ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில், அதிக கடன் வாங்குவதன் தாக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 உங்களுக்குத் தெரியுமா? 


1. இந்த நிதியாண்டு, மார்ச் 2025 (FY25) மாதத்தில் முடிவடையும் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் "முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள்" (First Advance Estimates (FAE)) பற்றி புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அறிக்கை வெளியிட்டது.


2. MoSPI படி, இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மார்ச் மாத இறுதிக்குள் ரூ.324 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த நிதியாண்டுடன் (FY24) ஒப்பிடும்போது 9.7 சதவீத வளர்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு வருடத்தில் இந்தியாவின் எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இது இந்தியப் பொருளாதாரத்தின் அளவைக் காட்டுகிறது.


3. பொருளாதாரத்தில் செலவிடப்பட்ட அனைத்து பணத்தையும் கூட்டுவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள, நான்கு முக்கிய வகை செலவினங்களைப் பார்க்க வேண்டும். இந்த வகைகள் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் முக்கிய இயந்திரங்களாகச் செயல்படுகிறது.


4. மக்கள் தனித்தனியாகச் செலவிடுவது தனியார் இறுதி நுகர்வுச் செலவு (Private Final Consumption Expenditure (PFCE)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% ஆகும்.


5. அரசாங்கங்கள் சம்பளம் (salaries) போன்ற அன்றாட செலவுகளுக்கு பணத்தை செலவிடுகின்றன. இது அரசாங்க இறுதி நுகர்வுச் செலவு (Final Consumption Expenditure (GFCE)) என்று அழைக்கப்படுகிறது. இது பொருளாதாரத்தின் மிகச்சிறிய பகுதியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% ஆகும்.


6. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செலவிடுவது முதலீடு என்று அழைக்கப்படுகிறது. இதில் சாலைகள் போடுதல் போன்ற அரசுத் திட்டங்களும் அடங்கும். தொழிற்சாலைகளை உருவாக்குதல் அல்லது அலுவலக கணினிகளை வாங்குதல் நிறுவனங்களும் அடங்கும். இந்த வகையான செலவு மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation (GFCF)) என்று அழைக்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் இரண்டாவது பெரிய அங்கமாகும். பொதுவாக, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% ஆகும்.


7. நிகர ஏற்றுமதி (Net exports) அல்லது நிகர செலவு (net spending) என்பது இந்திய இறக்குமதி செலவினத்திற்கும் இந்திய ஏற்றுமதிக்கான வெளிநாட்டு செலவினத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது. இந்தியா பொதுவாக ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதன் விளைவாக, இது இந்தியாவின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது. இது எதிர்மறை மதிப்பாகக் காட்டுகிறது.




Original article:

Share: