பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதை தமிழ்நாட்டின் புதிய மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. -தி ஹிந்து பீரோ

 பாதிக்கப்பட்டவர் விண்ணப்பித்தால், ஒரு நீதிபதி 'பாதுகாப்பு உத்தரவை' (‘protection order’) பிறப்பிக்க முடியும். இந்த உத்தரவு, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொள்வதையோ அல்லது துன்புறுத்துவதையோ தடுக்கிறது.


வெள்ளிக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை திருத்தம் சட்டத்தை (Tamil Nadu Prohibition of Harassment of Women (Amendment) Act) திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்வதைச் சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது.


மசோதா சட்டத்தில் 7C என்ற பிரிவைச் சேர்க்க முன்மொழிந்தது.  இந்தப் பிரிவு பாதிக்கப்பட்ட நபருக்கு "பாதுகாப்பு உத்தரவை" (protection order) பெற அனுமதிக்கும். நீதிபதி இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும். இது குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வடிவத்திலும் அந்த நபருடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதைத் தடுக்கும். இதில் தனிப்பட்ட, வாய்மொழி, எழுத்து, மின்னணு அல்லது தொலைபேசி தொடர்பு அல்லது மற்றவர்கள் மூலம் தொடர்பு கொள்வது ஆகியவை அடங்கும்.

 

பாதிக்கப்பட்ட நபரின் விண்ணப்பத்தின் பேரில்  நீதிபதி உத்தரவைப் பிறப்பிக்க முடியும். விசாரணை அதிகாரியின் அறிக்கையையும் நீதிபதி மதிப்பாய்வு செய்வார். குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் (Bharatiya Nyaya Sanhita (BNS)), பிரிவுகள் 74-79 அல்லது பிரிவு 296 இன் கீழ் குற்றம் நடந்ததாக நீதிபதி நம்பினால் அவரால் உத்தரவைப் பிறப்பிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் பாதுகாப்பு உத்தரவை மீறினால், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

டிஜிட்டல் மற்றும் மின்னணு துன்புறுத்தல் உட்பட பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் சட்டத்தின் கீழ் சேர்ப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். சில குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கவும் இது முன்மொழிகிறது.

 

இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால், பெண்களை துன்புறுத்துவது அல்லது பொது இடங்களில் இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உதவுவது தண்டனைக்கு வழிவகுக்கும்.  முதல் குற்றத்திற்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.  இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். துன்புறுத்தல் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தால், மரண தண்டனை வழங்கப்படலாம். 


தற்கொலைக்கு வழிவகுக்கும் துன்புறுத்தலுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை ஏற்படுத்தும் துன்புறுத்தல், தற்கொலை அல்லது தற்கொலைக்கு உதவும் துன்புறுத்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். இந்தக் குற்றங்கள் கைது செய்யக்கூடியவையாக இருக்கும். காவல்துறையினர் பிடியாணை (warrant) இல்லாமல் கைது செய்யலாம். மேலும், இந்த குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாதவை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீன் பெற முடியாது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், சினிமாக்கள், பூங்காக்கள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களைத் துன்புறுத்துவதும் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.


பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களின் பொறுப்பாளர்கள் CCTV கேமராக்கள் மற்றும் விளக்குகளை நிறுவ வேண்டும். மேலும், பெண்கள் மீதான துன்புறுத்தலைத் தடுக்க அவர்கள் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.

 

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) ஆகியவற்றைத் திருத்துவதற்கான ஒரு மசோதா, சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகிறது. ஒரு பெண்ணின்  தன்னடகக்த்திற்கு (modesty) தீங்கு விளைவிக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் போன்ற வழக்குகளில், இந்த மசோதா குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை முன்மொழிகிறது. இதில் தண்டனையை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.


இந்த மசோதா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்ச ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் முன்மொழிகிறது. தற்போதைய, குறைந்தபட்ச 20 ஆண்டுகள் என்பதை இந்த மசோதா மாற்றுகிறது. 18 வயது பூர்த்தி செய்யாத பெண் சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்தல், ஆயுள் தண்டனையை ஆயுள் தண்டனையுடன் மாற்ற கடுமையான சிறைத்தண்டனையை மசோதா முன்மொழிகிறது.

 

இந்த மசோதாக்கள் ஜனவரி 11-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Original article:

Share: