உச்சநீதிமன்றத்தின் கேள்விகள் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகளில் பிடிவாதத்தின் வடிவத்தை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இந்திய உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளானது, அவரது அரசியலமைப்பு கடமைகளை வேண்டுமென்றே மீறும் ஒரு வடிவத்தை வெளிப்படுத்தியுள்ளன. சில மசோதாக்களை இந்திய குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பதற்கான ஆர்.என். ரவியின் முடிவின் சட்டபூர்வமான தன்மை பற்றிய கேள்விகள் இருந்தன. முன்னதாக, இந்த மசோதாக்களுக்கு "ஒப்புதலை நிறுத்தி" (withheld assent) வைத்திருந்தார்.
இருப்பினும், மாநில சட்டமன்றம் அவற்றை இரண்டாவது முறையாக நிறைவேற்றிய பிறகு ஒப்புதல் அளிக்க அரசியலமைப்பு அவரை கட்டாயப்படுத்தியது. அரசியலமைப்பின் 200-வது பிரிவின்படி, ஒப்புதல் வழங்குவதைத் தவிர்ப்பதற்காக மட்டுமே திரு. ரவி மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னதாக, ஆளுநர் மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மசோதாவானது அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறாது என்று நம்பப்பட்டது. இருப்பினும், 2023-ம் ஆண்டில், நீதிமன்றம் இந்த விதிமுறையை முற்றிலும் மாற்றியது. அதாவது, ஆளுநர்கள் ஒப்புதலை நிறுத்தி வைக்க விரும்பினால், அவர்கள் மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், இந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது சபையானது அதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து இந்திய அட்டர்னி ஜெனரலிடம் (Attorney-General of India (A-G)) கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு, அட்டர்னி ஜெனரல் அவர்கள் ஒன்றிய சட்டத்துடன் சில முரண்பாடு இருக்கலாம் என்று அவர் கூறினார். மேலும், ஆளுநர் இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது சரியானது என்று அவர் விளக்கினார். ஏனெனில், இந்த மசோதாக்கள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிமுறைகளுக்கு முரண்படும்.
அதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படும் முறையை மாற்றுவதே இந்த மசோதாக்களின் நோக்கமாக மாறும். ஆளுநர் முன்பு ஒப்புதல் வழங்குவதைத் தடுத்து நிறுத்தியபோது, மசோதாக்கள் இனி இல்லை என்றும் இந்திய அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். மசோதாக்கள் ஆளுநரால் "திருப்பி அனுப்பப்பட்டதாக" சட்டமன்றம் கருதி அவற்றை இரண்டாவது முறையாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். கூடுதலாக, வெறுப்பு பிரச்சினை இருந்தால் மசோதாவைத் திருப்பி அனுப்ப வேண்டிய தேவை பொருந்தாது என்று இந்திய அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.
மசோதாக்களை கையாள்வதில் ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய சரியான நடவடிக்கையை தீர்மானிப்பதில் இந்த வாதங்கள் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம். மேலும், தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நீதிமன்ற அமர்வு பதில்களை வழங்கக்கூடும். இருப்பினும், ஆளுநர் தனது அதிகாரங்களை சட்டத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தி வருகிறார் என்பது தெளிவாகிறது.
அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக சில மசோதாக்களில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்புதலை நிறுத்தி வைத்தாலும், ஏற்கனவே உள்ள சட்டங்களுடனான முரண்பாடுகள் குறித்த தனது கவலைகளையும் அவர் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. மசோதாக்கள் இரண்டாவது முறையாக தன்னிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை அவர் புறக்கணித்தார்.
அதற்குப் பதிலாக, அவர் அவற்றை குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைத்தார். 2023-ம் ஆண்டு விசாரணையில், ஒப்புதல் அளிக்காமல் இருக்கத் தேர்ந்தெடுத்த ஆளுநர், அதே மசோதாவை குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆர்.என். ரவி தனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத எந்தவொரு சட்டத்தையும் தடுக்கத் தீர்மானித்ததாகத் தெரிகிறது. அவர் பதவியில் தொடர்ந்து இருப்பது தமிழ்நாட்டில் அரசியலமைப்பு நிர்வாகத்திற்கு ஏற்படுத்தும் கவலையாக ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.