. துணைநிலை அளுநரின் பரிந்துரை இல்லாமல் சட்டப் பேரவையில் ஒரு மசோதா அல்லது திருத்தத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது முன்வைக்கவோ முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அரசு மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளவிருக்கும் ஏதேனும் நிதிக் கடமைகள் தொடர்பான சட்டங்களின் திருத்தத்தை மசோதா குறிப்பிடுகிறது என்றால் இந்தத் தேவை பொருந்தும்.
(5) ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் : 2019-ம் ஆண்டு சட்டம் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது.
சட்டப்பிரிவு-53 அமைச்சர்கள் குழுவின் பங்கை விவரிக்கிறது. பின்வரும் சூழ்நிலைகளில் துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று அது கூறுகிறது:
1. ஒரு விவகாரம் சட்டப் பேரவைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குப் புறம்பாக இருக்கும்போது.
2. சட்டப்படி துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் அல்லது ஏதேனும் நீதித்துறை செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.
3. இந்த விவகாரம் அகில இந்திய சேவைகள் (All India Services) மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணியகத்துடன் (Anti-Corruption Bureau) தொடர்புடையதாக இருக்கும்போது அதிகாரம் வழங்குகிறது.
துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால், இவரது முடிவே இறுதியானது என்று அரசியலமைப்புப் பிரிவு-53 கூறுகிறது. துணைநிலை ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதன் அடிப்படையில் அவரது செயல்களின் செல்லுபடியை யாரும் சவால் செய்ய முடியாது. கூடுதலாக, அமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு என்ன அறிவுரை வழங்கினர் என்பதை நீதிமன்றங்கள் விசாரிக்காது.
ஜம்மு & காஷ்மீர் பல சவால்களை எதிர்கொள்கிறது. இதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. சமீபத்தில், இந்த பிரச்சினை பிர் பஞ்சால் மலைகளுக்கு தெற்கே ஜம்மு பகுதிக்கு தொடர்ந்தது. ஆகஸ்ட் மாத அறிக்கைகள் ஜம்மு & காஷ்மீரில் ஒன்றிய அரசின் நிதியில் அதிகப்படியான நம்பிக்கை, குறைந்த விவசாய உற்பத்தி, மின் பற்றாக்குறை மற்றும் வேலை மற்றும் நில பாதுகாப்பின்மை போன்ற பல சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த பிரச்சனையில் மாற்றம் ஏற்பட, இதன் கவலைகள் பதிலளிக்கக்கூடிய மற்றும் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
(1) கிழக்கின் சுவிட்சர்லாந்து : ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மார்ச் 1846-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள், முதல் ஆங்கிலோ-சீக்கியப் போருக்குப் பிறகு, காஷ்மீரை ஜம்முவின் டோக்ரா ஜாகிர்தாரான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் நானக்ஷாஹி ரூபாய்களுக்கு (Nanakshahee rupees) விற்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது மகாராஜா ஹரி சிங் ஆட்சியாளராக இருந்தார். அவர் குலாப் சிங்கின் வழித்தோன்றல் ஆவார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, பிராந்தியங்களைப் பிரித்தெடுக்கத் தயாரானபோது, அவர்கள் சமஸ்தானங்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்கினர். அவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரலாம் அல்லது சுதந்திரமாக இருக்க தேர்வு செய்யலாம். இருப்பினும், சுதந்திரமாக இருப்பது நடைமுறையில் விருப்பமாக இருக்கவில்லை. "கிழக்கின் சுவிட்சர்லாந்து" (Switzerland of the East) போல காஷ்மீரை "முற்றிலும் நடுநிலை" ஆக்க வேண்டும் என்று கனவு கண்ட ஹரி சிங்கிற்கு இந்தத் தேர்வு ஈர்க்கப்பட்டது.
(2) ஹரி சிங் இந்தியாவிற்கு வருகை : ஜூன் 1947-ஆம் ஆண்டில், வைஸ்ராய் லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபு ஸ்ரீநகருக்கு வருகை தந்தார். இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அவர் ஹரி சிங்கிற்கு அறிவுறுத்தினார். ஆனால், இந்த பிராந்தியம் சுதந்திரத்தை விரும்புவதாகக் கூறினார்.
ஆகஸ்ட் 15, 1947-ஆம் ஆண்டில், ஹரி சிங் எந்த நாட்டிலும் சேர மறுத்துவிட்டார். பிரிட்டிஷாரின் கீழ் இருந்தது போல் வர்த்தகம் மற்றும் தகவல்தொடர்புகளை தொடர இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டுடனும் "நிலையான உடன்பாடுகளை" அவர் முன்மொழிந்தார். பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்தியா காத்திருக்க முடிவு செய்தது.
ஒரு குறுகிய காலத்திற்கு, ஜம்மு & காஷ்மீர் தொழில்நுட்ப ரீதியாக சுதந்திரமாக இருந்தது. ஆனால், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், அக்டோபர் 22 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து ஊடுருவல்காரர்களின் படையெடுப்பை அது எதிர்கொண்டது.
ஊடுருவல்காரர்கள் விரைவாக முன்னேறி, முசாபராபாத்தைக் கைப்பற்றி ஹரி சிங்கின் படைகளை உரியில் (Uri) தோற்கடித்தனர். மகாராஜா இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்டார்.
அக்டோபர் 26 அன்று, ஒரு மூத்த இந்திய அதிகாரியான வி.பி. மேனன் பாதுகாப்புக் குழுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டார். ஹரி சிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்தியா உதவ வேண்டும் என்று கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கூறினார். இதையடுத்து ஹரி சிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.