சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் அது குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். ஒவ்வொரு சாதியினருக்கும் அரசு வேலைகள் மற்றும் பிற வாய்ப்புகளில் நியாயமான இடஓதுக்கீட்டைப்பெற சாதிவாரி கணக்கெடுப்பு உதவும். இருப்பினும், ஒரு விரிவான ஆய்வு இரண்டு முக்கிய சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைக்கு மாறானது மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைப் (proportional representation) பயன்படுத்துவது முன்னேற்றத்தைக் குறைத்து புதிய சவால்களை உருவாக்கலாம்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கை அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவாதம் எதிர்க்கட்சித் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமீபத்தில் விவாதத்தில் இணைந்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மூலம் இயக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள் அதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர். ஒவ்வொரு சாதியினரின் மக்கள் தொகையையும் துல்லியமாக கணக்கிட முடியும். இந்த எண்கள் பின்னர் வளங்களை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்ய பயன்படுத்தப்படலாம். இதில் அரசு வேலைகள், நிலம் மற்றும் செல்வம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு, சாதியினரும் அவர்களுக்கு தேவையான விகிதாசார பங்கைப் பெறுவதை சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என்று அதன் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு : வரலாற்றுப் பின்னணி
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. முதல் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு 1871-72ல் நடத்தப்பட்டது. இது சாதி அடிப்படையிலான தகவல்களைச் சேகரிக்கவும், பல்வேறு குழுக்களை வகைப்படுத்தவும் முயற்சி செய்தது. மேலும், வடமேற்கு மாகாணங்கள், மத்திய மாகாணங்கள், வங்காளம் மற்றும் சென்னை ஆகிய நான்கு முக்கிய பிராந்தியங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சாதி பற்றிய அடிப்படை மற்றும் வரையறுக்கப்பட்ட புரிதலின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு பல குழுக்களை உருவாக்கியது. பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியாக்கள் மற்றும் "இந்துக்களின் பிற சாதிகள்”. வடமேற்கு மாகாணங்களில், நான்கு குழுக்களாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டன. மத்திய மாகாணங்களில், "வேலைக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள்" மற்றும் "பணியாளர்கள் மற்றும் பக்தர்கள்" போன்ற பிரிவுகள் தோராயமாக இந்தக் குழுக்களில் சேர்க்கப்பட்டன. வங்காளத்தில், பிச்சைக்காரர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் சமையல்காரர்கள் போன்ற குழுக்கள் சேர்க்கப்பட்டன. மெட்ராஸில், "கலப்பு சாதிகள்" மற்றும் "பிறசாதியினர்" போன்ற புதிய பிரிவுகள் தனித்தனி வகைகளாக சேர்க்கப்பட்டன.
1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையைத் தயாரித்த டபிள்யூ. சிச்செல் ப்லோடன் (W. Chichele Plowden) சாதியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களால் விரக்தியடைந்தார். சாதி பற்றிய முழுக் கேள்வியையும் 'குழப்பம்' என்று குறிப்பிட்டார். மேலும், எதிர்கால மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதி மற்றும் பழங்குடி தகவல்களை சேகரிக்க முயற்சிக்காது என்று அவர் நம்பினார். இருப்பினும், 1931ஆம் ஆண்டு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் 4,147 சாதிகளை அடையாளப்படுத்திய பின்னரும் அதே பிரச்சினைகள் தொடர்ந்தன. வெவ்வேறு பகுதிகளில் சாதிக் குழுக்கள் வித்தியாசமாக அடையாளம் காணப்படுவதைக் கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
இந்த சவால்கள் இன்றும் உள்ளன மேலும் இந்தியாவிற்கு சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது கடினமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census (SECC)) 46.7 லட்சத்திற்கும் அதிகமான சாதிகள் மற்றும் துணை சாதிகளை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், 8.2 கோடி பிழைகள் இருந்தன. சமீபத்திய எடுத்துக்காட்டாக, 2022ஆம் ஆண்டின் பீகார் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 'ஹிஜ்ரா' மற்றும் 'கின்னரை' வகைகளாகச் சேர்ப்பதில் சர்ச்சை ஏற்பட்டது.
துல்லியமான தரவை அணுகுவதற்கான சவால்கள்
மேல்நோக்கிச் செல்லும் சாதிய இயக்கத்தின் கூற்று, குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் கௌரவம் மற்றும் வர்ணப் படிநிலையில் அவர்களின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தங்கள் சாதியைப் புகாரளிக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. 1921 மற்றும் 1931 மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையே சாதி அறிக்கையிடலில் ஏற்பட்ட மாற்றங்களில் இதைக் காணலாம். 1921-ல் வர்ண அமைப்பில் தாழ்ந்த நிலைகளைச் சேர்ந்ததாக அறிவித்த சில சமூகங்கள் பின்னர் 1931-ல் உயர் பதவிகளைக் கோரின. மற்றொரு முக்கியமான கண்டறிதல் என்னவென்றால், சோனார் (Sonar) போன்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளைப் புகாரளித்தனர். 1921-ல், சிலர் க்ஷத்ரியர் மற்றும் ராஜ்புத் எனப் புகாரளித்தனர், மற்றவர்கள் 1931-ல் பிராமணர் மற்றும் வைசியர்களாக அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் ஒரே பிராந்தியத்தில் உள்ளனர். இந்த மாற்றங்கள் காலனித்துவ மக்கள்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்டன, அவற்றின் தாக்கம் இன்றும் முக்கியமானது.
சிலர் தொடர்புடைய சாத்தியமான நன்மைகளை அவர்கள் அறிந்திருக்கும் போது தாங்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கோரலாம். இந்தப் போக்கு பெரும்பாலும் சுதந்திரத்திற்குப் பிறகு தொடங்கியது. இட ஒதுக்கீடு கொள்கைகளுடன் இணைக்கப்பட்ட நன்மைகள் காரணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சில உயர் சாதியினர் இதர பிற்படுத்தப்பட்ட நிலையைக் கோரலாம் அல்லது சில இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் இந்த நன்மைகளை அணுக பழங்குடியின நிலையைக் கோரலாம்.
ஒரே மாதிரி ஒலிக்கும் சாதிகள் மற்றும் குடும்பப்பெயர்கள் பெரும்பாலும் சாதி வகைப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ராஜஸ்தானில், 'தனக்', 'தாங்கியா' மற்றும் 'தனுக்' போன்ற குடும்பப்பெயர்கள் படியிலிடப்பட்ட சாதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் 'தங்கா' பழங்குடியின சாதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது. வங்காளத்தில், 'சென்' என்பது உயர் சாதி குடும்பப் பெயராகும். அதே சமயம் 'செயின்' என்பது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் முடிதிருத்தும் சமூகத்துடன் தொடர்புடையது. கணக்கெடுப்பாளர்கள் இத்தகைய குடும்பப்பெயர்களைத் தவறாகப் பதிவுசெய்து, தவறான வகைகளில் மக்களை வைக்கலாம். சாதி என்பதும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது பதிலளிப்பவர்கள் மற்றும் கணக்கீட்டாளர்கள் இருவருக்கும் சிரமங்களை உருவாக்குகிறது. இது போன்ற சூழல்கள், கணக்கீட்டாளர்கள் சாதி பற்றிய நேரடியான கேள்விகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக குடும்பப்பெயர்களின் அடிப்படையில் சாதியைக் கருதி, தவறான வகைப்படுத்தலின் வாய்ப்பை அதிகரிக்கும்.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் (proportional representation)
இடஒதுக்கீடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவம் நியாயமானதாக தோன்றலாம். ஆனால், அது நடைமுறைக்கு மாறானது மற்றும் பிற்போக்குத்தனமானது. ஒவ்வொரு பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டின் சதவீதத்தால் 100ஐப் பிரிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு முறை செயல்படுகிறது. அந்த குழுவிற்கு எத்தனை பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை இது விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, OBC இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு இருப்பதால், காலியிடங்களின் பட்டியலில் ஒவ்வொரு 4வது இடமும் பிரிவில் இடம்பெற்றுள்ள நபருக்கு செல்லும் (100/27 = 3.7, தோராயமாக 4இடம் பெறுவார்கள்). இதேபோல், பட்டியலிடப்பட்ட சாதி விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு 7வது இடத்தையும் (100/15 = 6.7, தோராயமாக 7 இடம் பெறுவார்கள்) பழங்குடியின விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு 14வது (100/7.5 = 13.3, தோராயமாக 14 இடம் பெறுவார்கள்), மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Section (EWS)) ஒவ்வொரு 10வது (100/10 = 10 இடத்தை) இடத்தைப் பெறுவார்கள்.
இருப்பினும், தனிப்பட்ட சாதிகளுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுகின்றன. இந்தியாவில் சுமார் 6,000 சாதிகள் உள்ளன. மேலும், 1.4 பில்லியன் மக்கள் தொகையில் ஒவ்வொரு சாதியிலும் சராசரியாக 2.3 லட்சம் மக்கள் இருப்பார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு சாதியில் 10,000 பேர் மட்டுமே இருந்தால் (மொத்த மக்கள் தொகையில் 0.0007%), ஒரு ஒதுக்கப்பட்ட காலியிடத்தைப் பெற 1,40,845 பதவிகள் தேவைப்படும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) பொதுவாக ஆண்டுக்கு 1,000 காலியிடங்களை விளம்பரப்படுத்துவதால், இந்த சாதியினர் ஒரு காலியிடத்தைப் பெற 141 ஆண்டுகள் ஆகும். 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பில் (Socio-Economic and Caste Census (SECC)) பதிவாகியுள்ள 46.7 லட்சம் சாதிகள்/துணை சாதிகளைக் கருத்தில் கொண்டால், காலியிடங்களின் எண்ணிக்கை 46,73,034-ஆக இருக்கும். மேலும், UPSC குறைந்த மக்கள்தொகை கொண்ட சாதியினருக்கு ஒரு காலியிடத்தை வழங்க 7,000 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும்.
எனவே, தனிநபர் சாதி அளவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்பது பிற்போக்குத்தனமானது. இடஒதுக்கீட்டில் இருந்து பயனடைவதிலிருந்து குறைந்த மக்கள்தொகை கொண்ட சாதிகளை இது நியாயமற்ற முறையில் ஒதுக்கும்.
அனிஷ் குப்தா டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் கற்பிக்கிறார். சுபம் சர்மா நொய்டாவில் உள்ள கல்வி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் தொழில் வல்லுநராக உள்ளார்.