ஆபரேஷன் ஜாக்பாட் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை -குஷ்பூ குமாரி

 ஆபரேஷன் சிந்தூர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த நிலையில், கடந்த காலங்களில் இந்தியா மேற்கொண்ட சில முக்கிய இராணுவ நடவடிக்கைகள் இங்கே.


தற்போதைய செய்தி:


புதன்கிழமை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இடங்கள் மீது தாக்குதல் நடத்தின. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை புதன்கிழமை, "சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் “ஆபரேஷன் சிந்தூரை” தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்பைத் தாக்கின. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன என்று இந்தியா கூறியது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியாவின் தாக்குதல்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.


கடந்த காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியா வழக்கமான இராணுவப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த பெயர்கள் நடவடிக்கையின் ரகசியத்தைக் காப்பதற்கும், நம்பிக்கையை  ஊக்குவிக்கவும், வெளிப்புறமாக செய்தியை அனுப்புவதற்கும் ராஜதந்திர ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.


இந்தியாவின் சில முக்கியமான கடந்தகால இராணுவ நடவடிக்கைகள் இங்கே.


முக்கிய அம்சங்கள்:


1. ஆபரேஷன் சிந்தூர் : புதன்கிழமை அதிகாலையில் இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இடங்களைத் தாக்கியது. இந்தியாவின் பதிலடித் தாக்குதல், பஹல்காமில் ஆண்கள் மட்டுமே தங்கள் மதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் 2016-ல் உரி தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா நடத்திய மிகவும் விரிவான மற்றும் பரவலான பதிலடி இதுவாகும். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உட்கட்டமைப்பாக இருந்த 9 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


                    ஆபரேஷன் அபியாஸ் (Operation Abhyaas)

அவசரநிலைகளுக்கு மக்கள் தயாராக உதவும் வகையில், உள்துறை அமைச்சகம் மே 7 அன்று நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் “ஆபரேஷன் அபியாஸ்” என்ற பயிற்சிகளை நடத்தியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.


2. ஆபரேஷன் பந்தர் : பிப்ரவரி 2019-ல், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதக் குழு புல்வாமாவில், ஒன்றிய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF)) வீரர்களின் வாகனத் தாக்கி 40 வீரர்களைக் கொன்றது. இதற்குப் பதிலடியாக, இந்தியா “ஆபரேஷன் பந்தர்” என்ற பெயரில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாமின்மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மேலும் பல பயங்கரவாதிகளைக் கொன்றதாகக் கூறியது.


3. ஆபரேஷன் விஜய் : கார்கில் போரின் போது பாகிஸ்தான் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மே 1999-ல் தொடங்கப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர் “ஆபரேஷன் விஜய்” ஆகும். இந்த நடவடிக்கை பாகிஸ்தான் துருப்புக்களை (troops) பின்வாங்கி முக்கியமான நிலைகளை மீண்டும் கைப்பற்ற உதவியது. இது இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.


4. ஆபரேஷன் சஃபேத் சாகர் : 1999 கார்கில் போரில் இந்திய விமானப்படையின் பங்கிற்கான குறியீட்டுப் பெயர் இதுவாகும். கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள கார்கில் பகுதியில் உள்ள இந்திய நிலைகளில் இருந்து பாகிஸ்தான் துருப்புக்களை விரட்டியடிக்க தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் இதில் அடங்கும். 1971-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தப் பகுதியில் விமானப் படை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


5. ஆபரேஷன் கேக்டஸ் : மாலத்தீவில் 1988-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் இந்தியாவின் தலையீடு “ஆபரேஷன் கேக்டஸ்” என்று குறியிடப்பட்டது. இந்தியாவின் இராணுவத் தலையீட்டால், மாலத்தீவுகள் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிக்க முடிந்தது. 1988-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மாலத்தீவு தொழிலதிபர் அப்துல்லா லுதுஃபி மற்றும் அகமது "சாகரு" நாசிர் ஆகியோரின் சிந்தனையில் உருவானது. இது ஒரு இலங்கை தமிழ் போராளி அமைப்பான தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் (People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE)) தலைவர் உமா மகேஸ்வரனால் ஆதரிக்கப்பட்டது.


6. ஆபரேஷன் பவன் மற்றும் ஆபரேஷன் பூமாலை : இது 1987 முதல் 1990 வரை இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் (Indian Peace Keeping Force (IPKF) (IPKF)) பணிக்கு வழங்கப்பட்ட குறியீட்டுப் பெயராகும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பலமிழக்க செய்து, இலங்கையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு இலங்கைப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டபோது, ​​யாழ்ப்பாணத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு விமானம் மூலம் பொருட்களை வழங்குவதற்காக இந்தியாவின் "பரிப்பு துளி" (parippu drop) அல்லது ஆபரேஷன் பூமாலை இந்திய விமானப்படையின் திட்டத்தால் தொடங்கப்பட்டது.


7. ஆபரேஷன் மேக்தூத் : சியாச்சினில் ராஜதந்திர உயரங்களைப் பாதுகாக்க இந்திய இராணுவம் ஏப்ரல் 1984-ல் ஆபரேஷன் மேக்தூத்தை துருப்புக்களை அனுப்புவதன் மூலம் தொடங்கியது. இந்திய விமானப்படை கிடங்குகள் மற்றும் துருப்புக்களை கொண்டு சென்றது மற்றும் பொருட்களை விமானம் மூலம் உயரமான விமானநிலையங்களுக்கு கொண்டு சென்றது. அங்கிருந்து Mi-17, Mi-8, சேடக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்கள் மனிதர்களையும் பொருட்களையும் பனிப்பாறையின் உயரங்களுக்கு கொண்டு சென்றன. இதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா குறிப்பிடத்தக்க நன்மையைப் பெற்றது.


8. ஆபரேஷன் ஜாக்பாட் மற்றும் ஆபரேஷன் கேக்டஸ் லில்லி : 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது ஆபரேஷன் ஜாக்பாட் என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்டது. இது கிழக்கு பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் படைகளை எதிர்த்துப் போராடி, இறுதியில் நிலத்தை விடுவிப்பதற்காக, பாகிஸ்தான் இராணுவம், கிழக்கு பாகிஸ்தான் துப்பாக்கிகள், காவல்துறை மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்களைச் சேர்ந்த வங்காளப் போராளிகளுக்கு செயல்பாட்டு மற்றும் தளவாட ஆதரவு, பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் பணிகளை வழங்க இது அழைப்பு விடுத்தது.


மேக்னா ஹெலி பாலம் அல்லது மேக்னாவின் குறுக்குவழி என்றும் அழைக்கப்படும் ஆபரேஷன் கேக்டஸ் லில்லி, வங்காளதேச விடுதலைப் போரின் போது டிசம்பர் 1971-ல் மேக்னா நதியைக் கடந்து டாக்காவை அடைய இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் நடவடிக்கையாகும்.


9. ஆபரேஷன் அப்லேஸ் மற்றும் ஆபரேஷன் ரிடில் : இரண்டு இராணுவ நடவடிக்கைகளும் 1965 இந்தோ-பாகிஸ்தான் போரின் பின்னணியில் இந்தியாவால் தொடங்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, ஏப்ரல் 1965-ல் இந்திய இராணுவத்தால் ஒரு முன்னெச்சரிக்கை அணிதிரட்டல் திட்டமாக ஆபரேஷன் அப்லேஸ் தொடங்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு ஆபரேஷன் ஜிப்ரால்டர் மற்றும் கிராண்ட் ஸ்லாம் என்ற குறியீட்டுப் பெயர்களில் பாகிஸ்தான் தொடங்கிய தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தின் பதிலடியாக ஆபரேஷன் ரிடில் இருந்தது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control (LOC)) மீறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செப்டம்பர் 6, 1965 அன்று லாகூர் மற்றும் கசூரை குறிவைத்து ஆபரேஷன் ரிடில் நடத்தப்பட்டது.


இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள்


இந்தியா பல மனிதாபிமான நிவாரண மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அங்கு ஏராளமான மக்களுக்கு அவர்களின் நாட்டில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன அல்லது இந்தியர்கள் இந்திய எல்லைகளின் பாதுகாப்பிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளனர். சமீபத்திய காலங்களில் இந்தியாவின் சில மீட்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் இங்கே.


மியான்மர் பூகம்பம் : கடந்த காலத்தில், 2015-ஆம் ஆண்டு நேபாள பூகம்பத்தின்போது ஆபரேஷன் மைத்ரியின் கீழ் தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) வீரர்களையும், 2023-ஆம் ஆண்டு துர்கியே நிலநடுக்கத்தின் போது ஆபரேஷன் தோஸ்த்தின் கீழ் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் இந்தியா வெளிநாடுகளுக்கு அனுப்பியது.


1. ஆபரேஷன் பிரம்மா : இந்த நடவடிக்கை மார்ச் 2025-ல் மியான்மர் மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நடவடிக்கையின் கீழ், தேடல் மற்றும் மீட்பு (Search and Rescue (SAR)) மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கியது.


2. ஆபரேஷன் சத்பவ் : யாகி புயல் பேரழிவைத் தொடர்ந்து வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மருக்கு உதவி மற்றும் அவசரப் பொருட்களை வழங்குவதற்காக, செப்டம்பர் 2024-ல் இந்தியாவால் இது தொடங்கப்பட்டது. சத்பவ்வின் நடவடிக்கையின்  ஒரு பகுதியாக, உலர் உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் மருந்துகள் உட்பட 10 டன் உதவிகளை இந்தியா இந்திய கடற்படைக் கப்பலான சத்புராவில் மியான்மருக்கு அனுப்பியது.


3. ஆபரேஷன் அஜய் : 2023 அக்டோபரில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து, சண்டையில் சிக்கிய தங்கள் மக்களை வீட்டிற்கு அழைத்து வர அல்லது போர் மண்டலத்திலிருந்து வெளியேற வழி தேடும் நாடுகள் போராடியதால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து தனது குடிமக்களை திருப்பி அனுப்ப இந்தியா ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியது.

Original article:
Share: