PLFS-ன் வழிமுறை மற்றும் ஒழுங்குமுறையில் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சிப்பதால், நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் தரவுகள் அவசியமாகும். ஆனால், இந்திய தொழிலாளர் சந்தையில் தற்போதைய தரவு போதுமானதாக இல்லை.
இந்தியாவின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிப்புடன், இது இப்போது தொழிலாளர் சந்தையில் சரியான நேரத்தில் தரவை வழங்குகிறது. PLFS, 2017-ம் ஆண்டு வருடாந்திர கணக்கெடுப்பாகத் தொடங்கியது. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்புகளுக்குப் (Employment-Unemployment Surveys) பதிலாக அமைந்தது.
இதுவரை, PLFS இந்தியாவின் வேலையின்மை குறித்த வருடாந்திர அறிக்கையை வழங்கியது. இது காலாண்டுக்கான புதுப்பிப்புகளையும் வழங்கியதுடன், நகர்ப்புறங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம், ஏப்ரல் மாதத்திற்கான முதல் மாதாந்திர PLFS தரவை ஒன்றிய அமைச்சகம் பகிர்ந்து கொண்டது.
மாதாந்திர அறிக்கைகளுக்கு மாறுவது என்பது கொள்கை மதிப்பீட்டில் ஒரு நல்ல விளைவை உறுதியளிக்கிறது. கடந்த காலத்தில், அதிகாரப்பூர்வ தரவு விரைவாக கிடைக்கவில்லை. இது ஒரு தொற்றுநோயால் ஊரடங்கு அல்லது பணமதிப்பிழப்பு போன்ற நிகழ்வுகளால் வேலையின்மையை எவ்வாறு பாதித்தன என்பதை கணக்கெடுப்பதை முற்றிலும் கடினமாக்கியது.
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (Centre for Monitoring Indian Economy(CMIE)) போன்ற சில தனியார் நிறுவனங்கள் நீண்ட காலமாக மாதாந்திர மற்றும் வாராந்திர தரவை வழங்கி வருகின்றன. இருப்பினும், அவற்றின் தரவு பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
PLFS அதன் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கு அப்பால் பல வழிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்று, மாதிரி வடிவமைப்பு (sample design) மேம்படுத்தப்பட்டு, மாதிரி அளவு (sample size) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று கணக்கெடுப்புக்கான மாதிரி அளவானது இப்போது 2,72,304 குடும்பங்களாக இருக்கும். இது, 2024 டிசம்பர் வரை உள்ளடக்கப்பட்ட மாதிரி குடும்பங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது PLFS-ல் உள்ளடக்கப்பட வேண்டிய மாதிரிக் குடும்பங்களில் 2.65 மடங்கு அதிகமாகும். மாவட்டம் என்பது இப்போது கணக்கெடுப்புக்கான முக்கிய புவியியல் அலகாகும். பெரும்பாலான மாவட்டங்களின் மாதிரிக்கான கருத்துக்கணிப்பு உறுதிசெய்ய, PLFS மாதிரியின் மதிப்பீடுகளை அதிகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும். மேலும், குறிப்பிடத்தக்க வகையில், வருடாந்திர அறிக்கையிடல் காலமானது ஜூலை-ஜூன் மாதத்திற்குப் பதிலாக ஜனவரி 2025-ல் தொடங்கி காலண்டர் ஆண்டை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், சர்வதேச நிறுவனங்களால் பராமரிக்கப்படும் தரவுத்தளங்களில் இந்தியாவின் தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க உதவும்.
PLFS-இன் வழிமுறை மற்றும் ஒழுங்குமுறையில் ஏற்படும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இது உலகளாவிய முதலீட்டாளர்களையும் கவனிக்கத் தொடங்குகிறது. இதற்காக, நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் தரவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்திய தொழிலாளர் சந்தை குறித்த தற்போதைய தரவு போதுமானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் மாத தரவுகள் இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாகக் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில் இது 6.5 சதவீதமாக அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இது 8.7 சதவீதமாக இன்னும் அதிகமாக உள்ளது. மிகவும் கவலையளிக்கும் செய்தியான இளைஞர்களின் வேலையின்மை பற்றியது ஆகும். இந்தியா முழுவதும் 15-29 வயதுடைய இளைஞர்கள் 13.8 சதவீத வேலையின்மையை எதிர்கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் 17.2 சதவீதமாகவும், இளம் நகர்ப்புறப் பெண்களுக்கு 23.7 சதவீதமாகவும் உயர்கிறது.