உலகம், மந்தநிலையின் இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில், உலகளாவிய தேவையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள், இந்திய ஏற்றுமதி மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்களை உருவாக்கும். மறுபுறம், இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கூறுகளின் விலையைக் குறைக்கக்கூடும். இது இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தங்களைக் குறைக்க உதவும்.
அமெரிக்கா இப்போது ஒரு உலகளாவிய வரிவிதிப்புப் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாடுகள் சார்ந்த வரிவிதிப்புகளில் 90 நாள் தடை இருந்தபோதிலும், அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத வரியும் இன்னும் நடைமுறையில் உள்ளது. கூடுதலாக, ஆட்டோக்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீதான 25 சதவீத வரிகள் உள்ளன. சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் வரிகளுக்கு பதிலளித்து வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் முழுமையான தடையை ஏற்படுத்துகிறது.
தடைக்காலம் அறிவிக்கப்பட்ட (moratorium announcement) பிறகும், உலகளவில் நிதிச் சந்தைகள் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. அதிக விலை கொண்ட விநியோகச் சங்கிலிகள், குறைந்த லாப வரம்புகள் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைச் சமாளிக்க உற்பத்தியாளர்கள் போராடி வருகின்றனர்.
அமெரிக்கப் பத்திரச் சந்தைகளில் நீண்ட கால மகசூல் அதிகரித்து வருவதால் இதன் மீதான அழுத்தத்தின் அறிகுறிகளையும் காண்கிறோம். இது ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்கள் அதிக அபாயங்கள் காரணமாக பங்குகளிலிருந்து பத்திரங்களுக்கு தங்கள் பணத்தை மாற்றும்போது நீண்டகால பத்திர மகசூல் பொதுவாக குறைகிறது. பத்திரங்களுக்கான தேவை அதிகரிப்பதன் விளைவாக அவற்றின் விலை அதிகரிக்கிறது. இது, அவற்றின் மகசூலைக் குறைக்கிறது. அமெரிக்காவில் மகசூல் மற்றும் பங்கு வருமானத்தில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் அமெரிக்க நிதிச் சொத்துக்களை கலைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பத்திரச் சந்தையின் அழுத்தம் பெரும்பாலும் நிதி நெருக்கடிக்கு முன்னோடியாக உள்ளது. பத்திர சந்தை சுழற்சிதான் (bond market gyrations) டிரம்பை சுங்கவரிகளை நிறுத்திவைக்கச் செய்தது என்று தோன்றுகிறது.
உலகளாவிய பொருளாதார நிலைமை கொள்கை வகுப்பாளர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. சீனா மற்றும் கனடாவிலிருந்தும், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களைச் செய்ய முயற்சிக்கும் நாடுகளிடமிருந்தும் வரிவிதிப்புக்கான பதிலடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒப்பந்தங்களைச் செய்வதற்கு அமெரிக்கா என்ன விரும்புகிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். வரிவிதிப்புகளைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் விதம், அமெரிக்கா சமச்சீர் வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும். இதனால்தான் டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான வரிகளை நீக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முன்மொழிவை நிராகரித்தார். வரிகளை நீக்குவது உண்மையான பரஸ்பரம் என்றாலும், அமெரிக்கா அதை நிராகரித்தது. இதற்கான காரணம், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) சமநிலையான வர்த்தகத்தை விரும்புகிறது. மேலும், பூஜ்ஜிய வரிகள் அதை உறுதி செய்யாது.
சமச்சீர் வர்த்தகம் (Balanced trade) என்பது கொள்கைக்கான வழக்கத்திற்கு மாறான இலக்காகும். ஏனெனில், வர்த்தக பற்றாக்குறைகள் தேசிய சேமிப்புக்கும் உள்நாட்டு முதலீட்டிற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளையும் காட்டுகின்றன. உதாரணமாக, ஒரு நாடு நல்ல முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டால், அது மற்ற நாடுகளிலிருந்து கடன் வாங்கலாம் அல்லது புதிய திட்டங்களில் பங்குகளை வெளிநாட்டினருக்கு விற்கலாம். இது சேமிப்பு பற்றாக்குறையை நிதியளிப்பதற்காக உதவுகிறது. ஆனால், அது வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதேபோல், ஆதரவான பணவியல் கொள்கைகள் காரணமாக வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு குறைவாக இருக்கும்போது அல்லது நிதி விரிவாக்கத்தால் பெரிய பொது பட்ஜெட் பற்றாக்குறைகள் இருக்கும்போது, தேசிய சேமிப்பு விகிதங்களைக் குறைக்கலாம். இந்தக் காரணிகள் வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளுக்கும் காரணமாகின்றன. இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகள் சமநிலையான வர்த்தகத்தை நோக்கமாகக் கொள்வதில்லை.
பொதுவாக, நாம் வெளிநாட்டினரிடமிருந்து பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்யும்போது அவர்களுக்கு நாம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அவை, நமது பொருட்கள் மற்றும் சேவைகளில் சிலவற்றை நமது வெளிநாட்டுப் பங்குதாரருக்கு விற்கலாம் அல்லது நமது சொத்துக்களில் சிலவற்றை அவர்களுக்கு விற்கலாம். ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் வர்த்தகப் பற்றாக்குறையை இயக்கும் போது, அதன் சொத்துக்களில் சிலவற்றை அதன் வர்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு விற்பதன் மூலம் அதிகப்படியான வாங்குதல்களுக்கு பணம் செலுத்துகிறது. இது சொந்த குடும்பங்கள் அல்லது வணிகங்களை நடத்தும் விதத்திலிருந்து வேறுபட்டதல்ல. ஒரு நிறுவனம் ஒரு புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்து, போதுமான வருமானம் இல்லை என்றால், அது இடைவெளியைக் குறைக்க சந்தைகள் அல்லது வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறது. இது நிறுவனத்தின் வர்த்தகப் பற்றாக்குறையின் பிரதிபலிப்பாகும். இதேபோல், ஒரு குடும்ப திருமணத்திற்கு நிதியளிக்க ஒரு குடும்பம் கடன் வாங்கும்போது, அது வீட்டு வர்த்தக பற்றாக்குறையாகும். இதன் மூலம், வரிகளை விதிப்பதன் மூலம், அமெரிக்க சொத்துக்களை வர்த்தக பற்றாக்குறைக்கான வழங்கலாக ஏற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டவர்களிடம் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான அமெரிக்க வரிவிதிப்புகளால் உருவாக்கப்பட்ட உலகளாவிய நிலைமைகள் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது. உலகம் மந்தநிலையின் இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில், உலகளாவிய தேவையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் இந்திய ஏற்றுமதி மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்களை உருவாக்கப் போகிறது. மேலும், அதன் அமெரிக்கச் சந்தையின் இழப்பை ஈடுகட்ட மற்ற விற்பனை நிலையங்களைக் கண்டறியும் முயற்சியில் சீனாவில் இருந்துவரும் அதி-மலிவான பொருட்களுடன் போட்டியிட வேண்டிய சிக்கல் உள்ளது.
இதற்கு மாறாக, இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கூறுகளின் விலையைக் குறைக்கலாம். இது இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் குறைக்க உதவும். இதன் விளைவாக, வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகளை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ள அதிக இடம் கிடைக்கும். ஆப்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து நகர்த்துவதால் இந்தியாவும் பயனடையக்கூடும். இந்தியாவில் பாதி திறமையான தொழிலாளர்களின் (semi-skilled labor) பெரிய விநியோகத்துடன், இந்த வணிகத்தில் சிலவற்றை ஈர்க்க இந்தியா நல்ல நிலையில் உள்ளது.
அமெரிக்காவுடன் விரைவாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இருப்பினும், வரிவிதிப்புகளைக் குறைப்பது மட்டும் போதாது. அமெரிக்கா ஒரு சமநிலையான வர்த்தக உறவை விரும்புகிறது. இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்கும். ஆனால், இந்தியா அமெரிக்காவிற்கான அதன் சேவைத் துறை ஏற்றுமதிகளைப் பாதுகாக்க வேண்டும். தற்போது, அமெரிக்கா சேவைகளுக்கு வரிகளை விதிக்கவில்லை, ஆனால் இது மாறக்கூடும். அமெரிக்காவிலிருந்து அதிக பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கலாம். அதே நேரத்தில், அதன் சேவைத் துறை ஏற்றுமதிகளையும் பாதுகாக்கலாம். இது ஒரு அவசியமான சமரசமாக இருக்கலாம்.
அமெரிக்கா தனது விவசாயப் பொருட்களுக்கான இந்திய சந்தைகளை எளிதாக அணுக விரும்புகிறது. விவசாய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். இந்த மாற்றங்களை முன்னெடுப்பதற்கான ஒரு வழியாக இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், இந்தியா மற்ற குழுக்களுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இவற்றில் EU, ASEAN, CPTPP, MERCOSUR மற்றும் இருதரப்பு அல்லது பலதரப்பு ஒப்பந்தங்களும் அடங்கும்.
இந்தியா தனது சராசரியாக வரிவிதிப்பு விகிதங்களைக் குறைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது அதை சரிசெய்ய சரியான நேரம் இதுவாகும். உள்நாட்டு உற்பத்தியாளர்களை வெளிநாட்டு போட்டியை எதிர்கொள்ளத் தள்ளுவது அவர்களை சர்வதேச அளவில் அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக மாற்றும்.
உலகளாவிய வர்த்தக முறை விரைவாக மாறி வருகிறது. மேலும், இந்தியா வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் பெரும்பாலும் சீர்திருத்தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இப்போது தைரியமான கொள்கை அபாயங்களை எடுத்துக்கொள்வது பொருளாதாரத்திற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.
எழுதியவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ராயல் வங்கியின் பொருளாதாரப் பேராசிரியர்.