இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு (IMEC) முன்னுரிமை அளிப்பது அமெரிக்காவிற்கு நன்மை அளிக்கிறது -சஞ்சீவ் ஜோஷிபுரா, கபில் சர்மா

 பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும்.


அமெரிக்காவும் இந்தியாவும் பல ஆண்டுகளாக வலுவான இராஜதந்திர கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன. இது 1990-ம் ஆண்டுகளில் கிளிண்டன் நிர்வாகம் இருநாடுகளின் உறவுக்கு ஒரு புதிய பாதையை அமைத்தபோது இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு தொடங்கியது. இன்று, இரு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகள் போன்ற பொதுவான இலக்குகள் இரு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவருகின்றன. உலகளாவிய அளவில் இயக்கவியல் (Global dynamic) மாறும்போது, ​​இந்தக் கூட்டாண்மை டிரம்ப் நிர்வாகத்தில் இன்னும் முக்கியமானதாகிவிட்டது.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) ஒப்பந்தமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது, அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டு நாடுகளுக்கும் இராஜதந்திர ரீதியில் நலன்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்த பலதரப்பு கூட்டாண்மையை அவர் வலுப்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட நாடுகளிடையே ஒத்துழைப்பைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பதன் மூலம், வலுவான பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்த வழித்தடம் சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தக வழித்தடங்களை ஆதரிக்கும். இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும். இந்த முன்னேற்றங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.


இப்போது மிகவும் கருத்தியல் சார்ந்தது


2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது (IMEC) மேம்பட்ட நேரடி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு (physical and digital infrastructure) மூலம் மூன்று முக்கிய பிராந்தியங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒரு லட்சியப் பார்வையை பிரதிபலிக்கிறது. இரயில்வே, கப்பல் பாதைகள் மற்றும் கடல்சார் இணைப்புகள் உள்ளிட்ட திறமையான போக்குவரத்து வழிகளை இந்த வழித்தடம் உருவாக்க வேண்டும். அதே நேரத்தில், எல்லை தாண்டிய மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் குழாய்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்பு கேபிள்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. IMEC-யின் முக்கிய குறிக்கோள்கள் வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதும், போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதும் ஆகும். அதே நேரத்தில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மேலும் பன்முகப்படுத்துவதும், பங்கேற்கும் நாடுகளிடையே வலுவான பொருளாதார உறவுகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். இவற்றில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை அடங்கும்.


தற்போது, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்பது உறுதியானது என்பதைவிட கருத்தியல் ரீதியானது என்று கூறுவது நியாயமானது. அதன் லட்சிய இலக்குகளை அடைவதற்கு விரிவான திட்டமிடல் மற்றும் வலுவான ஒத்துழைப்பு தேவைப்படும். இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் தலைமையானது, சர்வதேச அரங்கில் அவரது நிலைப்பாட்டை மேம்படுத்த முடியும். IMEC-ஐ ஆதரிப்பதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு (Belt and Road Initiative (BRI)) ஒரு வலுவான மாற்றீட்டை உருவாக்க முடியும். இந்த மாற்று மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக மதிப்புகள் மற்றும் சந்தைக் கொள்கைகளை பிரதிபலிக்கும் ஒரு சமநிலையான உலகளாவிய பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) ஒருபோதும் நேரடியான முயற்சியாக இருக்க விதிக்கப்படவில்லை. பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் முதலீடு, அரசியல் விருப்பம் மற்றும் பொருளாதார உத்திகளை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். மேலும், மற்ற தேசிய முன்னுரிமைகளுடன் நேரடியாக போட்டியிடும் கணிசமான உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளை இந்த வழித்தடம் கோருகிறது. மேலும், தனியார் துறை ஈடுபாடானது சிக்கலான மற்றொரு நிலையை அறிமுகப்படுத்துகிறது. இதில், பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு முதலீட்டைத் திரும்பப் பெற தெளிவான பாதைகள் தேவை மற்றும் தனியார் துறையின் தீவிர ஈடுபாடு இல்லாமல், இந்த திட்டம் வெற்றியடைவது சாத்தியமில்லை.


கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற பல நாடுகள் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (IMEC) கணிசமான முன்முயற்சியைக் காட்டியுள்ளன. ஒரு பாரம்பரிய இராஜதந்திரிக்கு (traditional diplomat) அல்லாத, ஜெரார்ட் மெஸ்ட்ரலெட் (Gérard Mestrallet) சிறப்புத் தூதராக நியமிப்பதன் மூலம் பிரான்ஸ் ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்முயற்சிக்கு தலைமை தாங்குவதற்கு பிரான்சில் இருந்து ஒரு வணிகத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனெனில், அவர் பிரான்சுக்கான அதன் பொருளாதார திறனை அங்கீகரிக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் IMEC வகிக்கக்கூடிய பங்கை பாராட்டுகின்றன. மேலும், அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. வழக்கமான, இராஜதந்திர ஈடுபாடு இல்லாமல், பங்கேற்கும் நாடுகளிடையே பதற்றம் மற்றும் அரசியல் உராய்வை உருவாக்கக்கூடிய ஒரு சீரற்ற பொருளாதார நிலப்பரப்பை உருவாக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. இந்த வழித்தடமானது கடலோரப் பகுதிகள் மற்றும் முதன்மை துறைமுகங்களுக்கு மட்டுமல்ல, இந்த விரிவான வர்த்தக வலையமைப்பில் முக்கியமான முனைகளாக மாறக்கூடிய உள்நாட்டுப் பகுதிகளுக்கும் உருமாறும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறது. இப்பிராந்தியத்திற்குள் கூட, ஈராக் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் IMEC-ஐ ஆதரிக்க ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடங்கியுள்ளன.


சீனாவின் BRI க்கு மாற்றாக


இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. இது வர்த்தக செலவுகளை வெகுவாகக் குறைக்கும் மற்றும் கடல்சார் தளவாடங்களை மேம்படுத்தும். இந்த வலையமைப்பு சூயஸ் கால்வாயில் ஏற்படக்கூடிய இடையூறுகள் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது. இது அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு வலுவான வாய்ப்புகளை உருவாக்குகிறது. BRI-க்கு மாற்றாக செயல்படுவதன் மூலம், இந்த வழித்தடம் இந்தியா மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை உருவாக்க உதவுகிறது.


சுற்றுச்சூழலுக்கு சிறந்தது


இந்த ஒப்பந்தம் பூமியின் காலநிலை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியா பசுமை ஹைட்ரஜன் வளர்ச்சியில் ஒரு முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது. தற்போது, வளர்ந்து வரும் சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பசுமை ஹைட்ரஜனை உருவாக்க நாடு லட்சிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் அதன் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.


இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் கொண்டு செல்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர். இந்த முயற்சி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். இது புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் குறைக்கும். கூடுதலாக, இது வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


ஆபிரகாம் உடன்படிக்கைகளை எளிதாக்குவதில் டிரம்ப் நிர்வாகத்தின் பங்கு, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) சாத்தியமாக்கிய இராஜதந்திர நிலைமைகளை உருவாக்க உதவியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் IMEC-ன் வலுவான ஆதரவாளராக இருந்துள்ளார். எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​புதிய அமெரிக்கத் தலைமையின் கீழ் IMEC-ன் எதிர்காலம் குறித்து இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான டிரம்பின் அன்பான தனிப்பட்ட உறவு ஒரு புதிரான காரணியாகும். இந்த நல்லுறவு தற்போதைய உறவுகளுக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை (peace agreement) ஏற்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க இரு நாட்டு தலைவர்களும் IMEC பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்க உதவ முடியும்.


இந்த முயற்சி பாரம்பரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டது. இது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வது பற்றியது. இதற்கு பல பங்குதாரர்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. வழித்தடத்தின் முக்கிய தலைவர்களாக அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மேலும், அவர்கள் இந்த திட்டத்தை நிறைவு செய்ய வழிகாட்ட வேண்டும். இதில், பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் அதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இரண்டையும் அங்கீகரிக்க வேண்டும்.


சஞ்சீவ் ஜோஷிபுரா இந்தியாஸ்போராவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கபில் சர்மா கேப்ஸ்டோன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனத்தில் முதல்வராக உள்ளார். அட்லாண்டிக் கவுன்சிலில் அவர் ஒரு ஆய்வாளராகவும் உள்ளார்.




Original article:

Share: