கரிம எல்லை சரிசெய்தல் வழிமுறையில் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிசெய்ய சிறந்த விதிமுறைகளை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்கா வரிவிதிப்புகளை அச்சுறுத்துவதன் மூலம், இது உலக சந்தைகளில் அச்சத்தை உருவாக்குகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதன் கரிம எல்லை சரிசெய்தல் வழிமுறையின் (CBAM) கீழ் இணக்க விதிகளை தளர்த்த முன்மொழிந்துள்ளது. இந்த வழிமுறை அடுத்த ஜனவரியில் தொடங்க உள்ளது. தளர்த்தப்பட்ட விதிகள் எஃகு, சிமென்ட் மற்றும் அலுமினியத்தின் சிறிய EU இறக்குமதியாளர்களுக்கு உதவும். பாதிக்கப்பட்ட பிற துறைகளில் உரம், மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை அடங்கும். இந்த தளர்வான விதிகளின் பலன் விநியோகர்களுக்கும் பொருந்தும்.
பசுமை இணக்கத்தை எளிதாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள், இந்த தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் விலைகள் நிலையற்றதாக மாறும் நேரத்தில் இது நிகழ்கிறது. தற்போது, EU திட்டங்கள் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும், திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் இதை மாற்றக்கூடும். திட்டங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மேலும் அவை EU நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு திருத்தப்படலாம். ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்ற வர்த்தகக் கூட்டணி நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புவது போல் தெரிகிறது. அதேநேரத்தில் அதன் தொழில்களை மோசமான நிலைக்குத் தயார்படுத்தவும் விரும்புகிறது.
புதிய விதிகளின் கீழ், வருடத்திற்கு 50 டன்களுக்கும் குறைவான கரிம எல்லை சரிசெய்தல் வழிமுறை (CBAM) பொருட்களை அனுப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு CBAM-லிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது முந்தைய விதியிலிருந்து வேறுபட்டு, மிகச் சிறிய விலக்கு அளித்துள்ளது. இதற்கான புதிய வரம்பு மிகக் குறைவாக இருப்பதால், பெரும்பாலான இந்திய ஏற்றுமதிகள் பயனடையாது. 80% இறக்குமதியாளர்கள், முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (small and medium-sized businesses (SME)), CBAM பொருட்களில் 1%-க்கும் குறைவான உமிழ்வுகளுக்கு பங்களிக்கின்றனர் என்பதை இந்த திட்டம் விளக்குகிறது. இந்த SMEகளுக்கு விலக்கு அளிக்கப்படும். ஆனால் EU சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவுவதே இலக்காக இருந்தாலும், 50-டன் வரம்பு இன்னும் மிகக் குறைவாகவே தெரிகிறது.
ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையம் அனைத்து நிறுவனங்களுக்கும் நிர்வாகச் சுமைகளை குறைந்தது 25% ஆகவும், SMEகளுக்கு குறைந்தது 35% ஆகவும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் இந்தத் திட்டம் குறிப்பிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, அதன் தொழில்கள் அழுத்தத்தில் இருக்கும் மற்றும் ஒரு டன் கார்பனுக்கு சுமார் $90 வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், இது எதிர்கால கொள்கை மாற்றங்களுக்கான குறிப்பாக இருக்கலாம்.
இந்த விஷயத்தில் இன்னொரு மாற்றம் உள்ளது. இதுவரை, 2023 மற்றும் 2025-க்கு இடையில், இறக்குமதியாளர்கள் ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து விரிவான ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது. இது பொருளில் உள்ள உமிழ்வுகளின் அளவைக் காட்டுவதாக இருந்தது. இதன் அடிப்படையில், அவர்கள் தங்கள் வரியைச் செலுத்துவார்கள். இறக்குமதியாளர் இந்த ஆவணத்தை வழங்க முடியாவிட்டால் மட்டுமே இயல்புநிலை உமிழ்வு நிலை (default emission level) பயன்படுத்தப்பட்டது.
இப்போது, இதற்கான விஷயங்களை எளிதாக்க, ஐரோப்பிய ஆணையம் இயல்புநிலை உமிழ்வு அளவை நிர்ணயித்துள்ளது. இறக்குமதியாளர்கள் தொடக்கத்திலிருந்தே இந்த அளவைப் பயன்படுத்தலாம். நிலை அதிகமாக இருந்தாலும், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இருவருக்கும் இது ஒரு பெரிய மாற்றமாகும். இருப்பினும், இந்த உமிழ்வு நிலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து கூடுதல் விவரங்கள் தேவை.
கரிம எல்லை சரிசெய்தல் வழிமுறையில் (CBAM) அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த விதிமுறைகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், EU உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தைகளில் திரும்பப்பெற வேண்டும். அதே நேரத்தில், பசுமை தொழில்நுட்பத்தை அதன் 'மட்டுப்படுத்த கடினமாக உள்ள' துறைகளில் பாதுகாக்க வேண்டும். அதன் எஃகு ஏற்றுமதி மிகக் குறைவாக இருப்பதால், ஒட்டுமொத்தமாக இந்தியா பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் 'சொந்த உச்ச வரம்பு மற்றும் வர்த்தகச் சந்தையின்' (own cap-and-trade market) வளர்ச்சியானது கீழ்நிலை தயாரிப்புகளில் அதிக செல்வாக்கைக் கொடுக்கும். ஏனெனில், இது எதிர்காலத்தில் CBAM போன்ற சிக்கல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.