தற்போதைய நிகழ்வு : ஒரு பெரிய திறமையாளர் குழு, அரசாங்க மானியங்கள் மற்றும் புவிசார் அரசியல் தலையீடுகள் பல நிறுவனங்களை சீனாவிலிருந்து வேறுபடுத்த கட்டாயப்படுத்தியது. இவை இந்தியாவில் உற்பத்தித் தளங்களை அமைக்க ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தித் தளங்களை அமைக்க ஒன்றிணைந்த சில முக்கியமான கூறுகள் அடங்கும்.
முக்கிய அம்சங்கள் :
1. உள்நாட்டு நுகர்வு மற்றும் சில ஏற்றுமதிகளுக்காக நாட்டில் ஸ்மார்ட்போன் அசெம்பிளியை (smartphone assembly) வெற்றிகரமாக உள்ளூர்மயமாக்க முடிந்த பிறகு, இந்தத் துறையில் உள்ளூர் மதிப்பு கூட்டலை தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
2. விளைவு : தனிப்பட்ட உதிரிப்பாகங்கள் அல்லது கூறுகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தும் மானியத் திட்டங்கள் உள்ளன. இதற்கு ஒரு உதாரணம் இந்திய குறைக்கடத்தி திட்டம் (India Semiconductor Mission), இதன் பட்ஜெட் ரூ.76,000 கோடி ஆகும். இந்த திட்டம் மூலம் சில்லு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கை (chip fabrication and packaging) ஆதரிக்கிறது. மற்றொரு உதாரணம் ரூ.23,000 கோடி மதிப்பிலான புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். இது செயலற்ற மின்னணு உதிரிபாகங்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது.
3. மின்னணு உற்பத்தியின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் அரசாங்கம் ஆதரவைத் தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அசெம்பிளிக்கான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களும் அடங்கும். இந்த முயற்சிகள் மின்னணுத் துறையை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய இயக்கியாக ஆக்குகின்றன.
4. முக்கிய இலக்கு : இந்தத் துறையில் உள்ளூர் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதே இதன் முக்கிய இலக்கு ஆகும். இது சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதிகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும். இது உயர்தர வேலைகளையும் உருவாக்கும். தற்போது, உள்நாட்டு மதிப்பு கூட்டல் சுமார் 15-20 சதவீதம் ஆகும். வரும் ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. மேலும் இதை ஒப்பிடுகையில், இந்தத் துறையில் சீனாவின் மதிப்பு கூட்டல் சுமார் 38 சதவீதமாக உள்ளது. தற்போது, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. 2024-25ஆம் ஆண்டில், இது 100 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது என்ற கணிப்பு உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
1. இந்த மாத தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு உதிரிபாகங்களுக்கு ரூ.22,919 கோடி ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது. இது முந்தைய இரண்டு பிஎல்ஐ திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த முந்தைய திட்டங்கள் திறன்பேசிகள் (smart phones) மற்றும் கணினிகள் போன்ற மின்னணு பொருட்களை எளிதாக இணைப்பதில் கவனம் செலுத்தின.
2. ஆறு ஆண்டுகள் இயங்கும் இந்த புதிய திட்டம், உதிர்பாகங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றில் காட்சி தொகுதிகள் (display modules), கேமரா தொகுதிகள் (camera modules), அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளிகள் (printed circuit board assemblies), லித்தியம் செல் உறைகள் (lithium cell enclosures), மின்தடையங்கள் (resistors), மின்தேக்கிகள் (capacitors) மற்றும் இரும்பியங்கள் (ferrites) ஆகியவை அடங்கும். இந்த உதிர்பாகங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற கருவிகளிலும், மைக்ரோவேவ் ஓவன்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் டோஸ்டர்கள் போன்ற சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அசெம்பிளி வளர்ந்ததால், உள் கூறுகளை (internal components) வாங்குவதற்கு சீனாவை நம்பியிருப்பதும் அதிகரித்தது. இதனால், அரசாங்கம் இப்போது அந்த சார்புநிலையைக் குறைக்க விரும்புகிறது.
3. இந்தத் திட்டம் குறைந்தது 91,600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்புகிறது. மேலும் பங்கேற்கும் நிறுவனங்களின் வருடாந்திர மானியங்களை அவை உருவாக்கும் வேலைகளின் எண்ணிக்கையுடன் இணைத்துள்ளது. இந்தத் திட்டம் உற்பத்தியில் ரூ.4.56 லட்சம் கோடியை உருவாக்கும் என்றும் ரூ.59,350 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஸ்மார்ட்போன் பிஎல்ஐ திட்டம் பல்வேறு துறைகளுக்கு 2020-ல் தொடங்கப்பட்ட 14 திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாகும். மெதுவாகத் தொடங்கிய IT வன்பொருள் PLI, 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து ரூ.17,000 கோடி அதிகரித்த ஒதுக்கீட்டால் ஊக்கத்தைப் பெற்றது. இந்தத் திட்டங்களின் கீழ், அதிகரிக்கும் விற்பனையின் அடிப்படையில் அரசாங்கம் ஒரு ஊக்கத்தை வழங்குகிறது.