இந்தியா தனது கார்பன் வரவினம் (carbon credits) திறனை அடைவதற்கான வழிமுறைகள் - பி.வி.எஸ் சூரியகுமார், ராஜேஷ் குப்தா

 சமூகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் வரவின சந்தைகளை (carbon credit markets) மறுஅளவீடு செய்வது முக்கியம். 


சமீபத்தில், சமூக ஆளுமைகளும் மற்றும் சமாரியர்களின் குழுவும் கார்பன் வரவினம் (Carbon Credits (CC)) பற்றி விவாதித்தனர். கார்பன் வரவினம் ஒரு பெரிய நிதி வாய்ப்பை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், சந்தைக்கான முகவர்கள் பரிந்துரைப்பதை விட யதார்த்தம் மிகவும் சிக்கலானது. 


கார்பன் வரவினம் (Carbon Credit): 

ஒரு நிறுவனம் குறைவான அளவில் கார்பன் டைஆக்சைடை வெளியேற்ற அனுமதிப்பது ஆகும்.

1997-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கியோட்டோ நெறிமுறை, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தொடக்கத்தை அங்கீகரித்தது. வளிமண்டலத்தில் கார்பனைக் குறைக்கும் கட்டமைப்புகளையும் அறிமுகப்படுத்தியது. கார்பன் வரவினம் இந்த நிதி கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.


கார்பன் சந்தைகள் மாசுபடுத்துபவர்களுக்கு, பெரு நிறுவனங்கள் போன்ற, திட்டங்களுக்கு பணம் செலுத்த வழிகளை உருவாக்குகின்றன. கார்பன் கடன்களாக (CC) உமிழ்வை அடையாளப்படுத்துதல் செய்து வர்த்தகம் செய்வதன் மூலம் இதைச் செய்கிறார்கள். நிதி பெறும் திட்டங்களில் காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், மீத்தேன் பிடிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் பசுமை இல்ல வாயு (Greenhouse gases (GHGs) வெளியேற்றத்தை பிடிக்க அல்லது தடுக்க உதவுகின்றன.


ஒரு உமிழ்வு திட்டத்திலிருந்து ஒரு கார்பன் குறைப்பு செய்யும் போது, ​​அது வளிமண்டலத்தில் இருந்து கார்பனைக் குறைக்கிறது. இதன் விளைவாக, உமிழ்ப்பான் ஒரு டன் பசுமை இல்ல வாயுக்களை (GHG) வெளியிடலாம். இந்த செயல்முறையானது இந்த நிறுவனங்கள் தங்களை "கார்பன் நடுநிலை" (carbon neutral) அல்லது "பசுமை" (green) என்று பதிவு செய்ய அனுமதிக்கிறது.


இரண்டு வகையான கார்பன் சந்தைகள் உள்ளன. அவை, தன்னார்வ (voluntary) மற்றும் இணக்கம் சார்ந்தவை (compliance-oriented) ஆகும். தன்னார்வ சந்தைகள் கட்டுப்பாடற்றவை மற்றும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கார்பன் உமிழ்வை குறைக்க அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கின்றன. அவர்கள் தனியார் முதலீட்டை காலநிலை தீர்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் இதைச் செய்கிறார்கள். இணக்கம் சார்ந்த சந்தைகள் அரசாங்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் தொழில்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துகின்றனர். உமிழ்வைக் கண்காணித்தல், கடன்களை வழங்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியவை ஆகும்.


உலகளவில், 9,089 தன்னார்வ சந்தை திட்டங்கள் (voluntary market projects)  உள்ளன. இவற்றில் 1,636 திட்டங்கள் (18 சதவீதம்) இந்திய விநியோகர்களிடமிருந்து வந்தவை. இந்த விநியோகர்கள் இன்றுவரை 333 மில்லியன் கடன்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், இந்த சந்தைகளின் கட்டுப்பாடற்ற தன்மை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. 


பெரும்பாலும் சரிபார்க்க முடியாத உரிமைகோரல்கள், தகவல் சமச்சீரற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மையற்ற நடத்துபவர்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு சதுப்புநில மறுசீரமைப்பு திட்ட (mangrove restoration project) மேம்பாட்டாளர் ஒவ்வொரு ஹெக்டருக்கும் ஆண்டுக்கு ₹15,000 செலுத்துவதாக உறுதியளித்தார். இதன்படி, "ஒரு வருடத்திற்கும் மேலாக நாங்கள் அவர்களிடம் இருந்து கேட்கவில்லை அல்லது எந்தப் பணத்தையும் பெறவில்லை" என்று ஒரு விவசாயி கூறினார்.


விவசாய பண்ணை உமிழ்வுகள் 


நிதி ஆயோக்கின் கூற்றுப்படி, நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் இந்திய விவசாயம் 13% பங்களிக்கிறது.  இந்தியாவில் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது இந்த கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும். இந்த மாற்றத்தை அடிமட்ட இயக்கங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆதரிக்கிறது. இயற்கை விவசாயம் உரம், நீர், எரிசக்தி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கிறது. இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையும் அதிகரிக்கிறது.


இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் குறைந்த இடுபொருள் செலவுகளால் பயனடைவார்கள். அவர்கள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கலாம். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை "உண்மையான மற்றும் இயற்கையானவை" என்று சந்தைப்படுத்தினால் அவர்கள் சிறந்த விலையைப் பெறலாம். 


இயற்கை விவசாயத்தில் கார்பன் கடன் முறைகளை (carbon credit systems (CC)) செயல்படுத்தினால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியும். சில ஆய்வுகள் இந்த நன்மைகள் ஒரு ஹெக்டேருக்கு வருடத்திற்கு இரண்டு முதல் ஐந்து கார்பன் வரவுகள் என்று கூறுகின்றன. இது ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ₹1,000 முதல் ₹4,000 வரை சமமாகும்.


இந்தியாவில் நிகர விதைப்புக்கான பரப்பளவு 139 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்த பெரிய சந்தையளவு லாபகரமானதாக தோன்றுகிறது. இது புத்தொழில் நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தலின் ஆர்வத்தை விளக்குகிறது.


கார்பன் கடன்களை உருவாக்கக்கூடிய யதார்த்தமான விவசாயத் திட்டம் என்ன?


கார்பன் கடன்களை உருவாக்கக்கூடிய ஒரு யதார்த்தமான திட்டத்திற்கு சுமார் 10,000 ஹெக்டேர் விவசாய நிலம் தேவைப்படும். கார்பன் கடன்களை உருவாக்கி வழங்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதற்கான திட்ட செலவு சுமார் 4-5 கோடி ரூபாய் இருக்கும். இதில் பங்குதாரர் ஆலோசனைகள், நிலப் பதிவு சரிபார்ப்புகள், KYC சரிபார்ப்பு, ஒப்பந்த மேம்பாடு, தொழில்நுட்ப தழுவல், முறையியல் சவால்கள் மற்றும் தணிக்கைகள் ஆகியவை அடங்கும். கார்பன் தனிமைப்படுத்தப்படுவதால் இத்தகைய திட்டங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றன. கூட்டுறவுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations (FPO)) அளவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். 


2015-ஆம் ஆண்டின், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கார்பன் வரவினம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் கார்பன் தீவிரத்தை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியா தனது எரிசக்தி சேமிப்பு சட்டத்தை 2022-ஆம் ஆண்டில் திருத்தியது மற்றும் கட்டாய தொழில்களுக்கான இணக்க சந்தையை நோக்கி செயல்பட்டு வருகிறது.


 இந்த சந்தை இறுதியில் தன்னார்வ சந்தை வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் பசுமை வரவினம் கட்டமைப்பு தன்னார்வ நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. சிறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்கவும், கார்பன் கடன்கலிருந்து பயனடையவும் உதவும் வகையில், வேளாண் அமைச்சகம் ஜனவரி 2024-ல் ஒரு கட்டமைப்பை வெளியிட்டது. 


சமூகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்புகளை உருவாக்குவதன் மூலம் கார்பன் கடன் சந்தைகளை சீர்திருத்துவது முக்கியம். முழுமையான வெளிப்படைத்தன்மை, உள்ளூர் நிர்வாகம், கடுமையான சரிபார்ப்பு மற்றும் மேம்பாட்டாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களின் பொறுப்பு வகிப்பதாக இருக்க வேண்டும். 


சூர்யகுமார் நபார்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநராகவும், குப்தா சி-ஜெம் நிறுவனராகவும் இருந்தவர்.




Original article:

Share: