வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் துயரங்களுக்கு எளிதான தீர்வுகள் இல்லை.
லிபியாவில் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் வேலை செய்ய ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் 16 இந்தியத் தொழிலாளர்களின் கதை வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் எதிர்கொள்ளும் தொழிலாளர் சுரண்டலின் (labor exploitation) தொடர்ச்சியான பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்க அறிக்கைகளின்படி, வேலைவாய்ப்பிற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற இந்தத் தொழிலாளர்கள் பின்னர் லிபியாவின் பெங்காசிக்கு ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
இந்திய தூதரகம் அவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கி வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான வெளியேற்றுவதற்கான அனுமதி இல்லாமல் (without exit permits) தொழிலாளர்கள் வெளியேற முடியாது. இந்த நிகழ்வு தனித்துவமானது அல்ல. ஜூன் மாதம், குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய குவைத் பயணம், இந்தியத் தொழிலாளர்களின், குறிப்பாக தொழிலாளர் முகாம்களில் உள்ளவர்களின் போராட்டங்கள் குறித்து கவனத்தில் கொண்டு வந்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் கொண்ட இந்திய சமூகத்திற்கு குவைத்தின் ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்ட போதிலும், இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் கவலைக்குரியதாகவே உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, வெளிநாடுகளில் சுமார் 13 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் குடியுரிமை பெறத் தகுதியற்ற இந்தத் தொழிலாளர்கள், பணம் அனுப்புவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள். 2022-ம் ஆண்டில் சுமார் $111 பில்லியன் அனுப்பியுள்ளனர். இருப்பினும், அவர்களின் தனிப்பட்ட ஆதாயங்கள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். பலர் ஆட்சேர்ப்புக்கான கட்டணம், பயணம் மற்றும் இடமாற்றத்திற்கான கடன்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் கஃபாலா அமைப்பு போன்ற சுரண்டல் வேலைகளின் நிலைமைகளால் பலர் கவலைகிடமாக உள்ளனர்.
இந்திய அரசாங்கம் தொழிலாளர் இடம்பெயர்வை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது பத்தாண்டுகளுக்கு முன்னர் e-Migrate அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, 18 நாடுகளுக்கு குடியேற்ற அனுமதி (Emigration Clearance (ECR)) தேவைப்படும் தொழிலாளர்களுக்கு இது ஒரு முன்னேற்றமாக உள்ளது. இருப்பினும், சர்வதேச வலையமைப்புகளில் செயல்படும் தொழிலாளர் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் முகவர்கள், பெரும்பாலும் இந்த பாதுகாப்புகளை மீறுகின்றனர். மேலும், இந்த பாதுகாப்புகள் இஸ்ரேல் மற்றும் ரஷ்யா போன்ற குடியேற்ற அனுமதி (ECR) அல்லாத நாடுகளுக்கு நீட்டிக்கப்படவில்லை. இந்த நாடுகளில், இந்தியத் தொழிலாளர்கள் மோதல் பகுதிகளில் மரணம் உட்பட கடுமையான விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தியாவின் குடியேற்றச் சட்டத்தில் (Emigration Act) சீர்திருத்தங்கள் தேவை. ஆட்சேர்ப்பு முகவர்கள் மீது கடுமையான கண்காணிப்பும் இருக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து அதிக இழப்பீட்டுக்கான உத்தரவாதங்களைக் கோருவது மிகவும் முக்கியம். எவ்வாறாயினும், இந்தியாவிற்குள் நியாயமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே மிகவும் நீடித்த தீர்வாகும். இறுதியில், சில சந்தர்ப்பங்களில், லிபியாவில் உள்ள தொழிலாளர்களைப் போலவே, அரசாங்கம் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்.
ஆயினும்கூட, பலர் இருண்ட எதிர்காலத்திற்குத் திரும்புகிறார்கள். பெரும்பாலானோருக்கு, வெளிநாட்டில் உள்ள வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்கள், உள்நாட்டில் உள்ள நிலையைவிட இன்னும் சிறப்பாகத் தெரிகிறது. இந்தியா தனது புலம்பெயர்ந்தோரின் வெற்றியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை முன்னிலைப்படுத்தவும் உரையாற்றவும் குடியிருப்பு அல்லாதோர் தினம் (Pravasi Bharatiya Sammelan) போன்ற நிகழ்வுகளைப் பயன்படுத்த வேண்டும். அவர்களின் சிரமங்கள் உலகளவில் இந்தியாவின் உயரும் பொருளாதார மற்றும் இராஜதந்திர நிலைக்கு முற்றிலும் மாறுபட்டவை.