முறைகேடான கடன் வழங்குதலுக்கு சிறை, கடுமையான அபராதத்தை புதிய மசோதா முன்மொழிகிறது. -ஷிஷிர் சின்ஹா

 டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பவர்கள் உட்பட, கட்டுப்பாடற்ற கடன் வழங்குபவர்களால் எந்தவொரு நபரையும் துன்புறுத்துவதும் தண்டனைக்குரியது ஆகும்.


ஒரு புதிய வரைவு மசோதா, நேரிலோ அல்லது ஆன்லைனிலோ கட்டுப்பாடற்ற கடன் வழங்கினால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று முன்மொழிகிறது. டிஜிட்டல் முறையில் கடன் கொடுப்பவர்கள் உட்பட, கட்டுப்பாடற்ற கடன் வழங்குபவர்களால் ஒருவர் துன்புறுத்தப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கடன் தொகையைவிட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.


நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, 'ஒழுங்கற்ற கடன் செயல்பாடுகளைத் தடை செய்வது (Banning of Unregulated Lending Activities (BULA)) மசோதா என்ற புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, ரிசர்வ் வங்கி அல்லது பிற கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்படாத, எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படாத எந்தவொரு நபர் அல்லது குழுவையும் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




கருத்து கேட்டல்


இந்த வரைவு பொதுமக்களின் கருத்துகளுக்காக விடப்பட்டுள்ளது. கருத்துக்களை பிப்ரவரி 13, 2025-ஆம் ஆண்டுக்குள் சமர்ப்பிக்கலாம். 


இந்த வரைவு 'பொது கடன் நடவடிக்கை' என்பதை எந்தவொரு நபரும் கடன் அல்லது முன்பணம் அல்லது வேறுவிதமாக நிதியளிப்பதற்கான வணிகமாக வரையறுக்கிறது. அது தனது சொந்த நடவடிக்கையைத் தவிர வேறு எந்த செயலுக்கும் வட்டியில், ரொக்கமாகவோ அல்லது வேறு வகையாகவோ உள்ளது. ஆனால், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்கள் இதில் அடங்காது. ரிசர்வ் வங்கி சட்டம், வங்கி ஒழுங்குமுறை சட்டம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆயுள் காப்பீட்டுக் கழகம், தேசிய வீட்டுவசதி வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கிகள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள், சீட்டு நிதிகள் மற்றும் மாநில பண கடன் வழங்குநர்கள் சட்டங்கள் போன்ற அரசியலமைப்பின் முதல் அட்டவணையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட போன்ற கடன் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் 20 சட்டங்களை இது பட்டியலிடுகிறது.  


இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தின் மீறல்கள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டிற்கும் உட்பட்ட அறியக்கூடிய மற்றும் பினையில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும். "இந்த சட்டத்தை மீறி டிஜிட்டல் அல்லது வேறுவிதமாக கடன்களை வழங்கும் எந்தவொரு கடனளிப்பவருக்கும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், 2 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவதற்கு அல்லது கடன்களை மீட்டெடுக்க சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தும் கடன் வழங்குநர்கள் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள்" என்று வரைவு கூறியது.  


கடன் வழங்குபவர், கடன் வாங்கியவர் அல்லது சொத்துக்கள் பல மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அமைந்திருந்தால் அல்லது சம்பந்தப்பட்ட மொத்த தொகை பொது நலனை கணிசமாக பாதிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் விசாரணை சிபிஐ விசாரனைக்கு மாற்றப்படலாம் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது. குறிப்பிடப்பட்ட சட்டங்களால் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் நடவடிக்கையையும் விலக்குவதற்காக கட்டுப்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து முதல் அட்டவணையை திருத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்க இது முயல்கிறது.  


குழுவின் பரிந்துரைகள் 


இந்த மசோதா டிஜிட்டல் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் பணிக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுகிறது. இது அதன் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கட்டுப்பாடற்ற கடன் வழங்குவதைத் தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்தது. முன்னதாக, தகவல் தொழில்நுட்ப (Information Technology) சட்டம் (2000), கீழ் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள் (2021) , அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 


தற்போதுள்ள சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் இதுபோன்ற செயலிகளை பிளே ஸ்டோர் / ஆப் ஸ்டோர் (intermediaries) மூலம் அரசாங்கம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் கோரும்போது இவற்றை அகற்ற இவை அதிகாரம் வழங்குகின்றன. மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்தந்த இடைத்தரகர்களை (ஆப் ஸ்டோர்கள்) ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பட்டியல் மற்றும் அவர்களின் ஆப் ஸ்டோர்களில் உள்ள கடன் செயலிகளை மட்டுமே வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 




Original article:

Share: