​நியாயமான பங்கு: பகிரக்கூடிய வரி வசூல் தொகுப்பு குறித்து..

 மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளக்கூடிய (divisible pool) வரி வசூல் தொகுப்பு 41% பங்கை தக்க வைத்துக்கொள்வது நியாயமற்றது.


11-வது நிதி ஆணையத்தின் (Sixteenth Finance Commission (SFC)), நிதிப் பகிர்வு குறித்த பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது ஆணையம் ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. தலைவர் அரவிந்த் பனகாரியா சமீபத்தில் 28 மாநிலங்களில் 22 மாநிலங்கள், பல பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட, பிரிக்கக்கூடிய வரித் தொகுப்பில் தங்கள் பங்கை 41%-லிருந்து 50%-ஆக அதிகரிக்கக்  கோரிக்கை விடுத்துள்ளன- இது ஒரு நியாயமான கோரிக்கை என்று குறிப்பிட்டார். இதற்கிடையில், ஒன்றிய அரசு அதன் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத கூடுதல் வரிகள் (cesses) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (surcharges) மூலம் கிடைக்கும் வருவாயைக் கடுமையாக அதிகரிப்பதன் மூலம், பிரிக்கக்கூடிய தொகுப்பைக் குறைத்துள்ளது. இவை 2015-16 முதல் 2019-20 வரை மொத்த வரி வருவாயில் 12.8% ஆக இருந்தன. 2020-21 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 18.5%-ஆக உயர்ந்துள்ளது. 2020-21 முதல் 2023-24 வரை ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு சராசரியாக 31%-ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளில் 35%-ஆக இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இது மாநிலங்கள் தங்கள் சொந்த வருவாயை உயர்த்துவதற்கான விருப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மாநிலங்கள் ஒன்றிய அரசின் பரிமாற்றங்களை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மேம்பட்டிருந்தாலும், மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரங்கள் குறைவாக இருப்பதன் சிக்கலை அவை தீர்க்கவில்லை. கூடுதலாக, மக்கள்தொகை மற்றும் வருமான தூரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கிடைமட்ட அதிகாரப் பரவலாக்கத்திற்கான (horizontal devolution) தற்போதைய சூத்திரம், பொருளாதார ரீதியாக முன்னேறிய தென் மாநிலங்கள் செயல்திறன் மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை நியாயமற்ற முறையில் தண்டிப்பதாகக் கருதுகின்றன.


தற்போதைய நிலையை பராமரிப்பது, பாஜக தலைமையிலான அரசு வலியுறுத்திய கூட்டுறவு கூட்டாட்சி என்ற கருத்துக்கு எதிராகவும், பொதுவான மனப்பான்மைக்கு மாறாகவும் இருக்கும். திரு. பனகாரியா, 50% என்ற திடீர் ஒன்பது புள்ளி உயர்வு “பல தரப்பினரையும் பாதிக்கும்” என்று குறிப்பிட்டார். இதனால், பாதுகாப்பு மற்றும் மூலதன-தீவிர திட்டங்களுக்கான செலவு அதிகரிப்பால் ஒன்றிய அரசு தனது பங்கை குறைக்க தயங்கும் என்று அவர் கூறினார். இதன் விளைவாக, நிதி ஆணையம் மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குறைவாகவே விரும்பும், மேலும் இதுவே செங்குத்துப் பகிர்வு பங்கை 41%-ஆக மாறாமல் வைத்திருக்கும் காரணத்தையும் விளக்குகிறது. இருப்பினும், இவ்வாறு செய்வது ஒரு புதிய கூட்டாட்சி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு ஒரு தவறவிடப்பட்ட வாய்ப்பாக இருக்கும். செங்குத்து பகிர்வில் மிதமான உயர்வு, மாநிலங்களின் கோரிக்கைகளை பாதியளவு பூர்த்தி செய்யும் வகையில், ஒரு வரவேற்கத்தக்க சமிக்ஞையாக இருக்கும். நிதி ஆணையம், செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் (சர்சார்ஜ்) தன்னிச்சையான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையை பரிந்துரைக்க வேண்டும்; ஒருவேளை அவற்றை ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் மட்டுப்படுத்தி, மீதமுள்ள தொகையை பகிர்வு கூடத்தில் சேர்க்கலாம், என சிலர் பரிந்துரைத்துள்ளனர். மாநிலத்தின் தேவைகள், அதன் பரப்பளவு, மற்றும் அதன் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே மிகவும் நியாயமான சமநிலையை உருவாக்க, கிடைமட்ட பகிர்வு அளவுகோல்களை நிதி ஆணையம் மென்மையாக சரிசெய்ய வேண்டும். நிதி ரீதியாக புத்திசாலித்தனமான மற்றும் கூட்டாட்சி அமைப்பின் அடித்தளமான மாநிலங்களை வலுப்படுத்தும் ஒரு சூத்திரத்தை உருவாக்குவது அவசியமாகும்.



Original article:
Share: