குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு ஒரு நினைவூட்டல் -துஷ்யந்த் டேவ்

 தமிழ்நாடு அரசு vs தமிழக ஆளுநர் (2025) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின் சரியான அர்த்தத்தை தெளிவாக விளக்குகிறது.


தமிழ்நாடு அரசு vs தமிழக ஆளுநர் (2025) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பின்படி சரியானது மற்றும் அதை மேல்முறையீடு செய்ய முடியாது. இருப்பினும், சிலர் இது குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கான எனது பதில் என்னவென்றால், அரசியலமைப்பு ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளது.


ஒரு பாராளுமன்ற அமைப்பு


1948 நவம்பர் 4-ஆம் தேதி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறிப்பிட்டது, பாராளுமன்ற அமைப்பு அரசாங்கத்திற்கு மேலும் பொறுப்பு அளிக்கிறது. இது நிலைத்தன்மையைவிட முக்கியம் என்று அவர் விளக்கினார்.


அவர் இரண்டு வகை அரசமைப்புகளை ஒப்பிட்டு கூறினார்:


  • அமெரிக்காவில், தலைமைத் தலைவர் அமைப்பு உள்ளது. அங்கு அதிபர் நிர்வாகத்தின் தலைவராக இருப்பார் மற்றும் அவரிடம் முழுப் பணியும் இருக்கும்.


  • இந்தியாவில், பாராளுமன்ற அமைப்பு உள்ளது. இந்திய குடியரசுத்தலைவர் என்பது இங்கிலாந்தின் மன்னர் போல் இருப்பார். அவர் நாட்டின் தலைவர் ஆனால் அரசாங்கத் தலைவர் அல்ல.


அம்பேத்கர் மேலும் கூறியதாவது:


குடியரசுத்தலைவர் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவார். ஆனால் நாட்டை ஆட்சி செய்ய மாட்டார். அவர் ஒரு சின்னமாக இருப்பார். நாட்டின் முடிவுகளை ஒரு முத்திரை மூலம் அறிவிக்கப்படுவது போல் செயல்படுவார். இருப்பினும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றவேண்டும். அவர்களுடைய ஆலோசனைக்கு எதிராக அல்லது அவர்களைத் தவிர்த்து குடியரசுத்தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது.


இந்த விதிகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  • பிரிவு 52: “இந்தியாவுக்கு ஒரு குடியரசுத்தலைவர் இருப்பார்” என்கிறது.


  • பிரிவு 153: “ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்” என்கிறது.


  • பிரிவு 74: “குடியரசுத்தலைவருக்கு உதவவும் ஆலோசனை செய்யவும் பிரதமரின் தலைமையில் அமைச்சர்கள் குழு இருக்கும்” என்கிறது.


  • பிரிவு 163: “ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை செய்யவும் முதலமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள் குழு இருக்கும்” என்கிறது.


1949ஆம் ஆண்டு, மசோதா அரசியலமைப்பில் அட்டவனை IV என்ற பகுதியை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு, இது ஒரு வழிகாட்டி (Instrument of Instructions) ஆக இருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது. ஆனால், அரசியலமைப்பு வரைவுக் குழுவால் இது நீக்கப்பட்டது. இது குறித்து சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


டி.டி. கிருஷ்ணமாச்சாரி, இதை அரசியலமைப்பில் சேர்க்காமல், வழக்குகளின் அடிப்படையில் (convention) செயல்பட வேண்டுமென்று பலர் நினைக்கின்றனர். அதற்கு பலரும் ஆதரவு அளிக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.


அதற்கு, ஆளுநர் இந்த வழிகாட்டிகளை நேர்மையாக பின்பற்றுகிறாரா என்பதை பார்ப்பதற்காக அரசியலமைப்பில் எந்த அதிகாரியும் இல்லையென்றார். இந்த அரசியலமைப்பில் ஆளுநருக்கு மிகக் குறைந்த சுய அதிகாரமே உள்ளது. அமைச்சரவையை தேர்ந்தெடுப்பதில், அவர் பிரதமரின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என  அம்பேத்கர் கூறினார்.


அரசியல் நிர்ணய சபை  K.T. ஷா முன்மொழிந்த “41 வது பிரிவை (இப்போது பிரிவு 52) ‘இந்தியாவில் தலைமை நிர்வாகி மற்றும் மாநிலத் தலைவர் இந்திய ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார்கள்’ என்று  மாற்றுவது” எனும் மாற்றத்தை நிராகரித்தது.


பேராசிரியர் ஷா கூறினார், குடியரசுத்தலைவர் மக்கள் மற்றும் நாட்டின் முழுமையான அதிகாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றார்.


ஆனால், டாக்டர் அம்பேத்கர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பேராசிரியர் ஷா பயன்படுத்திய "தலைமை நிர்வாகி மற்றும் மாநில தலைவர்" என்ற வார்த்தைகள் அமெரிக்க அதிபர் முறைசார்ந்த ஆட்சி முறையை கொண்டுவர வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றார்.


ஆனால், இந்திய அரசியல் அமைப்பில் பாராளுமன்ற முறை பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா போல் அதிபர் முறையை போன்றது அல்ல. இந்தியாவில் குடியரசுத்தலைவர் நிர்வாகத்தின் தலைவர் தான். ஆனால், அவர் அமைச்சரவை கொடுக்கும் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். குடியரசுத்தலைவருக்கு  தனிப்பட்ட முழு அதிகாரம் இல்லை.


ஷம்ஷேர் சிங் vs பஞ்சாப் மாநிலம் (Shamsher Singh vs State of Punjab) (1974) என்ற வழக்கில், அரசியல் அமர்வு நீதிமன்றம், குடியரசுத் தலைவர் இந்தியாவின் முறையான தலைவராக உள்ளார். ஆனால், அவர் தனது அதிகாரங்களையும் கடமைகளையும் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவு பின்னர் நபம் ரெபியா vs துணை சபாநாயகர் (Nabam Rebia vs Deputy Speaker) (2016) என்ற வழக்கிலும் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.


சரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்


குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர் தங்கள் அதிகாரங்களை அரசியலமைப்புக்கு ஏற்பவே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு அதிகாரத்துக்கும் அதை சரியான நோக்கில் மற்றும் நேரத்திலேயே பயன்படுத்தும் கடமை இருக்கிறது. இது செய்யப்படாவிட்டால், வழிகாட்டும் நீதிமன்றம் (Writ Court) தலையிட்டு அந்த அதிகாரம் சரியாக பயன்படுத்தப்படும் வகையில் உத்தரவு வழங்கலாம்.


 குடியரசுத்தலைவர் (பிரிவு 60) மற்றும் ஆளுநர் (பிரிவு 159), அரசியலமைப்பையும் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அரசியல் அரசியலமைப்பின்படி உறுதி ஏற்கின்றனர், இந்தியா அல்லது மாநில மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் உறுதிபட தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிராக அல்லது மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடக்க எப்படி முடியும்? குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தம்முடைய பதவிக்கு உரிய மரியாதையை காக்கிறார். ஆனால், சில ஆளுநர்கள் தங்கள் உயரிய பதவிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளனர். இதனால்தான் உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பை மதித்து, மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என நினைவூட்டியுள்ளது.


துஷ்யந்த் தவே, மூத்த வழக்கறிஞர், இந்திய உச்ச நீதிமன்றம்.


Original article:
Share: