இந்தியா-வங்காளதேசம் இருதரப்பு உறவுகளின் வரலாறு என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : வங்காளதேசத்தில் ஒரு இந்து சமூகத் தலைவர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் சனிக்கிழமை அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை கடுமையாகக் கண்டித்தது. இது வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை "திட்டமிடப்பட்ட துன்புறுத்தல் முறையை" (pattern of systematic persecution) பின்பற்றுவதாகக் கூறியது.


முக்கிய கூறுகள் :


1. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், டாக்காவில் உள்ள இடைக்கால அரசாங்கம் "சாக்குபோக்குகளை தேடாமல்" சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் "பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


2. வங்காளதேச ஊடக அறிக்கைகளின்படி, அந்த நபரானவர் 58 வயதான பாபேஷ் சந்திர ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர் வங்காளதேச பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பைரல் பிரிவின் (Biral unit) துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கியத் தலைவராகவும் இருந்து வந்தவர்.


3. வங்காளதேசம் முழுவதும் உள்ள சமூக உறுப்பினர்களை மத விழாக்களுக்காக பரிஷத் (Parishad) அணிதிரட்டுகிறது. டாக்காவில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள வடக்கு வங்காளதேசத்திற்கும், வடக்கு வங்காளத்திற்கும் இடையே உள்ள எல்லைக்கு அருகில் உள்ள தினாஜ்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


4. டாக்காவை தளமாகக் கொண்ட தி டெய்லி ஸ்டார் என்ற செய்தித்தாள் நிறுவனமானது, ராய் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு வியாழன் மதியம் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது என்று காவல்துறை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.


5. வெளியுறவுத்துறையின் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தக் கொலை இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இந்து சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்தும் முறையைப் பின்பற்றுகிறது. இதற்கு முன்பு, இதே போன்ற நிகழ்வுகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்." என்றார்.


6. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியா தொடர்ந்து கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பிறகு இது தொடங்கியது. மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆர்வலர்களின் போராட்டங்கள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.


7. உண்மையில், ஏப்ரல் 4 அன்று, பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸை சந்தித்தார். இந்த சந்திப்பு, ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் இது அவர்களின் முதல் சந்திப்பு ஆகும்.


8. இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது மற்றும் பாங்காக்கில் நடந்த BIMSTEC உச்சிமாநாட்டின்போது நடந்தது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து மோடி கவலை தெரிவித்தார்.


9. வங்கதேச அரசாங்கத்தின் அறிக்கையின்படி, மோடியின் கவலைக்கு யூனுஸ் பதிலளித்தார். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அவர் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை போலி செய்திகள் என்று அவர் கூறினார். மேலும், இதில் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மோடி அரசு செய்தியாளர்களை வங்காளதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் யூனுஸ் பரிந்துரைத்தார்.


உங்களுக்குத் தெரியுமா?


1. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பின் விளைவாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வு வங்காளதேசத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக கருதப்படுகிறது மற்றும் பிராந்திய அரசியலில் புதிய இயக்கவியலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒரு அண்டை நாடாக, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" (neighbourhood first) என்ற கொள்கையில் வங்காளதேசம் எப்போதும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.


2. சமீபத்தில், வங்காளதேசம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தியது. இது 2020-ல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகும் நடந்தது. தெற்காசியப் பகுதி கோவிட் 19-ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டபோது இந்தியா இந்த வசதியை வங்காளதேசத்திற்கு வழங்கியது. வங்காளதேசமும் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில், நாட்டின் ஜவுளி தயாரிப்பாளர்கள் முககவசங்கள் (masks), மருத்துவ துணி (medical fabric) மற்றும் கையுறைகள் (hand gloves) போன்ற சுகாதார உபகரணங்களுக்கான ஆணைகளை பெற்று வந்தனர். விமானம் மற்றும் கப்பல் கட்டுப்பாடுகள் காரணமாக, வங்காளதேசம் இந்தியாவிடம் உதவி கேட்டது.


3. வங்காளதேசமானது அசாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுராவுடனான எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.


Original article:
Share: