உள்நாட்டு பணவீக்கம் 2024 இறுதி வரை அதிகமாகவே இருந்தது. இருப்பினும், இப்போது அது குறைந்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) தரவு, சில்லறை பணவீக்கம் 27 அடிப்படை புள்ளிகள் குறைந்து 3.34% ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உணவுக் கூறு (food component) ஆகும். இது 2024 அக்டோபரில் 10.87% ஆக இருந்த உச்சத்திலிருந்து 40 மாதங்களில் மிகக் குறைந்த அளவாக 2.69% ஆகக் குறைந்தது. மார்ச் மாதக் குறைந்த தரவுகளுடன், CPI பணவீக்கம் FY25 இல் சராசரியாக 4.6% ஆக உள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் 4.8% என்ற கணிப்பை விடக் குறைவு.
கடந்த ஆண்டு கணிக்க முடியாததாக இருந்த காய்கறி விலைகள் பிப்ரவரி முதல் குறைந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் 7 சதவீதம் குறைந்துள்ளன. 2025 நிதியாண்டில் நல்ல பருவமழை பெய்ததாலும், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டதாலும் தோட்டக்கலை உற்பத்தியில் ஏற்பட்ட மீட்சியே இதற்குக் காரணம் ஆகும். முட்டைகளின் விலைகள் 3.1 சதவீதம் குறைந்தன, பருப்பு வகைகள் 2.7 சதவீதம் குறைந்தன. பால் பொருட்கள் மற்றும் இறைச்சியின் பணவீக்கம் 1 முதல் 3 சதவீதம் வரை குறைவாக இருந்தது. இது கடந்த ஆண்டு அதிக உணவு விலைகளுடன் போராடிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்திருக்க வாய்ப்புள்ளது. இது அத்தியாவசிய நுகர்வுக்கு சாதகமாக இருக்கலாம். இருப்பினும், மார்ச் 2025-ல் சமையல் எண்ணெய்கள் 17 சதவீதம் அதிகரித்தன. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தாவர எண்ணெய்கள் மீதான 20 சதவீத சுங்க வரியை நீக்குவதன் மூலம் அரசாங்கம் இதை நிவர்த்தி செய்ய முடியும்.
ஜனவரி முதல், உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இருப்பினும், உணவு அல்லாத விலைகள் மெதுவாக உயர்ந்து வருகின்றன. இந்த அதிகரிப்பு ஒட்டுமொத்த CPI-ஐ உயர்த்த போதுமானதாக இல்லை. வீட்டுவசதி (3.03%), ஆடை (2.62%), சுகாதாரம் (4.26%) மற்றும் போக்குவரத்தில் பணவீக்கம் சிறிய அதிகரிப்பைக் கண்டது. ஆனால், எரிபொருள் பணவீக்கம் பிப்ரவரி 2025-ல் -1.33% ஆக இருந்து 1.5% ஆக உயர்ந்தது. குறைந்த பணவீக்கக் கணிப்பைக் குறிக்கும் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, காய்கறி விலைகள் வழக்கமாக கோடையில் உயரும். ஆனால், அதிக அடிப்படை விளைவு இந்த ஆண்டு நுகர்வோர் விலைக் குறியீட்டில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கும். இந்திய வானிலை ஆய்வுத்துறை (India Meteorological Department (IMD)) தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வழக்கத்தைவிட அதிகமான பருவமழை பெய்யும் என்று கணித்துள்ளது. இது விநியோகத்தை மேம்படுத்தி விலைகளை நிலையாக வைத்திருக்க உதவும்.
இரண்டாவதாக, எரிசக்தி விலைகள் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முக்கியப் பகுதியாகும் மற்றும் பிற பொருட்கள் மற்றும் சேவைகளைப் பாதிக்கும். பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent crude) விலை பீப்பாய்க்கு $65-க்கும் கீழே குறைந்துள்ளது. மேலும், இது குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து அரசாங்கம் பணத்தை மிச்சப்படுத்தியிருந்தாலும், அது இறுதியில் சில சேமிப்புகளை நுகர்வோருக்கு வழங்கக்கூடும்.
மூன்று, பணவீக்கத்தின் மீதான டிரம்பின் வரிவிதிப்புகளின் தாக்கத்தை இப்போது அளவிடுவது கடினம். இருப்பினும், வர்த்தகத்தில் ஏற்படும் பற்றாக்குறை உலகளாவிய மந்தநிலைக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இது பொருட்களின் விலைகளைப் பாதிக்கும். சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா அதிக தடைகளை வைத்திருந்தால், சீனா இந்தியா போன்ற பிற சந்தைகளுக்கு அதிக பொருட்களை அனுப்பக்கூடும். ஒட்டுமொத்தமாக, பணவீக்கத்திற்கான அபாயங்கள் முக்கியமாக எதிர்மறையாகத் தெரிகிறது. பணவீக்கக் கட்டுப்பாட்டை விட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கான அதன் சமீபத்திய முடிவுக்கு பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) குறைபட்டுக் கொள்வதற்கு எந்த காரணமும் இருக்காது.