பஞ்சாயத்து மட்டத்தில் உள்ளூர் நிலையை புரிந்து கொள்ளுதல் -சுனில் குமார்

 பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) வலைத்தளம் துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கும் பயனுள்ள கருவியாக மாறலாம்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவை ஆராய்ச்சியாளர்களுக்கு வெளியிடுவதிலும் ஏற்படும் தாமதத்தை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகள் அல்லது முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. இதன் மூலம் காலத் தொடர் தரவு கிடைப்பதை கடினமாக்குகின்றன. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுப்பதில் கடக்க வேண்டிய தடைகளாக அவை உள்ளன. இருப்பினும், அரசாங்க அதிகாரிகள் பல்வேறு அமைச்சகங்களின் இணையதளங்களில் மிகப்பெரிய தரவு கிடைப்பதையும், இந்திய அரசின் 2012-ஆம் ஆண்டு தேசிய தரவு பகிர்வு மற்றும் அணுகல் கொள்கையையும் (National Data Sharing and Accessibility Policy (NDSAP)) சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கொள்கை, உணர்திறன் இல்லாத அரசாங்கத் தரவை திறந்த, அணுகக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.


இருப்பினும், கிடைக்கும் தரவுகள் பொதுமக்களாலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலோ எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் புகார் கூறுகின்றனர். குடிமக்களும், பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள் கூட மிகப்பெரிய தரவுகளால் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். https://data.gov.in மற்றும் பிற அரசு வலைத்தளங்களில் உள்ள தரவு காட்சிப்படுத்தல் கருவிகள் (Data visualisation tools) ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. தரவு பகுப்பாய்வு அதிகம் விரும்பத்தக்கதாக இல்லை. இதன் விளைவாக, ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அனுபவம் அல்லது உள்ளுணர்வின் அடிப்படையில் தொடர்ந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.


தரவு உருவாக்கம் மற்றும் பயன்பாடு


அடிமட்ட அளவில் — கிராம பஞ்சாயத்துகள், வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்கள் போன்ற அடிமட்ட மட்டத்தில், மாநில மற்றும் தேசிய தலைமையகங்களில் உள்ள மூத்த அதிகாரிகளால் பயன்படுத்துவதற்காக மட்டுமே தரவு உருவாக்கப்பட்டு அமைப்பில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, வலைத்தளங்கள் துறைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம், வட்டாரம் அல்லது கிராம பஞ்சாயத்து அளவில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்வதில்லை. எனவே, நாம் எப்போதும் 'பரந்த காட்சியை' மட்டுமே பெறுகிறோம்.  “நுண்காட்சியை” அல்ல. கிராம பஞ்சாயத்து அளவில் உள்ள தரவுகள் ஒரு குடும்பம் மற்றும் வீட்டுடன் இணைக்கப்படுகிறது. எனவே, குடியிருப்பாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கப்பட்டால் அதை புறக்கணிப்பது கடினமாகிவிடும்.


பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) பற்றி


பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (PAI) அடிப்படை அறிக்கை 2022-23 (ஏப்ரல் 2025-ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது) தயாரிப்பில் செய்யப்பட்ட பணியின் அளவை இந்த சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு என்பது ஒரு கூட்டு குறியீடாகும். இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய குறியீட்டு கட்டமைப்பு (National Indicator Framework (NIF)) உடன் இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் (Localization of Sustainable Development Goals (LSDGs)) ஒன்பது கருப்பொருள்களில் 435 தனித்துவமான உள்ளூர் குறிகாட்டிகள் (331 கட்டாயம் மற்றும் 104 விருப்பத்தேர்வு) மற்றும் 566 தனித்துவமான தரவு புள்ளிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. 2.16 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் சரிபார்க்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒரு கிராம பிரதான் (sarpanch) அல்லது வார்டு உறுப்பினர் கூட (சில ஆதரவுடன்) தங்கள் கிராம பஞ்சாயத்து ஒன்பது LSDGs-களுடன் தொடர்புடைய இடத்தை மட்டுமின்றி, அவற்றை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. 11,000 கிராம பஞ்சாயத்துகளின் தரவுகள் பஞ்சாயத்து மேம்பாட்டு குறியிட்டில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி சரிபார்க்கப்படவில்லை. ஏறக்குறைய 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% கிராமப்புற கிராமங்களின் சரிபார்க்கப்பட்ட தரவை வழங்கியிருந்தாலும், உத்தரப் பிரதேசம் 57,702 கிராமப்புற கிராமங்களில் 23,207 கிராமப்புற கிராமங்களுக்கு 40% மட்டுமே தரவை வழங்கியது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த விடுபாடு உ.பி.யில் வளர்ச்சியின் நிலை குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது. இந்த விடுபட்ட தன்மை உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (www.pai.gov.in) தரவுத்தளம் துறை அதிகாரிகளுக்கு ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்படும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குறிப்பிட்ட உள்ளூர் நிலையான வளர்ச்சி இலக்கு (Local Sustainable Development Goal  (LSDG)) மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், தொகுதி வாரியான அறிக்கை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


உண்மையான முடிவுகளைக் காட்ட இப்போது தரவு பயன்படுத்தப்படுவது ஒரு பெரிய மாற்றமாகும். உதாரணமாக, ஒரு கிராம பஞ்சாயத்து உண்மையிலேயே ஆரோக்கியமானதா? ஆரோக்கியமான பஞ்சாயத்து குறிகாட்டிகளில் கிராம பஞ்சாயத்துக்கு கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில், இப்போது குறைபாடுகளை எளிதாக கண்டறிந்து குறுகிய காலத்தில் சரிசெய்ய முடியும். மேலும், தனிநபர், சமூகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையின் முன்களப் பணியாளர்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பும் தெளிவாக வெளிப்படத் தொடங்கும். கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற வளர்ச்சித் துறைகளின் முன்களப் பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் குடிமை அமைப்புகள் (civil society organisations (CSOs)) இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருப்பது பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு அளவீட்டில் கிராம பஞ்சாயத்துக்களின் செயல்திறனை மேம்படுத்தும் மிக முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது.


உன்னத பாரத் அபியான் (Unnat Bharat Abhiyan) உடன் இணைக்கப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள குறைந்தது ஐந்து கிராம பஞ்சாயத்துகளின் ஆய்வை மேற்கொண்டு, சமூகத்திற்கு அவர்களின் பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு (Panchayat Development Index (PAI)) மதிப்பெண்ணின் தாக்கங்களையும், அவர்களின் மதிப்பெண்ணை மேம்படுத்த அவர்கள் என்ன செய்யலாம் என்பதையும் விளக்கினால் அது சிறந்ததாக இருக்கும். இந்த நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகள் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுவது, துறை சார்ந்த அதிகாரிகளின் பங்குக்கு மேலதிக ஆதரவு அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி இலக்குகளை  (Sustainable Development Goals (SDGs)) அடைய பெரிதும் உதவும். 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதிகள், மாவட்ட கனிம அறக்கட்டளை (District Mineral Foundation (DMF)) நிர்வகிக்கும் பிரதமரின் கனிமப் பகுதி நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Members of Parliament Local Area Development Scheme (MPLADS)) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Member of Legislative Assembly Local Area Development Scheme (MLALAD)) உள்ளிட்டவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கும் பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு மதிப்பெண் அட்டை தாக்கங்களைக் கொண்டுள்ளது.


பகுப்பாய்வாளர்களின் தேவை


பல்வேறு பங்குதாரர்களுக்கு வழக்கமான அறிக்கை அட்டைகளைத் தயாரித்து வழங்கக்கூடிய பயிற்சி பெற்ற தரவு பகுப்பாய்வாளர்களை தொகுதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து மட்டங்களில் வழங்குவது அவசரத் தேவையாக உள்ளது. ஒன்றிய அரசைவிட, பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நகர்ப்புற உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இதேபோன்ற சாதனை குறியீடு உருவாக்கப்பட வேண்டும். ஒரு அடிப்படை பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு அறிக்கையைத் தொடர்ந்து, கடினமான அடிப்படை வேலைகள் செய்யப்பட்ட பிறகு, வழக்கமான இடைவெளியில் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.



பஞ்சாயத்து மேம்பாடு குறியீடு என்பது கிராம பஞ்சாயத்துகள் (Gram Panchayats (GPs)) மாவட்டங்கள் அல்லது மாநிலங்களின் தரவரிசையைவிட அதிகமானது. இது ஒரு செயல் அழைப்பாகும். மோசமாக செயல்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. நிதிகள் எங்கு செல்கின்றன அல்லது அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன (அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன) என்பதை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அனைத்து பங்குதாரர்களும் தங்கள் முக்கிய பங்கைப் புரிந்துகொள்ளவும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றும் இலக்கை நனவாக்குவதை உறுதிசெய்யவும், சமீபத்திய தரவு காட்சிப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.


சுனில் குமார் கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் வருகை விரிவுரையாளர் மற்றும் புனே சர்வதேச மையத்தின் உறுப்பினர். இவர் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர்.


Original article:
Share: