பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கு முக்கியம். -நீரஜ் அஹுஜா

 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை (Micro, Small and Medium Enterprises (MSME)) இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதம் பங்களிக்கிறது மற்றும் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள சில துறைகளில் இதுவும் ஒன்றாகும்.


பொருளாதாரக் கணக்கெடுப்பு 2024-25 படி, இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 22 சதவீதம் மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை குறு நிறுவனங்கள் - பெரும்பாலும் ஒருவர் நடத்தும் நிறுவனங்கள் ஆகும். இவை குறைந்த லாபம், முறைசாரா மற்றும் பாரம்பரிய துறைகளான தையல், உணவு பதப்படுத்துதல் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் அதிக அளவில் குவிந்துள்ளன. மக்கள்தொகையில் பெண்கள் பாதியாக இருந்தாலும், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களின் பங்கு இந்தியாவில் மிகவும் குறைவு. இது பாலின இடைவெளி மட்டுமல்ல; இது மிகப்பெரிய அளவிலான பொருளாதார வாய்ப்பு இடைவெளியாகும். பெண் தொழில்முனைவோரின் மிகப்பெரிய திறனைத் திறக்காமல் இந்தியா ‘வளர்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை உணர முடியாது.


பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்து, அதிக வருமானம் கொண்ட நாடாக மாறுவதை ஆதரிக்கக்கூடிய மக்கள்தொகை ஈவுத்தொகையின் பங்கைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்தியாவில் நிறைய நம்பிக்கை உள்ளது. இது பெரும்பாலும் இந்திய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றொரு பயன்படுத்தப்படாத இந்திய மக்கள்தொகை உள்ளது. பெண்கள் போதுமான அளவு பங்கேற்காதது ஒரு முக்கிய கரணமாகும்.


பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (WMSME கள்) பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்ல. அவை குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரிக்கவும் உதவுகின்றன. பெண்கள் தங்கள் வருமானத்தில் 90% வரை தங்கள் குடும்பங்களில் மீண்டும் முதலீடு செய்கிறார்கள். ஆண்கள் 30-40% மட்டுமே முதலீடு செய்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது குழந்தைகளுக்கு சிறந்த உணவு, கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இது வலுவான சமூகத்தையும் பொருளாதாரத்தையும் உருவாக்க உதவுகிறது.


பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்ற பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்புகளை அதிகம் உருவாக்குகிறது. இது தொழிலாளர் சந்தையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவுகிறது மற்றும் உயிரியல் பொருளாதாரம், சுற்றுச்சூழல் சுற்றுலா, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற குறைவாக ஆராயப்பட்ட துறைகளில் புதுமைகளை உந்துகிறது. பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பல கிராமப்புற மற்றும் சேவையில்லாத பகுதிகளில் செயல்படுகின்றன. அவை அவசரமான உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்து, நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியைக் குறைக்கின்றன. எனவே, பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனை வெளியிடுவது வெறும் உள்ளடக்கம் மட்டுமல்ல - இது ஒரு தேசிய பொருளாதார கட்டாயமாகும்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பங்களிக்கிறது மற்றும் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் முறையான மூலதனம், சந்தை இணைப்புகள் அல்லது அடிப்படை அங்கீகாரம் பெறுவதில் போராடுகின்றன. 10 சதவீதத்திற்கும் குறைவான பெண் தொழில்முனைவோர் முறையான கடன் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் வணிகங்களை நடத்த தனிப்பட்ட சேமிப்புகள் அல்லது முறைசாரா வழிகளை நம்பி இருக்கிறார்கள். பெண்கள் தலைமையிலான வணிகங்கள் உயர் திருப்பிச் செலுத்தும் விகிதங்கள், குறைந்த கடன் தவணை மற்றும் வேலை உருவாக்கத்திற்கான மகத்தான திறன் ஆகியவற்றை கொண்டுள்ளன என்ற சான்றுகள் இருந்தும் இது நிகழ்கிறது.


சுய உதவிக்குழுக்கள் (self-help groups (SHGs)) மூலம் பெண்கள் ஏற்கனவே கூட்டு நடவடிக்கையை வழிநடத்தும் கிராமப்புற இந்தியாவில், வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளன. ஆனால், நிதியளிப்பு மாதிரிகள், கொள்கைகள் மற்றும் நிறுவன ஆதரவு அமைப்புகள் அவர்களின் லட்சியத்துடன் வளர தவறிவிட்டன. பெரும்பாலான பெண்களுக்கு முறையான கடன் உலகத்தின் அடிப்படை திறவுகோல்களான பிணையம், முறையான வணிக வரலாறுகள் அல்லது கடன் மதிப்பெண்கள் இல்லை. நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை அதிக ஆபத்துடையவையாக பார்க்கின்றன. இதற்கு மாறான சான்றுகள் இருந்தும் இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆழமாக வேரூன்றிய சமூக விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அடிக்கடி அவர்களின் இயக்கம், முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் பொது தெரிவுநிலையை தடுக்கின்றன. பெண்களின் பொருளாதார செயல்பாடு பெரும்பாலும் தொழில்முனைவோர் (entrepreneurial) என்பதற்குப் பதிலாக துணை (supplemental) என்று பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோரை ஆதரிக்க பல அரசு திட்டங்கள் உள்ளன. அவை கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (Rural Self Employment Training Institute (RSETI)), தொடக்க கிராம தொழில் முனைவோர் திட்டம் (Start Up Village Entrepreneurship Programme (SVEP)), பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma) மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister Employment Generation Programme (PMEGP)) போன்ற திட்டங்கள் ஆகும். ஆனால், பெரும்பாலானவை பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவை பெரும்பாலும் தனித்தனியாக வேலை செய்கின்றன. மேலும், பயிற்சி அல்லது ஒரு முறை நிதி போன்ற வரையறுக்கப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் வணிக யோசனையைக் கண்டுபிடிப்பதில் இருந்து திறன்கள், ஆலோசனை, பணம் மற்றும் சந்தைகளுக்கான அணுகல் வரை ஒவ்வொரு படியிலும் பெண்களை வழிநடத்தும் முழுமையான ஆதரவு அமைப்பு இல்லை. இந்தியாவின் பெரும்பாலான பெண்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் சவால்கள் இன்னும் அதிகமாக உள்ளன.


நேர்மறையான பக்கத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் பல புதிய திட்டங்களும் அணுகுமுறைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அவை ஒரு சிக்கலை மட்டும் சரிசெய்யவில்லை. மாறாக தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு முழுமையான ஆதரவு அமைப்புகளை உருவாக்க முயற்சிக்கின்றன. பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்களால் நடத்தப்படும் வணிகங்கள் கிராமப்புற இந்தியாவை பெரிய அளவில் அமைதியாக மாற்றத் தொடங்குகின்றன. பல ஆண்டுகளாக பெண்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, பெண்கள் தலைமையிலான தொழில்கள் செழித்து வளர்வதற்கு அடித்தள ஆதரவை வழங்கத் தயாராக இருக்கும் வலுவான மகளிர் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்தக் குழுக்கள் வணிகத்தில் பணிபுரியும் பெண்கள் குறித்து சமூகத்தில் உள்ள மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை மாற்ற உதவுகின்றன, பெண்கள் தொழில்களைத் தொடங்குவதை எளிதாக்குகின்றன. பல மக்களிடையே ஆபத்துகளையும் செலவுகளையும் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் பெண்கள் ஏற்கனவே அறிந்தவர்களுடன் பணிபுரியும் பாதுகாப்பை வழங்குகின்றன. பல பெண்களுக்கு, இந்த குழுக்களில் சேருவதுதான் அவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குவதற்கான ஒரே சாத்தியமான வழியாகும்.


அதேபோல், மத்தியப் பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் மற்றும் ஊரக இந்தியாவை மாற்றுதல் (Transform Rural India (TRI)) ஆகியவற்றால் தொடங்கப்பட்ட நாரி அதிகார் கேந்திரா திட்டம் (Nari Adhikar Kendra (NAK)), கிராமப்புற பெண்கள் தங்கள் வணிகங்களுக்கு உதவி பெறும் முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. இது பெண்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து வழிகாட்டுதல், அவர்களின் வணிக யோசனைகளை வளர்ப்பதில் உதவி, புதிய திறன்களில் பயிற்சி மற்றும் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான தொடர்புகள் உள்ளிட்ட முழுமையான ஆதரவு அமைப்பை வழங்குகிறது. முதலில் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்த பல பெண்கள் இப்போது தங்கள் வணிகங்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து, பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர்.


டிஜிட்டல் புதுமைகள் விதிமுறைகளை மறுவரையறை செய்கின்றன. ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) போன்ற தளங்கள், பாரம்பரிய சில்லறை உள்கட்டமைப்பு தடைகள் இல்லாமல் பெண்கள் வாடிக்கையாளர்களை அடைய உதவுகின்றன. மன் தேஷி மற்றும் ரங் தே ஆகியவை பெண்களுக்கு உகந்த வங்கி மாதிரிகளை முன்னெடுத்துள்ளன — இவை வெறுமனே கடன் வழங்குவதோடு நிற்காமல், பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை இணைப்புகளுடன் ஆதரவு அளிக்கும் தொழில்நுட்ப தளங்களாக உள்ளன.


தனியார் நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) முதலீட்டாளர்களுக்கான வழக்கு வலுவாக உள்ளது. இந்தியாவின் CSR சட்டங்களுக்கு நன்றி, நிறுவனங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 கோடிக்கு மேல் வழங்குகின்றன. ஆனால், இந்தப் பணத்தில் பெரும்பகுதி, பெரும்பாலும் நகரங்கள் அல்லது அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பான, குறைந்த ஆபத்துள்ள திட்டங்களுக்குச் செல்கிறது. இந்திய தொண்டு அறிக்கை 2023 (பெயின் & தஸ்ரா) மற்றும் சத்வாவின் இந்தியாவில் சமூக பொறுப்புணர்வு நிலை போன்ற அறிக்கைகள், நிறுவனங்கள் பாதுகாப்பான, பழக்கமான மற்றும் புகாரளிக்க எளிதான சமூக பொறுப்புணர்வு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்ற தொடர்ச்சியான போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


இந்தியா $5 டிரில்லியன் பொருளாதாரமாகவும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா ஆகவும் மாறுவதில் தீவிரமாக இருந்தால், பெண்கள் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSME)) விளிம்பு நிலைகளில் இருந்து முன்னேற்ற பாதைகளை நோக்கி செல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு ஏற்கனவே தெரியும். கேள்வி என்னவென்றால், நாம் செயல்பட தயாராக இருக்கிறோமா? என்பது தான்.



Original article:

Share: